YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 6:5-6

வெளிப்படுத்தல் 6:5-6 TRV

ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவது உயிரினம், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக இதோ ஒரு கறுப்புக் குதிரை நின்றது. அதில் அமர்ந்திருந்தவன் தன் கையிலே தராசு ஒன்றைப் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது மனிதனின் குரலில், “ஒரு நாட் கூலி பணத்துக்கு ஒரு கிலோ கிராம் கோதுமை, ஒரு நாட் கூலி பணத்துக்கு மூன்று கிலோ கிராம் வாற்கோதுமை. ஆனால் எண்ணெயையும் திராட்சை ரசத்தையும் சேதமாக்கி விடாதே!” என்று சொல்வதைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்து வந்தது போலிருந்தது.