மனதின் போர்களம்மாதிரி
கவலைப்படும் மனங்கள்
“கவலை” என்ற வார்த்தைக்கு - அமைதியற்ற, தொல்லை, இடர்பாடு, ஏக்கம், துயரம், துன்பம், வருத்தம் என்ற உணர்வுகள்தான் விளக்கம். மற்றொரு விளக்கத்தையும் நான் கேட்டிருக்கிறேன், அதாவது “குழப்பமான சிந்தனைகளினால் தங்களைத் தாங்களே வேதனைக்குட்படுத்திக் கொள்வது”. இந்த இரண்டாவது விளக்கத்தைக் கேட்டவுடனே, என்னை நானே வேதனைப்படுத்திக்கொள்வதா; என்று புத்திசாலித் தனமாக அப்படிப்பட்ட காரியத்தை செய்யக்கூடாது என்று தீர்மானித்தேன். நம்முடைய வாழ்க்கையிலே, தேவனுடைய அழைப்புக்கு விரோதமாக செயல்படுபவைதான் இந்த கவலை, குழப்பம் மற்றும் ஏக்கங்கள்.
அநேக மக்கள் இந்த கவலைக்கு அடிமையாகி இருக்கின்றனர் என்பது வருந்தத்தக்க விஷயம். எனக்கு ஒரு நண்பரைத் தெரியும். அவர் காரணமின்றி எல்லாவற்றிற்கும் கவலைப்படுவார். அவருடைய தாய் அவருக்கு கவலைப்படக் கற்றுக்கொடுத்ததாக ஒத்துக்கொண்டார். அவருடைய தாய் கவலைப்படாமல் இருந்த நேரத்தை, அவரால் ஞாபகப் படுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ நடந்து முடிந்த, நடக்கும், நடக்கப் போகிற காரியங்கள் என்று எல்லாவற்றிற்காகவும் கவலைப்பட்டாள். எனக்கு நினைவுக்கு வருகிறது, ஒரு காலத்தில் நானும் ஒத்துக்கொள்ளு கிறேன்; எனக்கு கவலைப்பட எதுவும் இல்லாவிட்டால், மற்றவர்களுடைய பிரச்சனைகளுக்காக நான் கவலைப்படுவேன்.
மன சமாதானத்துடன் வாழ்வது என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது. அதே நேரத்தில், கவலையுடனும், சமாதானத்துடனும் ஒரே நேரத்தில் வாழமுடியாது என்பதைக்குறித்தும் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. ஆனாலும், அதிக மக்கள் அடிக்கடி இரண்டையும் செய்ய முற்படுவதையும் கண்டிருக்கிறேன்.
அவர்கள் கவலைப்படுவதில் கைத்தேர்ந்தவர்கள். அதனால், அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எப்படி வித்தியாசமாக கவலைப்படுவது என்பதை நன்கு அறிந்தவர்கள். ஒரு சிலருக்கு, ஒரு கூட்டத்திற்கு நேரத்திற்கு கிளம்பிச் செல்லவேண்டுமானால், அந்த சின்ன காரியத்திற்கு ஒரே பரபரப்பு. வேறு சிலருக்கு, முதல் முதலில் யாரையாவது சந்திக்கப்போகிறார்கள் என்றால் அதைக் குறித்து அச்சம், அல்லது ஒரு வேலைக்காக நேர்முக தேர்வுக்கு, செல்லும்போது பயம், கலக்கம். “கவலை” என்ற வார்த்தை எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உபயோகிக்கப்படுவதை நான் கேட்கிறேன்.
நாம் “மன வேதனை” என்ற வார்த்தையை பயன்படுத்தினால் என்ன?” “கவலையை,” பிசாசினால் கொண்டுவரப்படும் மனவேதனை, அல்லது சித்ரவதை என்று நினைத்தோமானால்; வேதத்தின்படியான கருத்திற்கு நாம் நெருங்கிவருகிறோம். கடும் துயரம், வலி இவை இரண்டும் மனவேதனையின் பகுதிகளாக இருக்கின்றன. பிசாசு இதைக்கொண்டு தானே வேலை செய்கிறான்? ஆனால், அவன்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை, நாம் கண்டுபிடிக்க முடியாத அளவு செயல்படுகிறான். நம்முடைய அயலகத்தார், பிள்ளைகள், பெற்றோர், நம்முடன் வேலை பார்ப்பவர்கள் என்று மற்றவர்களைப் பழி சொல்ல நம்மை தூண்டுவான். “என்னைத் தனியாக, நிம்மதியாக விடுங்கள்” என்று சொல்லுவோம். மற்றவர்களிடமிருந்தோ, அல்லது ஏதோ சூழ்நிலையின் நிமித்தமாகவோ எதிர்ப்பு வந்தால், ஒன்றும் செய்யமுடியாமல் மனவேதனையோடு வாழுவோம். அப்பொழுது, பிசாசு நம்மை பலியாக்கி, இன்னும் நம் நிலைமையை மோசமாக்குவான்.
அப்போஸ்தலனாகிய யோவான், அன்பைக்குறித்து எழுதும்போது, நாம் மெய்யாகவே நாம் ஒருவரிலொருவர் அன்புகூரும்போது, தேவன் நம்மில் நிலைத்திருக்கிறார், அவருடைய அன்பும் நம்மில் பூரணப்படுகிறது; என்று கூறுகிறார். ஆனால், இதை கவனியுங்கள்: “தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். அன்பில் பயமில்லை; பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல (1 யோவான் 4:16,18).
இந்த வார்த்தைகள் கடுமையான வார்த்தைகளாக இருந்தாலும், காரணத்திற்காக நான் இவைகளை மேற்கோள்காட்டுகிறேன். கவலைப் படுவது, ஒரு சின்ன விஷயம்தான் என்று சாத்தான் உங்களை நம்ப வைத்தால், அதை நீங்கள் முக்கியப்படுத்தி எடுக்கவேண்டாம். “ஓ எல்லாரும் கொஞ்சமாவது கவலைப்படாமல் இருக்கிறதில்லை,” என்று சொல்லித் தள்ளிவிடுங்கள்.
ஆனால், ஒரு உண்மை என்னவென்றால், எல்லோரும் கவலைப்படுகிற தில்லை. கவலை என்பது, பிசாசின் கருவி. விசுவாசியாகிய நீங்கள், அதை அவன் பயன்படுத்தும்போது, பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கவலை என்பது, உங்கள் மனதில் பிசாசினுடைய தாக்குதலாயிருக்கிறது. எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அது நமக்கு செய்து முடிக்காது.
அதைவிட முக்கியமானது, நம்முடைய வாழ்க்கையில் எதைக்குறித்து நாம் அதிக அக்கறை, கரிசனையுள்ளவர்களாக இருக்கிறோமோ, அது நம்முடைய கட்டுப்பாட்டிற்கும் மேற்பட்டது என்பதாகும். நாம் நம்முடைய எதிர்காலத்தை, பிள்ளைகளுடைய திருமணத்தை, அல்லது வேலை செய்யும் கம்பெனியை மூடிவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படலாம். ஆனால், இயற்கையாக நாம் இவற்றைக்குறித்து ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் உங்கள் நேரத்தையும், பலத்தையும், கவலைப்படுவதில் செலவு செய்வதை விட, தேவனுடைய வாக்குத்தத் தங்களை நினைவுப்படுத்த செலவிடுங்கள்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்! (ஏசாயா 20:3).
ஆப்பிரிக்காவிலே, விசுவாசத்தில் நிறைந்த ஒரு மிஷனரி குடும்பத்தார், கவலையை எப்படி மேற்கொண்டார்கள் என்பது ஒரு புது விதமாக இருந்தது. எப்பொழுதாவது, யாராவது கவலைப்பட ஆரம்பித்தால், பெற்றோரும் அவர்கள் மூன்று பிள்ளைகளும் கதவருகே சென்று, கதவை உதைப்பது போல கால்களை வேகமாக அசைத்து, “பிசாசே, எங்கள் வீட்டை விட்டு வெளியே போ. நாங்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள், உன்னை உள்ளே விடமுடியாது,” என்பார்களாம். இது எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்களும், கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை இன்றே பயன்படுத்துங்கள். இன்றே தொடங்குங்கள்.
பரிசுத்த பிதாவே, சின்னசின்ன காரியங்களிலெல்லாம் பிசாசு என்னை வேதனைப்படுத்த, அவனுடைய தந்திரங்கள் புரியாமல், அவனுக்கு இடங்கொடுத்து, கவலையினால் நான் அலைகழிக்கப்பட்டுவிட்டேன், என்னை மன்னியும். இயேசுவின் நாமத்தில் அவனையும், அவன் தந்திரங்களையும் என் வாழ்க்கையை விட்டு உதைத்துத்தள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/