மனதின் போர்களம்மாதிரி
சந்தேகமுள்ள மனம்
நிறையப் பேரைப் போல, “அவிசுவாசம்”, “சந்தேகம்”, இரண்டும் ஒன்றுதான் என்று நான் எண்ணிவந்தேன். ஏனென்றால், ஏறக்குறைய ஒரே சந்தர்ப்பத்திற்கு அந்த இரண்டு வார்த்தைகளையும் நாம் உபயோகிப்பது தான் வழக்கம். சமீப காலத்திலே, அவை இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பதை அறிந்தேன். வெளிப்படையாக சொல்லப்போனால், இவை இரண்டுமே தேவனை மகிமைப்படுத்தாதுதான். ஆனால், அவை எப்படி வெவ்வேறு விதங்களில் செயல்படுகின்றன என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.
“சந்தேகம்” எப்படி வேலை செய்தது என்று காட்ட, எலியாவின் சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மக்கள் அறிந்த தலைவர்களிலே, ஆகாப் ராஜா தான் மிகவும் பொல்லாதவனாயிருந்தான். ஆகாபின் பொல்லாப் பினிமித்தம்; “என்னுடைய வார்த்தையின்படி, மழை பெய்யாது,” என்று எலியா தீர்க்கதரிசி சொன்னான். அடுத்த மூன்றரை ஆண்டுகள், பஞ்சம் தேசத்தை மிகவும் வாட்டியது.
எலியா, தன் வாயினால் உரைப்பதற்கு முன்பு, நல்ல மழை இருந்தது என்பது தெளிவாக விளங்குகிறது. ஆனால் அவன் பேசிய பின், மேகங்கள் மழை கொட்டுவதை விட்டுவிட்டன. அதுவும் தெளிவாக தெரிந்தது. தேவனையோ, அவருடைய தீர்க்கதரிசியையோ, யார் கேள்வி கேட்பான்? ஆகாபிற்கு பயந்ததினாலும், மழை இல்லாத கொடுமையினாலும், ஜனங்களின் மனம் கேள்விகளால் நிறைந்திருந்தது.
கடைசியாக எலியா, ஜனங்களையும், ராஜாவையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கூட்டிச் சேர்த்து எதனால் அவர்கள் “சந்தேகப் படுகிறார்கள்” என்று விசாரித்தான். எதனால் இரண்டு நினைவுகளில் குந்திக் குந்தி நடக்கிறீர்கள்? இதுதான் “சந்தேகம்” என்று அறிந்து கொள்ளுங்கள். “சந்தேகம்” என்பதை, நாம் “அவிசுவாசம்” என்று சொல்லிவிட முடியாது - “நான் விசுவாசிக்கிறேன், ஆனால்...” அல்லது “நான் விசுவாசிக்க விரும்புகிறேன், ஆனால்...”
ஒரு காலத்தில் “விசுவாசம்” வாழ்ந்த இடத்தில், “சந்தேகம்” அவ்வப்போது குடிபுகும். விசுவாசத்திற்கு விரோதமாக மும்முரமாக செயல்பட்டு, விசுவாசத்தைத் தள்ளி விடுவது தான் “சந்தேகமாகும்”. ஜனங்கள் தீர்க்கதரிசியை நம்பினார்கள். ஆனால், மூன்றரை ஆண்டுகள் ஆனதும், கேள்விகளும், நிச்சயமற்ற நிலையும் மனதில் எழும்பின. “எலியா தான் இதை செய்தான் என்றால்; இதை உடனே அவன் நிறுத்த வேண்டும். ஒருவேளை, இது தானாய் நடந்திருக்குமா? இல்லாவிட்டால் அதுதான் தேவனுடைய வார்த்தை என்பதை, நாம் எப்படி உண்மையிலேயே அறிந்துகொள்வது?” இப்படி அவர்கள் கேள்விகளை கேட்டபொழுதே, பிசாசானவனுக்கு தங்கள் இதயத்தைத் திறந்து கொடுத்து விட்டார்கள். அவன் சந்தேகத்தை அவர்கள் மனதில் கொண்டு வந்து விட்டான்.
“சந்தேகம்” ஒருபோதும் தேவனிடத்திலிருந்து வருவதில்லை. அது எப்போதும் அவருடைய சித்தத்திற்கு முரண்பாடானது. ரோமருக்கு எழுதும்போது, (ரோமர்12:3)ல் “நமக்கு அளிக்கப்பட்ட விசுவாசத்தை நாம் பிடித்துக்கொண்டு”, சந்தேகத்தை தள்ளிவிடவேண்டும் என்று அவனவனுக்கு குறிப்பாக கூறுகிறார். நம்முடைய வாழ்வில், தேவனுடைய அற்புதமான கிரியையை விட்டு, நம்முடைய மனதை எடுக்கிற நிச்சயமற்ற நிலையை, அல்லது “சந்தேகத்தை” எழுப்பும் கேள்விகளை நாம் புறம்பே தள்ளவேண்டும். அப்படி அனுமதித்தால், அதுவே, பிசாசானவன் மெல்ல, தந்திரமாக நுழையும் வாயிலாக அமையும். அவன் சந்தேகத்தை நம்முடைய மனதில் விதைத்து, அதன் விளைவாக நாம் தேவனை எதிர்ப்போம் என்று நினைக்கிறான். சந்தேகத்தை நாம் லேசாக எடுத்துக் கொள்ளுகிறோம். ஆனால், நாம் ஆண்டவர் சொல்வதற்கு இணங்காமலிருப்பதற்கு இது முதல்படியாகும். அதனால் தான், நாம் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்திருக்கவேண்டும். நாம் மட்டும் தேவனுடைய வார்த்தையை நன்றாக அறிந்திருந்தால், பிசாசின் பொய்களையும், அதன் நிமித்தம் நம்முடைய மனதில் எழும் கேள்விகளையும் இனம் கண்டு விடலாம்.
ஜனங்கள் இப்படியும், அப்படியுமாக இரு நினைவுகளால், “சந்தேகம்”, “அவிசுவாசம்” என்று அலைபாய, எலியா அவர்களை விடாமல் இருந்தான். அவன் மிகவும் தெளிவாக, கர்த்தர் தெய்வமானால் அவரை பின்பற்றுங்கள். பாகால் தெய்வமானால், அவனை பின்பற்றுங்கள் என்று அவர்களை தெரிந்துகொள்ளச் சொன்னான்.
நீங்கள் “சந்தேகம்” நிறைந்தவர்களாக, தேவனை நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லி கண்ணியில் சிக்கிக்கொள்ள வேண்டாம். உண்மையான விசுவாசத்தை பற்றிக்கொண்டவர்களாக, “கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்; ஒருவேளை எனக்கு இது புரியாமல் இருக்கலாம், ஆனாலும், நான் உம்மை நம்புகிறேன்,” என்று சொல்லுங்கள்.
நிஜமான உண்மையுள்ள தேவனே, கடந்த காலத்திலே, நான் பெலவீனமுள்ளவளாக, பிசாசுக்கு இடங்கொடுத்தபடியால் உம்மையும், உம்முடைய அன்பையும், என்னுடைய வாழ்க்கைக்கு நீர் வைத்திருக்கும் திட்டங்களையும் குறித்து கேள்வி கேட்க துணிந்தேன். உம்முடைய வார்த்தையை எனக்கு போதியும், என்னை பிசாசு வஞ்சித்து விடாதபடி என்னை பெலப்படுத்தும், எனக்கு மன்னியும். என்னுடைய ஜெபத்தை நீர் கேட்டதற்காக உமக்கு நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/