மனதின் போர்களம்மாதிரி
அப்படியே கீழ்ப்படி
அவிசுவாசிகள் அநேகருக்கு, சுவிசேஷம் என்றால் என்னவென்றே புரியாது. இது ஏதோ நம்முடைய நாட்களில் மட்டும்தான் இப்படியிருக் கிறது என்றல்ல. பவுல் கொரிந்தியருக்கு எழுதினபோது, கிரேக்கருக்கு, சுவிசேஷமானது பைத்தியமாக தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இயற்கையான மனதுக்கு அப்படித்தான் தோன்றும். தேவன், இயேசுவான வரை, பாவமில்லாத அவரை; கெட்ட, பாவம் நிறைந்த மக்களுக்காக மரிக்க அனுப்பினார். அவிசுவாசிகளுக்கு, இது பைத்தியமாக தோன்றும். ஜென்ம சுபாவமுள்ள மனுஷனுக்கு, சுவிசேஷத்தின் வல்லமை விளங்காது - அது ஆவிக்குரிய பிரகாரம்தான் பகுத்தறிய முடியும்.
அனுதின வாழ்க்கையிலும், இது உண்மை. தேவன் நம்மிடத்தில் ஒரு காரியத்தை பேசினால், அதை தேவனை அறியாத மக்களிடம் விவரித்து சொன்னால், அது அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக, ஒரு தம்பதியர் ஆப்பிரிக்காவுக்கு மிஷினரிகளாக சென்றனர். அவர்களுக்கு உதவி செய்ய ஏதோ பெரிய சபையோ, நிறுவனமோ ஒன்றும் இல்லை. அவர்களுக்கு இருந்த எல்லாவற்றையும், அவர்கள் திருமணத்தன்று மாற்றிக்கொண்ட மோதிரங்களையும் சேர்த்து விற்றார்கள்.
“என்ன திருமண மோதிரமா?” என்று கேலியாக கேட்டார், உறவினர் ஒருவர். “என்ன, ஆண்டவரால் கொடுக்க முடியாதா? நீங்களே உங்கள் தேவைகளை சந்தித்துக்கொள்ள வேண்டுமா?”
“இல்லை, நாங்கள் இயேசுவுக்கு ஊழியம் செய்வதை முக்கியமாக கருதி, மற்ற சௌகரியங்களை விட்டுக்கொடுக்கிறோம்,” என்று மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள். அந்த தம்பதியர், தாங்கள் எடுத்த முடிவு சரிதான் என்று உறுதியாக இருந்தனர். ஆனால், வந்த உறவினரின் மூளையில், அது அர்த்தமற்றதாக தோன்றியது.
தேவன் பேசுவதைக் கேட்டு, கேள்வி கேட்காமல், அப்படியே கீழ்ப்படிவதற்கு அநேகருக்கு கஷ்டமான காரியம். ஆனால், இயேசுவோ அப்படியே செய்தார். சிலுவையில் மட்டுமல்ல. யோவான் 4ஆம் அதிகாரத்தில், இயேசுவையும், சமாரிய பெண்ணின் சம்பவத்தையும் வாசிக்கிறோம். இந்த காலத்தில் வேதத்தை வாசிப்பவர்களுக்கு, அந்த சம்பவத்தின் ஆரம்பம் விளங்குவதில்லை. “அவர் சமாரியா நாட்டின் வழியாய் போக வேண்டியதாயிருந்தபடியால்” (யோவான் 4:4). இயேசு வானவர் எருசலேமிலிருந்து பிரயாணப்பட்டு, கலிலேயாவின் வடப் பகுதிக்கு செல்ல விரும்பினார். சமாரியா, நடுவில் உள்ள ஒரு இடமாகும். அவர் இந்த வழியாகவும் வரமுடியும். சமாரியாவிற்கு வராமலே, வேறு வழியாகவும் சென்றிருக்க முடியும். யூதர்களில் அநேகர், சமாரியா வழியாக செல்வதை தவிர்த்தனர். ஏனென்றால், சமாரியர் மற்ற தேசத்து மக்களுடன் கலந்து, திருமணம் செய்ததை, யூதர்கள் வெறுத்தனர்.
அது வழக்கத்திற்கு புறம்பான செயலாக இருந்தாலும், இயேசு வானவர் சமாரியாவிற்கு செல்கிறார். இயேசு அங்கு சென்றதின் காரணம் - அந்த சமாரியப் பெண் - அவர் மட்டுமே கொடுக்கக் கூடிய செய்தியை அவள் கேட்டு, மனம் மாறி, தன் ஜனம் முழுவதிற்கும் - முடிவில் அந்த முழுப் பட்டணத்துக்குமே இயேசுவை அறிவித்தாள்.
ஜென்ம சுபாவமுள்ள இயல்பான மனிதர்கள், பரிசுத்த ஆவியானவர் நம் மனதை நிரப்பியிருப்பதை அறியாத மக்கள்; ஒருவேளை நம்மை பார்த்து ஏளனம் புரியலாம். நாம் செய்வதெல்லாம் அவர்களுக்கு முட்டாள்தனமாக தோன்றலாம். ஆனால், நம்முடைய செயல் அவர்களுக்கு புத்தியுள்ளதாக தெரியவேண்டும் என்று யார் சொன்னது? வேதாகமத்தின் நியதி என்னவென்றால், இயற்கையான, மாம்சீக மனம்; ஆவிக்குரியவைகளை புரிந்துகொள்ள மாட்டாது. நிறைய நேரங்களிலே, நமக்குப் புரியாத சிந்தனைகளை நாம் தள்ளிவிடுவதன் மூலம், தெய்வீக ஆலோசனை களை உதாசீனப்படுத்தி விடுகிறோம். பிசாசானவன் நம்முடைய மனதில், மூர்க்கமாக சிந்தனைகளை, வெள்ளம்போல நிறைப்பது உண்மைதான். ஆனால், நாம் ஜெபித்து, பரிசுத்த ஆவியானவருக்கு திறந்த உள்ளத்தோடு நம்மை விட்டுக்கொடுக்கும்போது, அதன் வித்தியாசத்தை, நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.
இராமுழுவதும் வலை வீசி, ஒன்றும் அகப்படாத நிலையிலிருந்த பேதுருவின் சம்பவத்தை யோசித்துப் பாருங்கள். தலைமுறைத் தலைமுறையாக கைத்தேர்ந்த மீனவனாக இருந்தவனுக்கு, இயேசுவாகிய, ஒரு தச்சர் வந்து, “ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்,” என்று சொன்னார் (லூக்கா 5:4).
பேதுரு இயேசுவிடம், ஐயரே இராமுழுதும் நாங்கள் பிரயாசப்பட்டும், ஒன்றும் அகப்படவில்லை என்று விவரித்து சொன்னான். “ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்” என்றான் (வ.5). பேதுரு இராமுழுதும் பிரயாசப்பட்டு, களைத்திருந்தும், ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சொன்னது, மெச்சிக்கொள்ளவேண்டிய ஒன்று. பேதுரு ஏமாந்து போகவில்லை. வலை கிழிந்து போகத்தக்கதாக, மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
“கீழ்ப்படிதலைக்” குறித்த முக்கியமான சட்டம் இது, என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் காரணங்களை ஆராய்வதை நிறுத்தி விட்டு கீழ்ப்படிய வேண்டும். இதை, “இருந்த போதிலும் தத்ததுவம்” என்று என் சிநேகிதி ஒருத்தி அழைப்பாள். சில நேரம், கர்த்தர் சொல்லும் காரியம், நம்முடைய மூளைக்கு அர்த்தமற்றதாக தெரியும். அவள் இப்படி சொல்லும்போது, உடனே அடுத்ததாக, “இருந்த போதிலும்,” என்று சொல்லி, பின்பு அவள் கீழ்ப்படிவாள்.
காரணங்களை ஆராய்ந்துகொண்டிராமல் அவருக்கு கீழ்ப்படிவதையே, தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
ஞானமுள்ள அற்புதமான ஆண்டவரே, சில நேரங்களில் எனக்கு காரியங்கள் அர்த்தமற்றவைகளாக தோன்றுகிறது. இருந்த போதிலும், நான் உம்முடைய சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நான் உமக்கு ஊழியம் செய்ய எந்த தெய்வீக சந்தர்ப்பத்தையும் இழந்துவிடாமல் இருக்க எனக்கு ஆவிக்குரிய பகுத்தறிவைத் தாரும். உம்மை நான் அதிகமாக சார்ந்து, உமக்கு உடனுக்குடன் கீழ்ப்படிந்து, காரணங்களை கேளாமல் இருக்க எனக்கு உதவி செய்யும். இன்று என் ஜெபத்தைக் கேட்டதற்காக உமக்கு நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/