போர்வீரன்மாதிரி

Warrior

6 ல் 1 நாள்

ஒரு போர்வீரனின் சான்று

இந்த வேதாகம திட்டம் உங்களுக்கு உங்களை போன்றவர்களால் வழங்கப்படுகிறது.நீங்கள் ஒரு போர்வீரன் என்ற உணர்வு உங்களுக்குள் இல்லையா? நீங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடைய ஆரோக்கியம், உங்கள் நட்புவட்டம், உங்கள் குடும்பம், உங்கள் வேலை மற்றும் உங்கள் நம்பிக்கை என்னவாகும்? அதை சிந்தித்து பார்க்க கூட நீங்கள் விரும்பமாட்டிர்கள் அல்லவா? ஏனெற்றால் நீங்கள் இவைகளுக்காக ஒவ்வொரு தினமும் போராடுகிறீர்கள். 

நீங்கள் ஒரு போர்வீரன்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுக்குள் சிறந்த நிலையில் இருக்க தீவிரமாக முயற்சி எடுக்கிறீர்கள். ஆனால் உங்கள் வெற்றியை எவ்வாறு அளவிடுவது? 

உங்கள் குடும்பம் மற்றும் விசுவாசித்திற்காக இவ்வாறு கடினமாக போராடும்போது, நீங்கள் செலவழித்த நேரம் மற்றும் உங்கள் முயற்சி பயனுள்ளதாக அமைகிறதா என உறுதிப்படுத்திக்கொள்ள தோன்றும். ஒவ்வொரு நாளும் நான் இன்று சரியான முடிவுகளை தான் எடுத்தேன் என்ற மனநிறைவோடு தூங்க செல்ல விரும்புகிறீர்கள். அனால் இவற்றையெல்லாம் அளவிடுவது எப்படி? நீங்கள் சிந்திய இரத்தமும் வியர்வையும் மதிப்புக்குரியது என்று சான்றளிப்பது யார்? 

அங்கீகாரம் - இதை நாம் அனைவரும் விரும்புகிறோம். வேலையில் செலவிடும் கூடுதல் மணிநேரங்களை முதலாளி கவினிக்கின்றார், உடற்பயிற்சி செய்ததின் பலனை காணும்போது, உழைத்து வாங்கிய புதிய வாகனத்தை துணை விரும்பும்போது என பல விதத்தில் நாம் அங்கீகரிக்க படுகிறோம். இவை தவறானவை அல்ல, இது நமக்கு ஊக்கத்தையும் ஒரு புத்துணர்ச்சியும் அளிக்கும். அனால் இவையெல்லாம் ஒரு நாள் நிற்கும், அப்பொழுது என்னவாகும்? 

உங்கள் புது வண்டி பழுத்தடைந்ததென்றாலோ, உங்கள் உடலமைப்பை குறித்த பாராட்டுகள் வருவது நின்று விட்டாலோ, அலுவலகத்தில் நீங்கள் செலவிடும் கூடுதல் மணிநேரங்கள் தான் புது இயல்பு என்று உங்கள் முதலாளி எண்ண தொடங்கினாலோ எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? எந்த பயனும் இல்லாமல் வீண் முயற்சி செய்வதைப்போல் உணரத்தொடங்குவோம். நான் இவ்ளோ முயற்சி எடுத்தும் யாரும் அதை பொருட்படுத்தவில்லையே என்று விரக்தியடையலாம்.

அங்கீகாரம் நிற்பது அல்ல பிரச்சனை, அது எங்கேயிருந்து வருகிறது என்பது தான் பிரச்சனை. நம்முடைய அடித்தளம் கன்மலையைப் போன்று உறுதியானதாக இருக்கவேண்டும். ஒரு போதும் மாறாத ஒருவரிடமிருந்து நாம் அங்கீகாரம் தேட வேண்டும். 

அப்பேர்பட்டவர் ஒருவர் மட்டுமே, அவர் நமக்குள்ளே வந்து, நம்மோடே நடந்து, நம் மூலமாக செயல்படுகிறவர். அவரே இயேசு கிறிஸ்து, நம் தேவன், பரிசுத்த ஆவியானவர். இந்த திரித்துவமான தேவன் மிகுந்த அன்புடனும் நோக்கத்துடனும் இந்த உலகை படைத்தார். அவர் உங்களை குறித்து என்ன கூறுகிறார் என்பதே முக்கியம்.

அவர் சத்தத்திற்கு நாம் செவி சாய்க்கவேண்டும், ஏனென்றால் நாம் நம்முடைய பெலவீனத்திலும் திடன்கொண்டு செயல்படுகிறோம் என்பதை நமக்கு அவர் கூறலாம். உங்கள் நன்மைகளை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார், நீங்கள் நிறைய பணம் ஈட்டாவிட்டாலும் கர்த்தர் நம்மை நேசித்தது போல குடும்பத்தை நீங்கள் நேசிப்பது, ஒரு நல்ல தந்தையாக நீங்கள் செயல்படுவதென பல நற்கிரியைகளை குறித்து அவர் பெருமிதம் கொள்கிறார். 

ஜெபம்: தேவனே, நான் யார்? என்னை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எனக்கான உம்முடைய நோக்கத்தை எனக்கு வெளிப்படுத்த வேண்டுகிறேன். ஆமென்.

-டாமி, சக போர்வீரன்

போர்வீரன் திட்டத்தை மேலும் பார்க்க

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Warrior

நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.