கீழடக்கி வெல்லும் கலைமாதிரி

The Art of Overcoming

7 ல் 5 நாள்

நாள் 5: ஒலிபெருக்கி தேவனிடம் மீண்டும் ஒப்படையுங்கள்.

இறுதிச் சடங்கில் நீங்கள் நினைத்ததை விட 10 மடங்கு நீளமான ஒரு உரையின் மூலம் நீங்கள் எப்போதாவது பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? எனக்கு தெரியும். எதனால் ஒலிபெருக்கிகள் மக்கள் நேரத்தை முழுவதுமாக இழக்கச் செய்கின்றன?

இறுதிச் சடங்குகளில் நேரத்தை கொள்ளையாடியதில் உங்கள் வாயாடி மாமா மட்டும் குற்றவாளி அல்ல. நமக்கு மரண அனுபவங்கள் நேரிடும்போது நாமும் அடிக்கடி அதையே செய்கிறோம். நாம் அவைகளை நினைத்து துக்கங் கொண்டாடுகிறோம், அவர்களை நினைத்து நினைத்து புலம்புகிறோம் — ஆனால் நேரத்தை கவனிக்க தவறிவிடுகிறோம். நாம் துக்கத்தில் சிக்கித் தவிக்கிறோம், அதைத் தாண்டி முன்னேற மறுக்கிறோம்.

தற்போது இல்லாவிட்டாலும் விரைவாக தேவன் தனது ஒலிபெருக்கி மீண்டும் தன்னிடம் கொடுக்குமாறு விரும்புகிறார்.

இறுதிச் சடங்கு தொடர்ந்து நடக்க வேண்டும். எனவே, நாம் அதனை  தடுத்து நிறுத்துகிறோம் என்பதை நமக்குத் தெரிவிக்க அவர் நம்மை மெதுவாகத் தட்டி, முன்னேறும்படி ஊக்குவிக்கிறார். அடக்கம் நடக்க வேண்டும், ஆனால் நாம் மீண்டும் மீண்டும் அதையே நினைத்து அழ வேண்டும் என்று வலியுறுத்தினால் அது முடியாது.

சங்கீதம் 23 ல், “ நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.” என்ற புகழ் பெற்ற வசனத்தை எழுதியிருக்கிறார். கவனியுங்கள், தாவீது பள்ளத்தாக்கின் வழியாக நடப்பதைப் பற்றி பேசுகிறார். இருளின் பள்ளத்தாக்குகள், மரணத்தின் பள்ளத்தாக்குகள் நமக்கு நெடு நாள் வீடுகளாக இருக்கப் போவதில்லை. அது பயணித்து கடக்கப்பட வேண்டியவை, நீண்ட நாள் குடியிருப்புக்கல்ல. இந்தப் பயணம் கொஞ்சம் நேரமெடுக்கலாம், ஆனால் நம்மையும் அறியாமல் நாம் முன்னேறிக் கொண்டேதான் இருப்போம்.

நீங்கள் எப்படி துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் துக்கத்தை அனுசரிக்கும் போது கூட ஜீவனல்லோர் தேசத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். ஒரு பரந்த, அழகான உலகம் காத்திருக்கிறது, நீங்கள் அந்த உலகின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறீர்கள். அதிக நேரம் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு நிற்காதீர்கள், அப்படி நின்றால் அல்லது தேவன்  உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் இழப்பு உங்கள் பயணத்தில் ஒரு பகுதி மட்டுமே, அதுவே உங்கள் வாழ்க்கைக்கான காரணமாக மாற்றி அதிலேயே உங்கள் வாழ்வை முடித்துவிடாதீர்கள்.

உங்கள் துக்கம் எப்போது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை சொல்ல எனக்கு தகுதி இல்லை. அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் உள்ளது.

எனவே, ஒலிபெருக்கியை அவரிடம் ஒப்படைக்க தேவன் உங்களுக்கு ஒரு மென்மையாக தட்டிக் கூப்பிடுகிறாரா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பருவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்றுநகூறுகிறாரா? புலம்பி நினைவு  கூறும் உரையை முடித்து, எதிர்காலத்திற்கு முன்னேறுவதற்கான நேரம் இது என்று அவர் உங்களுக்குச் சொல்கிறாரா? இல்லையென்றால், வருத்தப்படுவதற்கு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆம் என்றால், அவர் கிருபை உங்களை முன் நடத்தட்டும்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Art of Overcoming

வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, ​​விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிப்லீக்கா அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள https://www.biblica.com/timtimberlake/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்