வெளிப்படுத்தல் 6:12-13
வெளிப்படுத்தல் 6:12-13 TRV
ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்போது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கறுப்புக் கம்பளியைப் போல் கறுத்தது, சந்திரன் இரத்தம் போல் சிவப்பானது. பலத்த காற்றினால் அத்தி மரம் அசைக்கப்படும்போது, பழுக்காத அத்திக் காய்கள் வந்து விழுவது போல வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன.