போர்வீரன்மாதிரி
போர்வீரனின் பேரார்வம்
மெய்யான ஆர்வம் பொறுப்பற்றதோ, தயங்குகின்றதோ அல்ல மாறாக அது நன்மை செய்யவேண்டும் என மிகுந்த பலமிக்க, எளிதில் கட்டுக்குள் அடங்காத ஒரு ஆசை. என்னுடைய 20களில் இதை நான் அறியாது மனம்போன போக்கில், தன்னை குறித்து மட்டும் சிந்திக்கும் ஒரு சுயநலமான வாழ்வை வாழ்ந்தேன்.
தேவனை தூரப்படுத்திய நான் ஒரு முறை கூட தேவாலயத்திற்குள் பிரவேசித்து இல்லை. அச்சமயத்தில் என்னுடன் பணியாற்றிய ஆண்டி என்னும் சக ஊழியர் என்னை அழைப்பு அட்டைகளுடன் தனது தேவாலயத்திற்கு அழைக்கத் தொடங்கினார்.
அந்த ஆண்டு அவர் என்னை 52 முறை தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு முறையும் நான் இல்லை, அடுத்த முறை வருகிறேன் என மறுத்து வந்தேன். நான் அவர் டேர்ம் அழைப்பு அட்டைகளை என்னுடைய வண்டியின் முன் பக்க கண்ணாடி பக்கம் வைத்து விடுவேன். அனால் ஆண்டி விடுவதாக இல்லை, அவர் இது என் வாழ்க்கையை மாற்றிவிடும் என உறுதியாக நம்பினார்.
நானோ தயங்கினேன். என் வாழ்வில் நான் சந்தித்த கடினமான காலமே அந்த 52 வாரங்கள். நான் எடுத்த சில முடிவகுளால் என் குடும்பத்தை பிரிந்தேன், என்னுடைய வாழ்க்கையின் முன்னுரிமைகள் தவறாக இருந்தன. கட்டுபாடில்லாமல் இயங்கும் ஒரு வாகனம் போல என் வாழ்க்கை நகர்ந்தது.
ஒரு நாள் சிறிது இளைப்பாறலாம் என வண்டியை எடுத்து ஒரு நெடும்பயணம் மேற்கொண்டேன், எனக்கு வாழ்வில் என்ன வேண்டுமென யோசித்து பிரயாணிக்கையில், திடீரென ஆண்டி வழங்கிய லைஃப்.சர்ச் அழைப்பிதழ்களின் பாரம் தாங்காமல் என் வண்டியின் முன் கண்ணாடி சிறிது இறங்கிற்று. அப்பொழுது நானும் ஒரு தெளிவு பெற்றது போல் உணர்ந்தேன்.
சில மாதங்களுக்குள் நான் இயேசுவையும் சில நல்ல மனிதர்களையும் அறிந்து கொண்டேன். அவருடைய கிருபையினாலும் இரகத்தினாலும், எனக்குள் ஒரு ஆர்வத்தை உணர்ந்தேன், அடகு என்னை புத்துயிர் பெற்றவனை போல ஆகிற்று
ஒரு வழியாக இதன் மூலம் என் வாழ்வின் சிறந்த பகுதியை கண்டறிந்து அதை தேற்றி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன். இன்றைக்கு நான் ஒரு அன்பான கணவர், நல்ல தந்தை, லைஃப்.சர்ச்சில் ஆயர் என பல பாத்திரம் வகிக்கிறேன். என் கதை உங்கள் கதையை விட பெரியது அல்ல, நீங்கள் அன்பாலும் ஆற்றலாலும் உருவாக்கப்பட்டவர். நம் நாதராகிய இயேசு கிறிஸ்துவை உயிர்ப்பித்த பரிசுத்த ஆவியானவர் நம் அனைவருக்குமுள்ளம் வாசம் செய்க்கின்றார்.
தயக்கத்திற்கு உங்கள் வாழ்வில் இடம் கொடாதிருங்கள். இயேசு கிறிஸ்துவை வாழ்வில் ஏற்று, உங்கள் திருமணம், உங்கள் குழந்தைகள், உங்கள் தேவாலயம் மற்றும் உங்கள் சமூகம் ஆகியவற்றில் மிகுந்த பற்றுடன் ஈடுபடுங்கள்.
உங்கள் தனிப்பட்ட நோக்கங்கள் நிமித்தம் தேவா அழைப்பை நான் வண்டி கண்ணடையில் குவிய விட்டதை போல் குவிந்து போக விடாதீர்கள். உங்கள் தாலந்துகள், நேரம், திறமைகள் மற்றும் அன்பை பிறருக்காக எவ்வாறு செலவிடுவது என சிந்தியுங்கள். மேலும் எத்தனை பேருக்கு இந்த நன்மையை அறிவிப்பது என சிந்தியுங்கள். இதற்காகவே நாம் படைக்கப்பட்டோம்!
ஜெபம்: கர்த்தாவே, உமக்காகவும் உம சித்தத்திற்காகவும் எழும்ப எனக்கு உதவி புரியும். ஒன்றும் செய்யாமல் சுகமான வாழ்வை அனுபவித்து மட்டும் செல்ல நான் விரும்பவில்லை. உமக்காக என் சகலத்தையும் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.
மிட்செல், பேரார்வமிக்க போர்வீரன்
இந்த திட்டத்தைப் பற்றி
நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.
More