மனதின் போர்களம்மாதிரி
மேன்மையான காரியங்கள்
பிசாசானவன், விடாமல் நம்முடைய மனதிலே போர்தொடுத்து, போராடிக்கொண்டேதான் இருக்கிறான். நம்முடைய ஆவிக்கும், சரீரத்திற்கும் இடையில்தான்; நம்முடைய ஆத்துமா, தொட்டு உணரக்கூடிய ஒரு பகுதியாக, தேவன் நமக்குள் வாசம் செய்கிற பகுதியாக இருக்கிறது. நம்முடைய ஆத்துமா, நம்முடைய சிந்தனை, விருப்பம், உணர்வுகள் போன்றவற்றால் உண்டாக்கப்பட்டதாகும். நாம் என்ன நினைக்கிறோம், நமக்கு என்ன வேண்டும், நாம் எப்படி உணருகிறோம் என்று அது நமக்கு சொல்லும். நம்முடைய மனது; தொடர்ந்து கவலை, ஆதங்கம், மற்றும் அங்கலாய்ப்புகளால் நிறையும்போது, நமக்குள், தேவனால் அருளப்பட்ட குரல், உள்நோக்கம், புரிந்துகொள்ளுதல் எல்லாம் அப்படியே மூழ்கடிக்கப்பட்டுவிடும். இப்படிப்பட்ட நிலையற்ற நிலையில், நாம் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்று தேவனுடைய சித்தமே நமக்கு தெரியாமற் போய்விடும்.
தேவனுடைய ஆவியானவரைப் பின்பற்றாமல்; பிசாசு நம்முடைய மனதை, கவலைகளாலும், அங்கலாய்ப்புகளாலும் நிறைத்து, ஆவியானவரின் நடத்துதலை விட்டு விலகி, நம்மை வேகமாக கடந்து செல்ல வைத்தால்; நாம் மாம்சத்தின்படிதான் வாழுவோம். அதுவும் கர்த்தருடைய சித்தத்திற்கு புறம்பாக நம்மை வைக்கும். ரோமர் 8:8, இதைத்தான் நமக்கு சொல்லுகிறது. “...மாம்சத்துக்குட்பட்டவர்கள், தேவனுக்கு பிரியமாயிருக்க மாட்டார்கள்.” இதனால், தேவன் நம்மில் அன்புகூரவில்லை என்று அர்த்தமாகாது. அவர் நம்மேல் திருப்தியாக இல்லை, நம்மை, நம்முடைய மாம்ச சுபாவத்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றுதான் அர்த்தமாகிறது.
நம்மைக்குறித்தும், நம்முடைய தேவைகளைக் குறித்தும் தேவன் கரிசனையுள்ளவராக இருக்கிறார். பிசாசின் முடிவில்லாத பொய்களையும், சோதனைகளையும், நாம்தான் கடுமையாக எதிர்த்து நிற்கவேண்டும். கடைசியாக, போதும் இந்த சமாதானமற்ற வாழ்க்கை, என்று ஒரு காலத்தில், நான் வெறுப்போடு இருக்கும்போது, எதையாவது செய்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், “ஜாய்ஸ், நீ இன்னும் ஆழமான அளவில், ஆவிக்குரிய வாழ்க்கையை வாழவேண்டும்,” என்று தெளிவாக பதிலளித்தார்.
நாம் பரிபூரண ஜீவனைப் பெறவும்; அதை அனுபவிக்கவுமே இயேசு நமக்காக மரித்தார். எனக்கு இது வேண்டும், அது தேவை என்று நாம் நம்முடைய காரியங்களுக்காகவே கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்ற ஆரம்பிப்போம். இதுதான் கவலைக்கு எதிரான செய்தி. ஒருவேளை, உங்களுடைய உணவு, வேலை, சரியான உடை, பிள்ளைகளுக்கென சிறந்த பள்ளிகள், உங்கள் வருங்காலம், அல்லது குடும்பத்தின் எதிர்காலம் என்று இவைகளைப் பற்றியே நீங்கள் கவலைப்படுவீர்கள். ஆனால், இவைகளை எல்லாம் தேவன் அறிவார், அவர் பார்த்துக் கொள்வார். “ஆண்டவருக்கு உன் மேல் கரிசனை இல்லை. அவர் உன் மேல் அக்கறையுள்ளவராக இருந்தால் நீ இப்படிப்பட்ட குழப்பத்தில் இருப்பாயா” என்று பிசாசு தந்திரமாக மேல்லச் சொல்லுவான்.
நமக்கு ஒன்றும் இல்லை - என்பதிலேயே நாம் கவனம் செலுத்தும் போது - மற்றவர்களைப் பார்க்க நமக்கு மனமே இருக்காது. அவர்களுக்கு உதவி செய்யவும் நம்மால் முடியாது. நாம் நம்முடைய வேலையை இழந்து விடுவோமோ, நம்முடைய செலவுகளை சந்திக்க போதுமான பணம் உண்டோ என்று பயந்து கவலைப்படும்போது, நம்மால் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து உதவவே முடியாது. தேவன் என் தேவைகளை யெல்லாம் சந்திப்பார் என்று அவரை விசுவாசிக்கும்போது, நாம் நிம்மதியாக, தாராளமாக, மற்றவர்களுடன், நமக்குள்ளதை பகிர்ந்துகொள்ளுவோம்.
உங்கள் சொந்தத் தேவைகளுக்காக கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தேவனுடைய வார்த்தையை நோக்கிப்பார்க்க உங்களை உற்சாகப் படுத்துகிறேன். பின்வரும் பகுதியை, நீங்கள் வேண்டுமானாலும், நீங்களே கேட்கும்படி சத்தமாக சொல்லுங்கள், “ஆண்டவர் என் மேல் அன்புள்ளவராக இருக்கிறார். அவருடைய அன்பினின்று ஒன்றும் என்னை பிரிக்க முடியாது. அவர் என்னுடைய பாவ அறிக்கையை கேட்டிருக்கிறார், என்னை மன்னித்து சுத்திகரித்தும் விட்டார். தேவன் ஒரு நல்ல முற்போக்கான திட்டத்தை அவருடைய வார்த்தையின்படி என் வாழ்க்கைக்காக வைத்திருக்கிறார் (ரோமர் 8:38, 39 ; 1 யோவான் 1:19 ; எரேமியா 29:11).
எப்பொழுதெல்லாம் கவலையும், அங்கலாய்ப்பும் வந்து, உங்கள் நீதி, சமாதானம், மகிழ்ச்சி ஆகியவற்றை திருட வருகிறதோ; அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்று கண்டுபிடித்து, உங்கள் வாயைத் திறந்து, அந்த வசனங்களை அறிக்கையிடுங்கள். ஆண்டவருடைய இறுதி நோக்கம் என்ன தெரியுமா? என்ன நடந்தாலும், நாம் அமைதியாக இருக்கும் நிலைக்கு நம்மைக் கொண்டு செல்வதுதான். யார் நம்மை அமைதியாக வைத்திருக்கப்போவது? பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக நடப்பிக்கும் கிரியை தான். பிசாசின் பொய்களை எதிர்க்க, நாம் அவரிடம் ஓடி, கிருபையை பெற்றுக்கொள்ளும் பழக்கத்திற் குள்ளாக நாம் வருவதையே, தேவன் விரும்புகிறார். கடைசியில் சத்தியம் தான் ஜெயிக்கும், நம்முடைய வாழ்க்கையும் மாறும்!
என் பரலோக பிதாவே, என் மேல் கரிசனையுள்ளவராக என் தேவைகளையெல்லாம் எனக்குத் தருவேன் என்று வாக்களித்திருக்கிறீரே, உமக்கு நன்றி. நான் அடிக்கடி கவலைப்பட்டு, எனக்குள் இருக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் இழந்து விடுகிறேன். சின்ன சின்ன காரியங்களில் கூட என் கவனத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறேன். என்னைக்கட்டும் காரியங்களில் இருந்து என்னை விடுவியும் அப்பொழுது நான் விடுதலையோடு உம்மை ஆராதிக்கவும் உமக்கு ஊழியம் செய்யவும் முடியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/