மனதின் போர்களம்மாதிரி
வார்த்தையின்படி செய்வது
கர்த்தர் தங்களைச் செய்யச் சொல்லும் காரியங்களை நன்கு அறிந்திருந்தும், அதை வேண்டுமென்றே செய்யாமல் இருக்கிற விசுவாசிகளைக் குறித்து; விசுவாசியாகிய எனக்கு நீண்ட நாட்க ளாகவே புரியவில்லை. இயேசுவுக்கு புறமுதுகு காட்டிவிட்டு, இரட்சிப்புக்கும் எனக்கும் வெகுதூரம் என்று சொல்லுகிறவர்களைப் பற்றி நான் பேசவில்லை. சிறுசிறு காரியங்களுக்கு கூட கீழ்ப்படியாமல், அதைப்பற்றி எந்த கலக்கமும் இல்லாமல் வாழுகிறார்களே, அதைப் பற்றிதான் பேசுகிறேன்.
23, 24 வசனங்களில், திருவசனத்தை கேட்டும் அதின்படி செய்யாத வனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்த்து, அவ்விடம் விட்டு போனவுடன், தன் சாயல் இன்னதென்பதை மறந்து விடுவான் என்று யாக்கோபு சொல்லுகிறார். ஆனால், திருவசனத்தைக் கேட்டு அதின்படி செய்கிறவனே, “சுயாதீனப்பிரமாணமாகிய பூரண பிரமாணத்தை உற்றுப் பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே; கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்” (கீழ்ப்படிதலாகிய செய்கை).
கர்த்தருடைய வார்த்தை, விசுவாசிகளை எழும்பி செயல்பட அழைக்கும்போது, அவர்களின் காரணங்களை ஆராயும் பழக்கமானது, அவர்களை கீழ்ப்படிய மறுக்கவைக்கிறது. சத்தியத்தை விட்டு விட்டு, வேறு காரியங்களை நம்புவதில், அவர்கள் தங்களையே வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள். ஆண்டவரை விட புத்திசாலிகள் என்று அவர்களுக்கு நினைப்பு.
தாங்கள் எப்பொழுதும் நன்றாக உணரவேண்டும் என்றுதான் தேவன் தேவன் விரும்புகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்து, அவர்கள் கஷ்டமாக உணர்ந்தால், அது அவர்களுக்கு தேவனுடைய சித்தமில்லை என்று நம்புகிற மக்களை, நான் சந்தித்திருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால், வேதத்தில் அவர்கள் வாசிக்கும் வசனம் ஏதாவது அவர்களை பாதித்தால், உடனே இது பொருந்தாது என்று தள்ளிவிடுவார்கள்.
பவுல், “இடைவிடாமல் ஜெபிக்கும்படி” கொடுத்த ஆலோசனையை (1 தெச 5:17) ஒரு பெண், சுட்டிக்காட்டி; இது அடிக்கடி அவள் ஜெபிக்கும் போதெல்லாம் வருகிறது என்றாள்.
“அதன் அர்த்தம் தான் என்ன?” என்று நான் கேட்டேன். “நமக்கு ஒரு தேவை வரும்போது, அல்லது தேவை வருவதை உணரும்போது; பகல் முழுவதும், ஜெபித்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றாள் அவள்.
அவள் பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “தேவனோடுள்ள உங்கள் ஐக்கியம் எப்படி இருக்கிறது? நீங்கள் வேதத்தை வாசித்து, அதைக்குறித்து ஜெபித்து, நேரத்தை செலவிட தேவன் விரும்புவார் இல்லையா?” என்று கேட்டேன். “எனக்கு நிறைய காரியங்கள் இருக்கு. மணிக்கணக்கான வேதத்தை வாசித்து, ஜெபிப்பவர்களுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். எனக்கு அந்த முறை பொருந்தாது” என்றாள்.
அவளோடு நான் தொடர்ந்து பேசிய போது; அந்த பெண், அவளுடைய வாழ்க்கை முறையின் வசதிக்கேற்ப, கர்த்தருடைய வார்த்தைக்கு அவள் கீழ்ப்படிகிறவள், என்பதை நான் அறிந்துகொண்டேன். அவள் வேதத்தில் வாசிக்கும் வசனம், அவள் வாழும் விதத்திற்கு ஏற்றதாக இல்லாவிட்டால்; தேவன் என்னை இதெல்லாம் செய்ய சொல்லி எதிர்பார்க்கமாட்டார் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள்.
இதற்கு மாறாக, மிகவும் கனத்திற்குரிய, பாரம்பரிய சபைக்கு சென்ற வேறு ஒரு சகோதரியை எனக்குத் தெரியும். அவர்கள் பெந்தகொஸ்தே சபைகளுக்கு சென்றதே கிடையாது. ஆனாலும், அங்கு போடும் சத்தத்தைக் குறித்து அடிக்கடி பேசுவார்கள். ஒரு நாள் நான் பிரசங்கித்த ஆராதனைக்கு வந்து அங்கு மாற்றப்பட்டு, “என்னால் நம்பவே முடியவில்லை, என்னைப் போய் கர்த்தர் கையை தட்டு, சத்தமாக பாடு என்று சொல்லுவார் என்று. சபையார் முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் பார்த்தேன். நீங்களும், வேதாகமத்தில், நாம் கைகளை கொட்டி பாடவேண்டும் என்று கட்டளையிடப் பட்டிருப்பதை பிரசங்கித்தீர்கள். நான் வேறு என்ன செய்ய முடியும்? அது தேவன் என்னோடு பேசிய ஒன்று,” என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.
இவர்களுடைய போக்கு சரியானது. ஏன் கர்த்தர் இவர்களை அப்படி செய்ய சொன்னார் என்று இவர்கள் கேள்வி கேட்கவில்லை. அவருடைய வார்த்தையை விசுவாசித்து, அப்படியே கீழ்ப்படிந்தார்கள்.
வேதாகமம், தேவனுக்கு கீழ்ப்படிவதைக் குறித்து சொல்லும்போது, நம்மை பார்த்து, “முயற்சி செய்துதான் பாருங்களேன்,” என்று ஆலோசனையாக கூறவில்லை. தேவன், நம்மை திருவசனத்தின்படி செய்யும் செயல்வீரர்களாக இருக்க கட்டளையிடுகிறார். நாம் கீழ்ப்படியும்போது, நிச்சயமாகவே நாம் பாக்கியவான்களாயிருப்போம் என்று அவர் வாக்களித்திருக்கிறார்.
அன்புள்ள, பரிசுத்த பிதாவே, உம்முடைய வார்த்தையிலுள்ள போதனைகளுக்காக நன்றி. நான் படிக்கும் வசனங்களெல்லாம் எனக்கு பிடிக்காமல் இருக்கலாம்; அல்லது உம்மை தயங்காமல் பின்பற்ற அவை கடினமாகவும் இருக்கலாம். ஆனால், அது என்னுடைய நன்மைக்கே என்பதை நான் அறிவேன். நான் எப்பொழுதும் உமக்கு கீழ்ப்படிந்து உம்முடைய நாமத்திற்கு கனத்தையும், மகிமையையும் கொண்டுவர எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/