போர்வீரன்மாதிரி
ஒரு போர்வீரனின் தேற்றம்
எனது தாயாரின் இறுதி சடங்கிற்கு பிறகு அவர்கள் பயன்படுத்திய பரிசுத்த வேதாகமம் என்னிடம் கொடுக்கப்பட்டது, அதற்குள் அவர்கள் கடைசியாக படித்த பகுதி குறிக்கப்பட்டிருந்தது. நான் அதைத் திறந்து மத்தேயு 10:38 இல் இயேசு கூறிய வார்த்தைகளைப் படித்தேன்:
“தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.”
16 வயதில் தாயை இழந்த எனக்கு அந்த துக்கமே நான் சுமக்க வேண்டிய சிலுவையாக இருந்தது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நான் கண்ணீர் சிந்தவோ, கடவுளை பழித்து பேசவோ அல்லது நான் என்னை தாக்கும் என்று நினைத்த மற்ற துன்பமோ விரக்தியோ ஏற்படவில்லை. அதற்கு பதிலாக ஒன்றிலும் ஈடுபாடற்றவனாக மாறினேன். இந்த உணர்வு எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
என் தாயின் இழப்பை குறித்து நான் வருந்தினேனா? நான் மெய்யாகவே என் தாயை நேசித்தேனா? என எனக்குள் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழும்பின.
காயங்கள் மற்றும் இழப்புகளின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும் அன்று அன்னை நானே சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் எனக்குள் ஒரு வெறுமை இருப்பதாக தோன்றியது, உள்ளுக்குள் இறைவனுக்கு கூட இடம் அளிக்காத ஒரு வெற்றிடம்.
கர்த்தர் எப்பொழுதும் நம்முடைய பெலவீனங்களை எடுத்து பெலனாக மாற்றுவார். எப்படியோ இந்த சோதனை காலத்தில் நான் ஆண்டவரின் இருதயத்தை உணர ஆரம்பித்தேன்.
சிறுவயது முதலே அம்மாவின் உடல் நலக்குறைவை பார்த்தே வளர்ந்தேன், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை செல்வதும், பெரிய மருத்துவ நிபுணர்களை சந்திப்பதும் என ஓடியது, ஆனாலும் அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. பல இரவுகள் தீவிர சிகிட்ச்சை பிரிவு வாசலில் காத்திருந்து என் பள்ளி வேலைகளை செய்து அம்மாவின் உடல் நிலை சீராக ஜெபம் செய்ததுண்டு. அவர்கள் இக்கொடும் நோயை எதிர்த்து வாழ்வ்வின் பல நிலைகளிலும் போராடியதை நான் கண்டேன். என் தாய் அப்போஸ்தலர் பேதுரு குறிப்பிட்ட சிலுவை பாடு போல, தேவபெலன் பெற்று போராடினார்கள்.
இப்பொழுது அதை பின்னிட்டு பார்க்கும்பொழுது, அவர்கள் வெளிப்படுத்திய அந்த பெலன், கிறிஸ்துவின் அன்பு எப்போதும் வெளியரங்கமாய் இராது ஆனால் நமக்கு ஊக்கத்தையும் தைரியத்தையும் அளிக்கும் என்பதை எனக்கு உணர்த்தியது.
என் தந்தை தன்னை தானே தேற்றி மீண்டு வந்ததை பார்த்து நான் பெலனடைந்தேன். மீளாத்துயரிலும் அவர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்ள எடுத்த முயற்சிகளை கண்டபோது, நம் பரம பிதா நமக்காக என்னவெல்லாம் செய்வார் என உணர்ந்தேன். மேலும் வலிமையான ஆண்கள் அழுவார்கள் என்றும், அதை நாம் தனியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றும் கற்று கொண்டேன். என் தந்தை மற்றும் என் சகோதரனிடமிருந்து காயங்கள் மற்றும் சோதனைகள் இறைவனை காண்பதற்கான வழிகள் என்று அறிந்துகொண்டேன்.
வலிகள் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கும், அனால் அவை நிரந்தரமலல்ல. உடைந்த எலும்புகளை பெலப்படுத்துவது போன்று தேவன் உங்களை மீண்டும் பெலப்படுத்த விரும்புகிறார். கர்த்தர் நமக்காக போர் செய்வார், அவர் நமக்காக காயப்பட்டார், நம்மோடே கூட இருந்து நம் போராட்டத்தில் அவருடைய மிகுந்த பெலனை அளித்து நம்மை தாங்குவார்
ஜெபம்:தேவனே, நான் மறைத்து வைத்திருக்கும் காயங்களை எனக்குக் காண்பிப்பீரா? என் காயங்கள் குணமடைய நீர் எனக்கு உதவுவீரா? அத்தகைய இரக்கமும் நேசமும் நிறைந்த என் அன்பு பிதாவே, ஆமென்.
-லூக்கா, தேற்றுதலுக்கான போர்வீரன்
இந்த திட்டத்தைப் பற்றி
நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.
More