மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 65 நாள்

நம்முடைய பொறுப்பு - தேவனுடைய பொறுப்பு

சரியாக வாழ, ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு “பொறுப்பு” உண்டு. திருவசனத்தைக் கேட்டு அதன்படி செய்கிறவர்களாயிருக்கவேண்டும். கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு நாம் கவனமாக வாழக் கற்றுக்கொண்டு, நாம் வாழும் உலகத்தில், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறோம். நீங்களும், நானும், நம்முடைய ஆவியிலே அனுமதிக்கும் காரியங்களைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும். அதன் அடிப்படையில், நம்முடைய வாழ்க்கையை ஜாக்கிரதையாய் வாழவேண்டும். நீதிமொழிகள் 4:23 இப்படியாக கூறுகிறது, “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” நாம் ஏனோதானோவென்று கவலையீனமாக வாழாமல், எல்லா ஜாக்கிரதை யோடும் வாழவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் எதைப் பார்க்கிறோம், எதைக் கேட்கிறோம், எதை சிந்திக்கிறோம், நம்முடைய நண்பர்கள் யார், இதைக்குறித்தெல்லாம் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மனுஷீக சட்டதிட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், அடிப்பணிந்து வாழவேண்டும் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் அலங்காரம் செய்யக்கூடாது என்றும், கழுத்திலிருந்து கணுக்கால்வரை வெள்ளையங்கி அணிய வேண்டும் என்றும் சிலர் சொல்வார்கள். இது அடிமைத்தன சட்டதிட்டத்திற்கும் அதிகமானதாகும். அநேக ஆண்டுகளாக, தேவனோடு ஏதோ சட்டப்படி உள்ள உறவுதான் எனக்கிருந்தது, அது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இதன் விளைவாக, கடைசியில், சட்ட திட்டங்களையே நான் போதிக்க விரும்பினேன். நான் என்ன சொல்லு கிறேன் என்றால், மனுஷீக சட்டதிட்டங்களுக்கு நாம் ஒத்துப்போகக் கூடாது. நாம் விசுவாசிகளாக, நம்முடைய பொறுப்பை உணர்ந்து நம்முடைய வாழ்க்கையை வாழும்போது; அவிசுவாசிகள், நம்முடைய வாழ்க்கையைப் பார்த்து கவரப்பட்டு தேவனிடம் வரவேண்டும்.

யாக்கோபு 4:17 இப்படி கூறுகிறது, “ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்கு பாவமாயிருக்கும்.” இன்னொரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், ஒரு காரியம் தவறு என்று நாம் உணர்த்தப்பட்டால், அதை நாம் செய்யக் கூடாது. ஒருவேளை, ஏன் நூறு பேர் கூட அதே தவறைச் செய்து கடந்து போயிருந்தாலும், விரைவில், அல்லது பிற்பாடு, நாமனைவருமே எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம்.

கவலைப்படுவதும், ஆதங்கப்படுவதும் ஒரு நல்ல விசுவாசியின் குணாதிசயம் அல்ல என்பதை, நாமனைவரும் அறிந்திருக்கிறோம். இருந்தும், நிறைய விசுவாசிகள் கவலைப்படுகின்றனர். நாம் கவலைப் படவோ; அல்லது கவலைப்படாமல் சந்தோஷத்துடனும், சமாதானத்துடனும் இருக்கவோ தீர்மானிக்கலாம். இந்த செய்தியை கேட்க அநேகருக்கு விருப்பமில்லை. கவலை, தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு மேற்பட்டது என்று நினைப்பதில், அவர்களுக்கு ஒரு விநோதமான ஆறுதல். ஆனால், அது அப்படியல்ல. கவலை என்பது தேவனுக்கு விரோதமான பாவம்.

நான் என்னுடைய சபைக்கு சென்றபோது, ஒருவரும் இப்படிப்பட்ட காரியத்தை எனக்கு சொன்னதேயில்லை. ஆனால், அது பாவம்தான். அது தேவனைப் பொய்யராக்குவது போல் உள்ளது. தேவனால் உங்கள் தேவைகளை, போதுமான அளவு சந்திக்கமுடியாது என்று அது சொல்வது போல் உள்ளது.

விசுவாசம், “தேவனால் கூடும்,” என்று சொல்லுகிறது. ஆனால் கவலையோ, “தேவனால் எனக்கு உதவி செய்ய முடியாது,” என்று சொல்லுகிறது.

நீங்கள் கவலைப்படும்போது, தேவனைப் பொய்யராக்குவது மட்டுமின்றி, பிசாசானவன் உங்கள் மனதை அங்கலாயப்புகளால் நிறைக்க, நீங்கள் அனுமதிப்பது போலாகும். நீங்கள் பிரச்சனைகள்மேல் எந்த அளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவு அவை பெரிதாக தோன்றும். நீங்கள் உடனே பதறுதலோடு, வேதனையில் முடிவடைவீர்கள்.

அப்போஸ்தலனாகிய பவுலில் வார்த்தையை நினைத்துப்பாருங்கள். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13). அல்லது, சங்கீதக்காரனுடைய வார்த்தையை சிந்தித்துப் பாருங்கள்; “உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங்கீதம் 37:5).

ஆரம்பத்தில் நாம் பார்த்த வசனத்தில் உள்ளதுபோல, இயேசு தன்னுடைய சீஷர்களிடத்தில், நாளைக்காக கவலைப்படாதிருங்கள் என்று சொன்னார். அவர் அதை சொன்னது மாத்திரமல்ல, தானும் வாழ்ந்து காட்டினார். “அதற்கு இயேசு: நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்து பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்” (மத்தேயு 8:20). அது ஒரு புகார் அல்ல, அவர் வாழ்ந்த வாழ்வின் உண்மை நிலை. தான் எங்கே தூங்கப்போகிறோம், சாப்பிடப் போகிறோம் என்று அவருக்கு தெரியாவிட்டாலும், பிதா தனக்கு அவைகளைத் தருவார் என்று விசுவாசித்தார்.

நம் வாழ்க்கையில் நாம் ஒன்றுக்கும் கவலைப்படக்கூடாது என்று, இயேசு போதித்தார். ஏதோ திட்டங்களை தீட்டி, எல்லாவற்றையும் முன்னதாக சிந்தித்து செயல்படுவதைக் குறித்து இயேசு இங்கு சொல்ல வில்லை. சிலர் பயத்தினால், ஒன்றும் செய்யாமல் இருப்பதைக் குறித்து சொல்லுகிறார். ஒவ்வோறு திட்டத்திலும், பத்து காரியங்களாவது தவறிப்போகும் என்று; பயப்படுகிறவர்கள், உங்களுக்கு சொல்லுவார்கள். ஆனால், நீங்கள் கவலையற்ற, நிம்மதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். என்ன நடக்குமோ என்று நீங்கள் கவலைப்படும் போது, தேவன் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்வதை தடுக்கிறவர்களாயிருப்பீர்கள்.

ஒரு தம்பதியர், தங்கள் மகளுக்கு பயங்கர வியாதி என்று மருத்துவரால் சொல்லப்பட்டபோது, அது காப்புறுதி தரப்பீட்டிற்குள் வராததால், மருத்துவ செலவுகளை சந்திக்க அந்த பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல், தங்கள் படுக்கையறைக்குச் சென்று நீண்ட நேரம் ஜெபித்தனர். அதன் பிறகு அந்தக் கணவர், “இது எளிய காரியம். நான் தேவனுடைய ஊழியக்காரன். என்னுடைய பொறுப்பு என் எஜமானுக்கு ஊழியம் செய்வது. என்னைப் பார்த்துக்கொள்வது அவருடைய பொறுப்பு,” என்று சொன்னார்.

அடுத்த நாளே, அவர்களுடைய மகளை ஒரு சோதனை, அல்லது ஆராய்ச்சி அறுவை சிகிச்சைக்குத் தாங்களே எல்லா பணத்தையும் கட்டி செய்யப்போவதாக மருத்துவர் சொன்னார். “ஆண்டவர்தான் இதற்கு பொறுப்பு இல்லையா,” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் அவருடைய மனைவி. எப்பொழுதும், எல்லா நேரத்திலும் உண்மையாய் இருந்து, தேவன் பேரில் விசுவாசம் வைத்த அவர்களின் சாட்சி, எவ்வளவு மேன்மை யானது! தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. அவர் ஒருவருக்கு செய்ததை, மற்றவருக்கு செய்யாமல் இருக்கமாட்டார் (ரோமர் 2:11ஐ பார்க்கவும்). நீங்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தேவனை விசுவாசிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.


ஆண்டவரே, கவலை என்பது உமக்கு விரோதமான பாவம். எல்லா கவலைகளையும், அங்கலாய்ப்புகளையும் மேற் கொண்டு, நீரே என் தேவைகள் ஒவ்வொன்றையும் சந்திக்கிறவர் என்று உம்மை விசுவாசிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 64நாள் 66

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/