போர்வீரன்மாதிரி

Warrior

6 ல் 4 நாள்

போர்வீரனின் துணிவு

“தைரியம் என்பது பயமின்மை அல்ல, மாறாக நாம் செய்ய துணியும் செயல் பயத்தை விட முக்கியமானது என்ற மதிப்பீடு.” - பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்

நீங்கள் இயேசு கிறிஸ்துவை சிறிது காலமாக பின்பற்றுவீர்களானால் உங்களுக்கு அது ஒரு வசதியான, எளிதான அல்ல என்பதை ஒப்புக்கொள்வீர்கள். 

எனக்கு திருமணம் முடிந்த சில வருடங்களுக்கு பின்னர் நானும் என் மனைவி ஆலீசும், நாங்கள் விரும்பிய இடத்தில் எங்கள் கனவு வாழ்க்கையை அமைக்க ஆயத்தமானோம். ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகளுடன் எனக்கு ஒரு நல்ல வேலை இருந்தது, ஆலிசு தன் சொந்த உழைப்பினால் செழிப்பான புகைப்பட தொழில் ஒன்றை நிறுவினாள். எங்களுக்கு ஒரு நல்ல, பெரிய வீடு, ஏராளமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர் - ஆனால், "போ" என்று கடவுள் திட்டவட்டமாக சொல்வதைக் நாங்கள் கேட்டோம்.

நான் வளர்ந்த நகரத்தில் தான் வாழ்க்கையை அமைத்து இருந்தோம், நாங்கள் இருவரும் எங்கள் வேலைகளில் வெற்றிகளை காண தொடங்கி இருந்தோம். ஆகவே நாங்கள் பயந்தோம். 

ஆலிசால் ஒரு புது மாகாணத்திற்கு அவள் தொழிலை நகர்த்த முடியுமா? குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் விலகிச் செல்வது சரியான முடிவா? என பல சந்தேகங்கள் எழும்பியது. அறிவு, "போக வேண்டாம்" என கூறியது. பல மாதங்கள் கடந்தன, அனால் கர்த்தருடைய தொடர்ச்சியான தூண்டுதல் அவருடைய திட்டத்தை உறுதிப்படுத்தியது. எங்கள் வீட்டை விற்பனைக்கு வைத்தோம், பணியிலிருந்து விடை பெற்றோம், அதன்பின்னர் கடவுள் அறிவுக்கு எட்டாத விதத்தில் அற்புதமாக எங்களை நடத்தினார். 

கிதியோனுடைய வாழ்வின் நிகழ்வும் எங்களுக்கு ஒப்பாயிருந்தது. கர்த்தருடைய தூதன் கிதியோனிடம் வந்து, இஸ்ரவேலரை ஒடுக்குகிற மீதியானியர்களைத் முறியடிக்க கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்ததாக அவரிடம் சொன்னார். ஆனால் கிதியோன் கு ம்பம் மிகவும் எளியது, அவன் தகப்பன் வீட்டில் அவன் எல்லாரிலும் சிறியவனாவான், மீதியானியர் இஸ்ரவேலரை விட வலிமையானவர்கள். ஆனால் கடவுள் கிதியோனை "பராக்கிரமசாலி" என்று அழைத்தார், மேலும் கிதியோனிடம் கடவுள், அவனோடே கூட இருக்கிறார் என்று அவனுக்கு நினைவூட்டினார். 

என்னைப் போலவே, கிதியோனும் ஒரு சந்தேகம் கொண்டவர், எனவே கிதியோன் தன்னுடன் கடவுளின் பெலன் இருப்பதை நிரூபிக்கும்படி கர்த்தருடைய தூதரிடம் ஒரு அடையாளத்தை காண்பிக்குமாறு கேட்டார். பின்னர் கிதியோன் இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்றினான், அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது.

கிதியோன் அடுத்து என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?

கிதியோன் கர்த்தரை துதித்து, விசுவாசத்தோடு முன் சென்றான். அதுதான் தேவன் அளிக்கும் தைரியம் என நான் நினைக்கிறன். கர்த்தர் குறையுள்ள மனுஷனை தன்னுடைய பெரிய சித்தங்களுக்காக பயன்படுத்துவார், அது அச்சுறுத்தும் சில வேளைகளில் திகிலூட்டும். அனால் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், நாம் நம்முடைய பலவீனங்களில் அதிக கவனம் செலுத்தும் வேளையில் தான் பயம் ஏற்படுகிறது. நாம் நம்முடைய கவனத்தை நம்மிலிருந்து அகற்றி, கர்த்தரின் வாக்குறுதிகளை நினைவில் கொண்டு அவரை விசுவாசிக்கும்போது துணிவு ஏற்படுகிறது. அப்போதுதான் நாம் உறுதியான விசுவாசத்தோடு வெளியேற முடிகிறது.

சிந்திக்க: தேவனின் தூண்டுதல்களைப் பின்பற்றுவதிலிருந்து பயம் உங்களை எங்கே தடுத்தது? அவருக்குக் கீழ்ப்படிய நீங்கள் எவ்வாறு துணிவு பெற முடியும்?

பென், பயங்களை எதிர்கொள்ளும் போர்வீரன் 

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Warrior

நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.