கீழடக்கி வெல்லும் கலைமாதிரி

The Art of Overcoming

7 ல் 4 நாள்

நாள் 4: உடைந்த கனவுகளை எப்படி கையாள்வது.

எப்பொழுதாவது உங்கள் கனவுகள் மடிந்து மடிந்து இருக்கிறதா?

இது உங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டக்கூடிய வியாபார யோசனையாக இருக்கலாம். ஒருவேளை அது ஒரு கீழ்நோக்கி சென்ற கனவு காதலாக இருக்கலாம்.

சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை. கனவுகள் எப்போதும் நனவாகாது. உண்மையைச் சொல்வதானால், சில கனவுகள் நனவாகக்கூடாது. ஆனால் அவை நம் கண்களுக்கு முன்பாக நொறுங்கும் போது நமக்கு ஏற்படும் வலியை குறைவல்ல.

கனவு காண்பவர்கள் தேவனின் இதயத்திற்கு நெருக்கமானவர்கள் — வேதம் அப்படிப்பட்ட பாத்திரங்களால் நிரம்பியுள்ளது. உங்கள் கனவுகளில் சிலவை கெட்ட கனவுகளாக மாறிவிட்டதால், நீங்கள் கனவு காண்பதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள் உங்கள் கனவு நனைவாகும் முன், அது சாக வேண்டியிருக்கலாம்.

பரிசுத்த வேதாகமத்தில், யோசேப்பு எனும் கனவு காண்பவரின் சம்பவம் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது. ஆனால் யோசப்பு அங்கு செல்வதற்கு துரோகம், அடிமைத்தனம், பல வருட கடின உழைப்பு மற்றும் பல ஆண்டுகள் சிறைவாசம் உட்பட பல மரண அனுபவங்களை சந்திக்க வேண்டியிருந்தது. தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், எல்லா நம்பிக்கையும் இழந்துவிட்டதாகவும் யோசேப்பு நினைத்த நேரங்கள் இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆனால் சரியான நேரத்தில், தேவன் யோசப்பு கற்பனை செய்ததை விட மிக பெரிய விதத்தில் அவரது கனவை நிறைவேற்றினார்.

தேவனின் திட்டங்கள் எப்போதும் மனிதனின் கனவுகளை விட பெரியவை. சில சமயங்களில் நமது கனவுகள், குறைந்தபட்சம் தற்காலிகமாவது மரிக்க நேரிடும், அதனால் நம் கனவுகளுக்காக நாம் சில மரணங்களை எதிர்கொள்ளலாம். அதாவது, நமது எண்ணங்களையும், தன்னம்பிக்கையையும் பீடத்தில் இருந்து அகற்றி, பலிபீடத்தில் வைக்க வேண்டும். சில நேரங்களில் நமது சிறிய கனவுகளின் மரணம் தேவனின் பெரிய திட்டத்தை நனவாக்க, நிறைவேற்ற வழி செய்கிறது. சிறந்த கனவுக்கு, தேவனின் மகத்துவமாவ கனவுக்கு இடமளிக்க நமது நல்ல கனவு மடிய வேண்டும்.

சில தற்காலிக சாதனைகள் அல்லது பாராட்டுக்களைக் காட்டிலும் தேவன் மீது நமது பாதுகாப்பையும் நம்பிக்கையையும் கண்டறிந்தால், செல்லும் வழியிலேயேல நம்மை இழக்காமல், சோர்ந்து போகாமல் நம் கனவுகளைத் தொடர முடியும்.

எனவே, ஒருபோதும் நனவாகாத ஒரு கனவின் காரணமாக நீங்கள் மனச்சோர்வு மற்றும் வலியைக் அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனிடம் நெருங்கி வர இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை அவரிடம் கொடுங்கள். அவர் சிறிது நேரம் உங்கள் கனவை கையாளட்டும்.

அவரது அரவணைப்பில் நீங்களும் அவரது கரங்களில் உங்கள் கனவுகளும் பத்திரமாக இருக்கும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Art of Overcoming

வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, ​​விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிப்லீக்கா அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள https://www.biblica.com/timtimberlake/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்