போர்வீரன்மாதிரி
போர்வீரனின் விடுதலை
ஆபாச படைப்புகளுக்கு நான் அடிமையாகி இருந்தேன். என்னுடைய ஒன்பதாவது வயதில் முதன்முதலில் இவைகளை பார்க்க தொடங்கிய பழக்கம், என்னுடைய இருபதுகள் முழுவதும் அடிமையாகியது. கடைசியாக நான் உண்மையான விடுதலையை நோக்கி மூன்று காரியங்களை செய்ய முற்பட்டேன்.
நாம் எல்லோருக்கும் போதை மற்றும் கவனக்குறைவுடன் ஒரு கடந்த காலம் கண்டிப்பாக இருக்கும். அது பாலியில் ரீதியாகவோ, போதை பொருட்களோ, சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, அலைபேசி முதலியவைகளுக்கோ, அடிமைப்படுத்தும் பொழுதுபோக்குகளோ, தேவையற்ற கோபங்கள், அதீத வேலை செய்யும் வெறி என நம் வாழ்வை நம்மிலிருந்து திருடும் எல்லாமே ஒரு வகையான போதை என்பதை நாம் உணர வேண்டும்.
சில சமயங்களில், நான் என் வாழ்நாள் முழுவதும் சிக்கித் தவிப்பேன் என்று நினைத்தேன். அனால் இயேசு கிறிஸ்து நம்மை முழுவதுமாக புதிப்பித்து உயிர்ப்பிக்க வந்தார் என்பதை உணர்ந்தேன். அவர் என்னை என்னுடைய தீயபழக்கத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்தார். அது எளிதாக அமையவில்லை. அந்நெடிய போராட்டம் எவ்வாறு தொடங்கியது என்று கீழே குறிப்பிட்டுளேன்.
முதலில், நான் இந்த பழக்கத்திற்கான ஆணி வேர் எது என்பதை கண்டறியவேண்டி இருந்தது. பெரும்பாலும் இந்த தீயப்பழக்கங்கள் ஒரு ஆழமான பிரச்னையின் அறிகுறி அல்லது வெளிப்பாடாகும். என்னைப் பொறுத்தவரை, அங்கீகாரம் கிடைக்காததே முக்கிய பிரச்னையாக கருதுகிறேன். ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் என்னை முக்கியப்படுத்துவதை போலவும் அங்கீகரிப்பதை போலவும் உணர்ந்தேன். ஆனால் அதற்கு மாறாக நன் உண்மையில் கர்த்தர் என்னை அங்கீகரித்தார் என்றும், என்னை படைத்த அவர் என்னை அழைத்து, தெரிந்துகொண்டு, எனக்கு ஒரு நோக்கத்தை அளித்து என்மீது அன்புகூர்ந்தார்.
உங்களின் பிரெச்சனைகள் என்ன என்பதை வெளிப்படுத்துமாறு ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் சாந்தகுணமும் அன்புமுடையவர். போதையால் ஒருபோதும் தரமுடியாத ஆறுதல் மற்றும் அமைதி அளித்து உங்களை அவர் தேற்றுவார்.
இரண்டாவதாக, நான் அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். பல ஆண்டுகளாக, இந்த பழக்கத்தை நான் ஒரு ரகசியமாக வைத்து இருந்தேன், சொந்தமாக என்னால் கையாள முடியும் என்று நினைத்தேன். ஒருமுறை நான் அதை என் மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் ஒப்புக்கொண்டேன். இதன் மூலம் என் பழக்கத்திற்கு நான் பொறுப்பேற்கும் நிலையில் மாறினேன், அதன் பின்னர் இந்த போதை மெல்ல அதன் சக்தியை இழக்க தொடங்கியது.
மூன்றாவதாக, நான் இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்த்தேன். மனிதன் எதிகொள்ளக்கூடிய எல்லா சோதனையையும் எதிர்கொண்டதாக அவர் கூறினார். அவர் நம்முடைய போராட்டங்களை புரிந்துகொள்கிறார். எனவே நான் அவரை ஏறெடுத்து பார்த்தேன். மத்தேயு, நான்காம் அதிகாரத்தில், அவர் சாத்தானால் மூன்று முறை சோதிக்கப்பட்டார், மூன்று முறையும் கடவுளின் ஒரே பேறான இயேசு கிறிஸ்து சாதனை வேதவசங்களினால் மேற்கொண்டார்.
நான் வேதகாமத்திலிருந்து சில சத்தியங்களை தெரிந்துகொண்டு அதை தினமும் தியானிக்க தொடங்கினேன், குறிப்பாக எப்பொழுதெல்லாம் எனக்கு தவறு செய்ய ஆவல் ஏற்படுகிறதோ அப்பொழுது தீவிரமாக தியானித்தேன். ஒரு வசனத்திலிருந்து ஆரம்பியுங்கள். இன்றைய வாசிப்பிலிருந்து கூட நீங்கள் ஒன்றை தேர்வுசெய்யலாம்.
ஆணி வேரைத் தோண்டி, அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, உண்மையுடன் போராடுங்கள்.
-வில் , விடுதலைக்கான போர்வீரன்
இந்த திட்டத்தைப் பற்றி
நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.
More