மனதின் போர்களம்மாதிரி
கர்த்தரை நம்புங்கள்!
“பைபிளை வாசித்தாலே ஒரே குழப்பமாயிருக்கிறது,” என்று பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். “வேதத்த வாசிக்க முயற்சி எடுத்தாலும், தேவன் என்ன சொல்லுகிறார் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியில், குழம்பி, நான் விரக்தியடைந்து விடுவதுதான் மிச்சம்,” என்று அவர்கள் சொல்வதுண்டு.
தேவனுடைய நடத்துதலை அறிந்துகொள்ள முயலும்போது... “ஜனங்கள், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இப்படிக் காரணத்தைக் கண்டுபிடித்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பதை நிறுத்தச் சொல்;” என்று தேவன் என்னிடத்தில் சொல்வதை நான் உணர்ந்தேன். மேலே சொல்லப்பட்ட வசனத்திலுள்ள விதமாக, நாம் எப்போதும், நம்முடைய சுயபுத்தியின் மேல் சார்ந்திருக்க முடியாது. சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை.
மோசே இதை அறிந்திருந்ததினால் தான், “மறைவானவைகள் தேவனுக்குரியவைகள்,” என்று இஸ்ரவேலரிடம் விவரிக்கின்றான். தேவன் தம்முடைய சித்தத்தை - தெளிவாக வெளிப்படுத்திய பிறகு, அதற்கு கீழ்ப்படிவதே மிகவும் முக்கியம் என்று அவர்களிடம் வலியுறுத்தினான்.
உண்மையாகவே, இது அவ்வளவு எளிது. “எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்” (சங்கீதம் 119:34), என்று சங்கீதக்காரனைப் போல நாம் சொல்லவேண்டும். நாம் செய்ய வேண்டியதை தேவனிடம் கேட்டு, அதை அவர் நமக்கு வெளிப்படுத்தும்போது, நாம் குறுக்கு கேள்வி கேட்கக்கூடாது.
அநேக வேளைகளில் பலர், சிந்திக்க முயலுகின்றனர். ஆனால், அப்படி செய்வதோ ஆபத்தானதாக முடியும். தேவன் ஏன் சொல்லுகிறார்? எதற்கு செய்யச் சொல்லுகிறார் என்று காரணத்தை புரிந்துகொள்ள நாம் முயற்சிக்கும்போது; நாம் செய்யும் முதல் தவறு என்னவென்றால், “தேவனுடைய மனதையே கரைத்து குடித்தவர்கள்,” போல நினைப்பதாகும்!
இப்படி சிந்திக்கும் போது, நாம் வேறு ஒரு திசையில் செல்ல முற்படுவோம். அது புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், அது தேவனுடைய சித்தமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இதற்கு 1 சாமுவேலில் சொல்லப்பட்டுள்ள சம்பவம், ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், பலிகளை செலுத்த தீர்மானித்தான். பென்யமீன் கோத்திரத்தில் வந்தபடியால், அவன் ராஜாவாக இருந்தாலும் - பலிகளை செலுத்துவது தகாத காரியமாக இருந்தது. ராஜாவும், அவனுடைய சேனையும், பல நாட்களாக பிரதான ஆசாரியனாகிய சாமுவேல் வரக் காத்திருந்தனர். ஆனால் சவுலோ, பொறுமையிழந்தவனாக (அல்லது பயந்து போயோ), சாமுவேல் வருவதற்கு முன்பே பலிகளை செலுத்தி விட்டான். இப்படிப்பட்ட காரியத்தை செய்ததற்காக சாமுவேல், சவுலைக் கடிந்துகொண்டபோது, “கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்து விடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமூகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க பலியைச் செலுத்தினேன்” (1 சாமுவேல் 13:12),என்று நியாயமாக பதில் சொல்வதாக ராஜாவாகிய சவுல் நினைத்துக்கொண்டான்.
சவுல் எவ்வளவு மதியீனமாக நடந்துகொண்டான் என்று சாமுவேல் கடிந்து கொண்டு, தேவன் ராஜ்யபாரத்தை அவனை விட்டு எடுத்து போடுவதை குறித்து சொன்னான்.
தேவன் சொல்வதைக் கேட்க காத்திராமல், தான் ஞானமாக பலிசெலுத்தினதாக சவுல் நினைத்துக்கொண்டான். அதுதான் அவன் செய்த பெரிய தவறு.
மனிதனுடைய புத்தியானது, அறிவோடு, ஒழுங்காக, காரணமறிந்து செயல்படவேண்டும் என்று விரும்பும். நாம் பொதுவாகவே நிலைமைகளை ஆராய்ந்து எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, பிரச்சனைகளை சமாளிக்க விரும்புகிறோம். நாம் தேவனுடைய கண்ணோட்டத்தின்படி புரிந்து கொள்ளாமல், நம்முடைய சிறிய மூளை அறிவினாலே குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்கிறோம்.
ஆனால், அதற்கு நேர் எதிர்மறையாக, “நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையை சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும், எனக்கு சாட்சியாயிருக்கிறது (ரோமர் 9:2), என்று பவுல் கூறுகிறார். அதாவது, தன் நிலைமைகளை, தன்னுடைய மூளை அறிவினால் ஆராய்ந்ததினால் அல்ல, பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய மனச்சாட்சிக்குள் சாட்சியிட்டபடியால்; தான் செய்தது சரியே என்று பவுல் கூறுகிறார்.
உங்களுக்கும் அதே சுபாவம் இருக்கவேண்டும். தேவன் மிகத்துல்லியமாக உங்களுக்குள் ஒரு தெளிவைத் தந்து, உங்கள் மனதில் வெளிப்படுத்தப்பட்டது சரி என்று சொல்லும் அளவுக்கு, அவரையே சார்ந்திருக்க வேண்டும். உங்களுடைய சுயபுத்தியின் மேல் சார்ந்திராமல், மனுஷ அறிவினால் நிதானிக்காமல், “நான் கர்த்தரை நம்பி, அவர் சொல்லும் யாவையும் கீழ்படிவேன்,” என்று சொல்ல வேண்டும்.
அன்புள்ள தேவனே, நான் புரிந்துகொள்வதற்கு மேலாக நீர் என்னில் அன்புகூறுகிறபடியால், உமக்கு நன்றி. நீர் பேசும் போது அப்படியே கீழ்ப்படிய, நான் எதையும் யோசிக்காமல் உடனடியாக கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/