புத்தகச் சுருள் ஒன்று சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும் அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன.
அப்போது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், படைத் தலைவர்களும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், அடிமைகளும், சுதந்திரக் குடிமக்களுமாகிய ஒவ்வொருவரும் குகைகளிலும் மலைகளின் நடுவே கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.