ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 2 நாள்

"நாம் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள்" பற்றி நாம் பேசுகிறோம். நம் சூழ்நிலைகளில் நம்மில் எவருக்கும் கட்டுப்பாடு இல்லை, ஆனால் இச்சூழலின் நடுவே நாம் எவ்வாறு பயணிக்கிறோம் என்பதற்கு நாம் ம
தான் பொறுப்பு. கப்பலோட்டியின் திறமைக்கு ஏற்ப இரண்டு படகுகள் ஒரே காற்றில் எதிர் திசைகளில் பயணிக்க முடியும். தனது கப்பலை பாறைகளுக்கு கொண்டு செல்லும் கப்பலோட்டி, தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அவரது சூழலை காரணம் கூறுகிறார், மற்றொரு கப்பலோட்டி தனது கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டு செல்கிறார். அவருக்கும் அதே காற்று இருந்தது, ஆனால் படகுகளை எப்படி ஒழுங்கமைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும், அதனால் காற்று அவன் விரும்பிய திசையில் நடத்தியது. தேவனின் சமாதானத்தின் சக்தி சாதாரண வாழ்க்கையின் கலவையில் உங்கள் போக்கை வழிநடத்த உதவும்.

கர்த்தாவே, நான் உம்மிடம் திரும்புவேன். உமது அமைதியின் பாதுகாப்போடு, உமது அன்பின் இனிமையான உணர்வோடு நீர் என்னைத் தொடும் வரை நான் ஒரு வீடற்றவன்.

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: என் வாழ்க்கையில் அமைதிக்கு என்ன சக்தி இருக்கிறது? எனது “பொது அறிவுக்கு” ​​அடிபணிய வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் தேவனின் அமைதியை நான் புறக்கணிக்கிறேனா? அன்பான தேவனுடன் சமாதானமாக இருப்பதை விட பாதுகாப்பானது எது?

The Moral Foundation of Life and Knocking at God’s Door என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்