கீழடக்கி வெல்லும் கலைமாதிரி
நாள் 1: முடிவுகளே தொடக்கங்கள்.
ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் திடீர் மரணத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருந்தால், மரணம் தாக்கும் போது அதன் பயங்கரமான சக்தி உங்களுக்குத் புரியும். நாம் மதிக்கும்,மிகவும் நேசிக்கும் எதையும் திடீரென இழக்கும்போது இதுவே உண்மை நிலை. இது நம்மை வீழ்த்தும் முரட்டுக் குத்து. மனதுக்கு நெருங்கியவர்களின் மரணத்தை எதிர்கொள்ளும்போது சக்தியற்றவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும், தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறோம்.
ஆனால் இழப்பும் துக்கமும் நாம் உணர்வது போல் இறுதியானதாக இல்லாவிட்டால்?
நான் வேதத்தை எவ்வளவு அதிகமாகப் படிக்கிறேனோ, எவ்வளவு நேரம் நான் இயேசுவைப் பின்பற்றுகிறேனோ, அந்தளவுக்கு இந்த எளிய சத்தியம் கிரியை செய்வதைப் பார்த்திருக்கிறேன்: முடிவு என்று நாம் நினைப்பது பொதுவாக ஆரம்பம் மட்டுமே. நஷ்டம் என்று நாம் நினைப்பது பெரும்பாலும் லாபமாக மாறிவிடும். எது பலவீனமாக இருக்க வேண்டுமோ அது எப்படியோ பலமாக மாறும். எது தீமையாக இருந்திருக்க வேண்டுமோ அதுவே நன்மையை விளைவிக்கும். ஏன்? ஏனென்றால் தேவன் அவ்வளவு நல்லவர், வல்லமை மிக்கவர். நடக்கக்கூடிய மோசமான காரியத்தை சிறப்பான காரியமாக மாற்றும் வழி அவரிடம் உள்ளது.
இதற்கு பின்னான பெரிய காரியங்களைப் பார்க்க நமது கண்ணோட்டத்தை மாற்றுவது எளிதானதோ வலியற்றதோ அல்ல.
ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் மனதில் என்னவெல்லாம் நினைத்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். என் மகன் பிறக்கும் போது நான் அருகே இருந்தேன்.அவன் அதனை சற்றும் விரும்பவில்லை! அவன் பெரும்பாலும் கருப்பையில் தங்கியிருப்பதைத் தேர்ந்தெடுத்திருப்பான் வெளியுலகின் சுதந்திரத்தை அவனால் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.
அதே போல, நாம் இழக்கத் தொடங்கும் கனவுகள், மனிதர்கள், இடங்களை பற்றிக் கொள்கிறோம். ஏனெனில் அவர்களை அல்லது அவற்றை இழந்த பின்னர் என்ன செய்வோம் எப்படி வாழ்வை தொடர்வோம் என அப்படி பற்றிக் கொள்கிறோம். முன்னால் என்ன இருக்கிறது என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாததால் "சிறிய மரணங்கள்" நம்மை பயமுறுத்துகின்றன, ஏனென்றால். பிறந்த குழந்தையைப் போல, அதற்கான மொழி கூட நம்மிடம் இல்லை.
ஆனால் தேவனின் பார்வையில், ஒரு அத்தியாயத்தின் முடிவு பொதுவாக ஒரு பெரிய வாய்ப்பின் ஆரம்பம். இயேசு தனது சொந்த வாழ்க்கையை ஒரு கோதுமை விதை என்று விவரித்தார்,பலருக்கு உயிர் கொடுப்பதற்கு,முதலாவது அந்த புதைக்கப்பட்டு மடிய வேண்டும் என்றார் (யோவான் 12:23-25). இது நம் வாழ்வின் மற்ற மரணத்திற்கும் (நாம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு மரணங்கள்) பொருந்தும்.
மரணம் முடிவல்ல. அது ஒரு விதமான முடிவு, ஆம், ஆனால் அதுவே இறுதியான முடிவல்ல. இது ஒரு ஆரம்பம், புதிய துவக்கத்திற்கு முன்னான அத்தியாவசியமான முடிவு.
எனவே, தெரியாத பயத்தால் பீதியடைவதற்குப் பதிலாக, ஆழ்ந்த மூச்சு விடுங்கள். தேவனை நம்புவதைத் தேர்ந்தெடுங்கள். தலை நிமிர்ந்து வாசல் வழியாக உள் நுழையுங்கள். சிதைந்த கனவு, இழந்த வேலை, உடைந்த உறவு அல்லது வேறு ஏதாவது உங்களைத் தள்ளாடச் செய்திருந்தால், அந்த மரணத்தை சரியான முறையில் புரிவது, அடுத்த கட்டத்திற்கு உங்களுடைய பொறுப்பு — புரிந்த பின்னர் புதியதிற்கு முன்னேறுங்கள்.
தேவன் உங்கள் முடிவை தொடக்கமாக மாற்ற விரும்புகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.
More