அதனாலேயே,
“இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து,
அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கின்றார்கள்.
அரியணையில் அமர்ந்திருக்கிற அவர்,
அவர்களுடன் குடியிருந்து அவர்களுக்கு பாதுகாப்பாய் இருப்பார்.
அவர்கள் இனியொருபோதும் பசியாயிருக்க மாட்டார்கள்,
இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவும் மாட்டார்கள்.
வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ,
அவர்களைத் தாக்காது.