போர்வீரன்மாதிரி
ஒரு போர்வீரன் உருவாக காரணம்
எங்கள் தேவாலயம், லைஃப் சர்ச், உலகெங்கிலும் உள்ள பல உள்ளூர் தேவாலயங்களுடன் இணைந்து பணியாற்றுவோம். "ஆப்பிரிக்காவின் இதமான இதயம்" என்று அழைக்கப்படும் அழகான, ஆனால் பொருளாதார நிலையில் பின்தங்கிய மலாவி என்னும் நாட்டிற்கு நான் சமீபத்தில் பயணம் மேற்கொண்டேன்.
முழு பயணமும் வியக்கத்தக்கதாக இருந்தது, என் அனுபவங்களிலிருந்து உங்களிடம் லேயாளின் கதையை நான் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் சிட்டிபா என்னும் ஊரின் அருகில் வசிக்கிறார், இது மிகவும் தொலைதூரத்தில் ஒதுக்கமாய் உள்ளது ஆகவே பல அமைப்புகள் அங்கே செல்வதில்லை.
நாங்கள் சந்திப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவளுடைய தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் லேயாளை "ஒளி" என்ற சிறிய குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ஆனால் லியா சேர தயங்கினார்.
அக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறு தொகையை சேமிப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும். அனால் அவளுடைய குடும்பத்தின் பொருளாதார நிலை மிக நலிவுற்றதாக இருந்தது. அவர்களால் பிள்ளைகளை கற்பிப்பதற்கோ, அவர்களின் வீட்டின் மேற்கூரையை பழுதுபார்ப்பதற்கு கூட பணம் இல்லாமல் இருந்தார்கள். ஆனாலும், அவளுடைய நண்பர்கள் உற்சாகப்படுத்தியதால் அவளும் அக்குழுவில் இணைந்தாள்.
சில மாதங்களுக்குப் பிறகு, எந்தவொரு குழு உறுப்பினரும் சேமிப்பு பணத்தை கடனாக வாங்கலாம், அதை அவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, பின்னர் அதை திருப்பிச் செலுத்தலாம். ஒரு வருடம் கழித்து, மொத்த சேமிப்பும் குழுவிற்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும், அடுத்த ஆண்டு இது மீண்டும் முதலிலிருந்து தொடங்கப்படும்.
லேயாள் சேமிப்பு நிதியிலிருந்து ஒரு சிறிய தொகையை கடனாக பெற்று கரும்புகளை வியாபாரத்திற்காக மொத்தமாக வாங்கி, அதை விற்று, கடனை அடைத்து சிறு லாபமும் ஈட்டினாள்.
இதன் மூலம் அவளுக்குள், அவளால் இதை செய்ய முடியும் என ஒரு புது நம்பிக்கை பிறந்தது.
அவள் மீண்டும் ஒரு லட்சியத்தோடு கனவு காண ஆரம்பித்தாள். சிறு வயது முதலே தையல் கற்றுக்கொள்ள விரும்பிய அவளுக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருந்தது. இந்த சேமிப்பு திட்டம் அதை சாத்தியமாக்கியது, அதிலிருந்து பெற்ற கடனை கொண்டு அவள் தையல் பயிற்சி பெற்றதோடு மட்டுமன்றி ஒரு தையல் இயந்திரத்தையும் தனக்கென வாங்கினாள்.
அவளுடைய தன்னம்பிக்கை வளர்ந்தது. லேயாள் மீண்டும் துணி வாங்க குழுவிலிருந்து கடன் பெற்றாள். ஆடைகள் தைத்து அதை விற்று நல்ல லாபமும் ஈட்டினாள். தனது லாபத்தால் அவள் தனது குடும்பத்திற்கு கால்நடைகளை வாங்கினாள், அவளுடைய வீட்டின் மேற்கூரையை பழுது பார்த்தாள். மேலும் அவள் கணவனுக்கு ஒரு மிதிவண்டி வாங்கி தந்தாள், அதை அவன் வாடகை சேவை வழங்க பயன்படுத்தினான்.
லேயாள் எவ்வளவு பெரிய போராளி என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தார்கள் என எனக்கு உறுதியாக தெரியவில்லை, ஆகவே நீங்கள் மறக்க முடியாத ஒன்றை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
லேயாளின் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது, அவர்கள் சுத்தமான நீரை பெறுவதற்கு இரண்டு மணி நேரம் தொலைவிற்கு நடந்து சென்று சுமந்து வர வேண்டும்.
நாங்கள் சந்திப்பதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, லேயாள் தனது கடின உழைப்பினால் சேர்த்து வைத்த சேமிப்பை பயன்படுத்தி, தனது வீட்டு முற்றத்தில் ஒரு கிணறு வெட்டினாள், இதனால் 100க்கும் மேற்பட்ட சுற்றத்தார் பயன்பெற்றனர்.அவர்களுக்கு சுத்தமான, உயிர் கொடுக்கும் தண்ணீர் எளிதில் கிடைக்க வழி செய்தாள்.
நாம் அனைவரும் போராட நமக்கு ஒரு காரணம் தேவை. என் போராட்டத்தை என் குடும்பத்திற்காக தொடங்கி, பின்னர் அதை அதோடு விட்டு விடாமல் நம்மை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் போராட லேயாளின் கதை என்னை தூண்டியது. நான் மக்களின் வாழ்க்கைக்கு தேவையானவைகளை அவர்களுக்கு தொலைவிலிருந்து அருகாமையில் கிடைக்க வழி செய்ய விரும்புகிறேன்.
சவால்: நீங்கள் என்ன காரணத்திற்காக போராடுகிறீர்கள்? உங்களைத் நலத்தை தாண்டி வேறு எதற்காகவாவது நீங்கள் போராடுகிறீர்களா? உங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட யாருக்காகவாவது? நீங்கள் எவ்வாறு மற்றவர்களுடன் இணைந்து செயல்படுகிறீர்கள்?
--ஜெஃப், மற்றவர்களுக்காக போராடும் போர்வீரன்.
இந்த திட்டத்தைப் பற்றி
நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.
More