கீழடக்கி வெல்லும் கலைமாதிரி

நாள் 3: துக்கம் புனித ஸ்தலம்.
தங்கள் குழந்தையின் அழுகையைக் கேட்பது இதயத்தை உடைக்கக் கூடியது என்று எந்தப் பெற்றோரும் சொல்வார்கள். தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல், பராமரித்தல் என்பது பெற்றோரின் இரத்தத்தில் ஊறின ஓர் உணர்வு ற்காக படைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் வலி பெற்றோரின் நெஞ்சில் இரக்கத்தை பொங்கி வழியச் செய்கிறது, அது அவர்கள் கண்களை மூடிக்கொண்டு தூங்குவதற்கு பிடிவாதமாக மறுக்கும் "வலியாக" இருந்தாலும் கூட.
அவ்வாறே நமது வலியும் தேவனின் இதயத்தை தொடுகிறது. அவர் எப்போதும் அக்கறை காட்டுகிறார், அவர் எப்போதும் நெருக்கமாக இருக்கிறார். நாம் எவ்வளவு செய்தோம் அல்லது இன்று நாம் பாவம் செய்துவிட்டோமா என்பதைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் அல்ல அவர். நம் வாழ்வில் இருந்து ஒதுங்கி வானத்தில் இருக்கும் பணி நிர்வாகி அல்ல அவர்.
அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார். நாம் எந்த பாதையின் வழியாக கடந்தி செல்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். அவர் நம் உணர்வுகளைப் புரிந்து, அந்தச் சுமையை நம்மிடமிருந்து பகிர்ந்து கொள்கிறார்.
தேவன் எவ்வாறு “நம்முடைய கதறலைக் கேட்கிறார்” அல்லது “நம்முடைய கண்ணீரைக் காண்கிறார்” என்பதைப் பற்றி வேதம் அடிக்கடி சொல்கிறது. நாம் கடந்து செல்லும் சிறிய மரணங்கள் தேவனின் இதயத்தை நமக்காக பரிதபிக்கச் செய்கிறது. நாங்கள் அவருக்கு மதிப்புமிக்கவர்கள், எனவே அவர் நமது வலியைப் பகிர்ந்து கொள்கிறார். மற்றவர்களின் பார்வையில் நமது இழப்புகள் சிறியதாக தோன்றினாலும் — ஒருவேளை உங்கள் பதவி உயர்வு கிடைக்காமல் போயிருக்கலாம், அல்லது உங்கள் கார் பழுதாகியிருக்கலாம், அல்லது உங்கள் மேல் அதிகாரியிடமிருந்து நீங்கள் நிராகரிப்பு கடிதத்தைப் பெற்றிருக்கலாம், அல்லது உங்கள் குடும்பத்தின் செல்லப்பிராணி இறந்திருக்காலும் — இந்த மரண அனுபவங்கள் தேவனுக்கு முக்கியமானது.
இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்புவதற்கு முன், மரித்த லாசருவின் சகோதரிகளான மார்த்தா மற்றும் மரியாளை முதலில் சந்தித்தார். அவர்கள் மிகவும் மனம் உடைந்திருந்தனர். இயேசுவின் மீது கோபம், வருத்தம் அவர்களுக்கு இருந்தது. யோவான் 11 ல் அவர்களின் பேச்சில் நீங்கள் அதைக் காணலாம். ஒரு கட்டத்தில், மரியாளும் மற்றவர்களும் படும் துக்கத்தைக் கண்டு இயேசு இரக்கமடைந்து அழத் தொடங்கினார்.
இது எந்த அளவுக்கு தேவனின் இருதயத்தைப் பற்றி சொல்கிறது என்பது உங்களுக்கு புரிகிறதா? இயேசு தான் லாசருவை எழுப்பப்போகிறதை அறிந்திருந்தார், அப்படியிருந்தும் — அவர் அவர்களின் துக்கம் புரிந்து கண்ணீர் விட்டார். அவர்களின் வலி அவருக்கு முக்கியமானது. அவர் இழப்பைப் புறக்கணிக்கவில்லை; அவர் அதை ஊர்ஜிதம் செய்தார், அவர்கள் வேதனையை அங்கீகரித்தார். அவர்களின் துன்பத்தில் அவர்களுடன் அமர்ந்து, அவர்களின் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டார்.
ஏன் தேவன் நமது கண்ணீரை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்?
ஏனெனில், நாம் தேவனுடைய பார்வையில் மதிப்பு மிக்கவர்கள். நமது பரிசுத்தமும், ஈகையும், நமது செயலாற்றல் மாத்திரமல்ல, நாமும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். உங்கள் இழப்பு, உங்கள் துக்கம் பரிசுத்தமானது.
எனவே, மரணம் வரும்போது, உங்கள் துக்கத்தை அடக்க அவசரப்படாதீர்கள். மௌனத்தில் மூழ்கிவிடாதீர்கள். நம்பிக்கை அல்லது வலிமை என்ற பெயரில் உங்கள் இழப்பை மூடிமறைக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் வரை "எல்லா உணர்வுகளையும் உணருங்கள்", ஏனென்றால் உங்கள் மரண தருணங்கள் தேவனின் பார்வையில் விலைமதிப்பற்றவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

மனஅழுத்தம்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

கவலையை மேற்கொள்ளுதல்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்
