வெளிப்படுத்தல் 6:10-11
வெளிப்படுத்தல் 6:10-11 TRV
அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரான ஆண்டவராகிய கர்த்தாவே, பூமியில் குடியிருக்கின்றவர்களை எவ்வளவு காலத்துக்கு நீர் நியாயம் தீர்க்காமலும், எங்கள் இரத்தத்தை சிந்திய அவர்களைப் பழிவாங்காமலும் இருப்பீர்?” என்று கூக்குரலிட்டார்கள். அப்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெண்ணிற ஆடை கொடுக்கப்பட்டது. அத்துடன், இன்னும் சிறிது காலம் அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களுடைய சக ஊழியர்களும் சகோதரர்களுமானவர்களில் அவர்களைப் போலவே கொல்லப்பட வேண்டியவர்களின் முழு எண்ணிக்கை நிறைவாகும் வரை அவர்கள் பொறுத்திருக்கும்படி சொல்லப்பட்டது.