கீழடக்கி வெல்லும் கலைமாதிரி

நாள் 2: இருளில் நம்பிக்கை ஒளி
“என் கட்டிலின் கீழ் பூதம்!”
இப்படி ஒரு குழந்தை பயந்து அழுது உங்களை எழுப்பி விட்டதுண்டா? ஒருவேளை நீங்களே சிறு பிள்ளையாக இருக்கும்போது அப்படி அழுதிருக்கலாம்.
நாம் வளரும்போது, படுக்கைக்கு அடியில் இருக்கும் பூதங்கள் மறைந்து,மறந்து போகிறது. ஆனால் நம் தலையில் உள்ள பூதங்கள் இன்னும் பெரிதாகி விடுகிறது. இதனால் நம்மைத் தாக்கக்கூடிய எதிரிகள் மற்றும் நமக்கு ஏற்படக்கூடிய தீமைகளைப் பற்றிய பயத்தில் நாம் தொடர்ந்து வாழத் தொடங்கி விடுகிறோம்.
நாம் அனைவரும் ஏதோ ஒன்றிற்கு பயப்படுகிறோம். உண்மையைச் சொல்வதானால், இந்த நிச்சயமற்ற உலகில் பயப்பட வேண்டியவை நிறைய உள்ளன. இரவில் நம் தூக்கத்தைக் கெடுத்து படுக்கையில் புரள வைக்கும் ஏதோ ஒன்று நம் அனைவர் வாழ்விலும் உள்ளது.தூக்கி எறிந்து கொண்டிருக்கும் ஒன்றைப் பெற்றுள்ளோம்.
அப்படியானால், இதற்கு என்ன தான் தீர்வு?
வெற்றிகளுக்கு மட்டுமின்றி, சோதனைகளுக்கும் சோகங்களுக்கும் இடமளிக்கும் அளவுக்கு பெரிதான,நேர்மையான விசுவாத்தை தேவன் மீது வளர்த்திடுங்கள். என்ன நடந்தாலும் — வாழ்வோ சாவோ,லாபமோ நஷ்டமோ — நம் வாழ்வு தேவனுடைய கரத்தில் இருக்கிறது, அவர் நம்பத்தகுந்தவர், நம் நம்பிக்கைக்குரியவர் (ரோமர் 8:38-39).
வாழ்க்கையில் சில கடினமான காரியங்களைச் சந்திக்கப் போகிறோம். அவைளில் எதுவும் தேவனுடனான நமது உறவை உடைக்க முடியாது. நம்முடைய மோசமான பயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், தேவனின் அன்பையும் பிரசன்னத்தையும் நாம் இன்னும் நம்பி முன்னேறலாம். அதுதானே நம்பிக்கை? தேவ அன்பில் குழந்தை போன்ற நம்பிக்கை அது தானே?
நீங்கள் தேவ மீதுள்ள விசுவாசத்தோடு வாழக் கற்றுக்கொண்டால், மரணமும் இழப்பும் அவற்றின் சக்தியை இழக்கின்றன. எந்தவொரு அச்சுறுத்தலையும், எந்தவொரு கெட்ட செய்தியையும் அல்லது எந்த பயத்தையும் எதிர்கொள்ள விசுவாசம் உங்களுக்கு உதவுகிறது. விசுவாசம் உங்கள் வாழ்க்கையை வரையறுக்கட்டும், அது உங்கள் மரண அனுபவங்களில் உங்களை காயப்படுத்தாமல் அழைத்துச் செல்லும். உங்கள் வெற்றிகளுக்கு மட்டும் விசுவாசத்தை கன படுத்தாதீர்கள் — தோல்வி, ஏமாற்றம், காயம் போன்றவற்றின் மூலமாகவும் விசுவாசம் உங்களை அழைத்துச் செல்லட்டும். அப்போதுதான் அது சிறந்ததாக இருக்கும்.
ஆம், மோசமானது நடக்கலாம். உங்கள் அதிசயம் பரலோகத்தின் இந்தப் பக்கத்தில்,சுகமான பாதையில் நடக்காது. இன்னும் சில கடினமான நாட்கள் உள்ளன.
ஆனால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அன்பின் கரங்களாலும் பாதுகாப்பின் சேனைகளாலும் உங்களைச் சூழ்ந்திருக்கும் தேவனைக் காண விசுவாசம் உங்கள் கண்களைத் திறக்கிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
