மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்புமாதிரி
மிகுந்த சந்தோஷத்தை தெரிந்துகொள்ளுதல்
முதல் நூற்றாண்டு இஸ்ரவேல் தேசத்தில், ஒரு இளம் வாலிபவயது திருமணமாகாத பெண் கர்ப்பந்தரிப்பது என்பதை கற்பனைசெய்து பாருங்கள். திருமணமாகாமல் கர்ப்பந்தரிப்பது என்பது ஒரு பெண்ணை மரணதண்டனையை பெற்றுக்கொடுக்கும் அந்த காலம். நீங்கள் உங்கள் வீட்டிற்குள்ளே சென்று உங்கள் குடும்பத்தினரிடமும், உங்களை திருமணம் செய்யப்போகும் உங்கள் வருங்கால கணவரிடமும், திருமணமாவதற்குமுன்னே நீங்கள் தேவனுடைய குமாரனை கர்ப்பந்தரித்திருக்கிறீர்கள் என்று தெரிவித்தால்... அவர்கள் எல்லாரும் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை என்பதை யோசித்து பாருங்கள்..
மரியாளும் அதே நிலையில் தான் இருந்தார்கள், தேவ தூதனிடத்தில் அவர்கள் இவ்வாறாக சொல்லும்போது “ "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்".” (லூக்கா 1:26-27 and வ. 38)
வேதத்திலே இந்த நிகழ்வின் காலத்துக்கு திரும்பி மேலோட்டமாக மரியாள் தான் விட்டுக்கொடுக்கும்படியாக எவ்வளவு பெரிய தியாகம்செய்யும்படி கேட்கப்பட்டிருந்தது? என்று பார்ப்பது மிகவும் எளிது. இருந்தாலும், தேவதூதன் மரியாளிடத்தில் அனுப்பப்பட்டபோது, மரியாள் வீண்பேச்சு, ஒதுக்கிவைத்தல், அவமானம் போன்ற விளைவுகள் மற்றும் மரணமே ஏற்படும் பட்சத்திலும் உண்மையான கீழ்படிதலோடு ஏற்றுக்கொண்டு பதிலளித்தார். பிற்பாடு மரியாள் தேவனுடைய உண்மைத்துவத்துக்கு எதிரொலியாக செயல்பட்டது மாதிரி, எப்பொழுதுமே கைவிடாத இயேசு கிறிஸ்துவை மிகுந்த சந்தோஷத்துடனே துதிப்பதை தெரிந்துகொண்டாள்.
இன்றைக்கு நீங்களும், மரியாளை போல, உங்களை நேசிக்கிற மற்றும் உங்களை குறித்து பெரிதான திட்டங்களை வைத்திருக்கும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டும் அவரால் கடாட்சிக்கப்பட்டும் இருக்கிறீர்கள் என்பதை எண்ணிப்பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம். தற்சமயம் நீங்கள் எந்த மாதிரியான சூழ்நிலையிலே வாழ்ந்துகொண்டிருந்தாலும், தேவன் ஒருபோதும் அவருடைய பிள்ளைகளை கைவிடுகிறவர் அல்ல என்பதை எண்ணிக்கொள்ளுங்கள். மேலும், உங்களிடத்திலிருந்து அதை தொடங்குகிறவருமல்ல.
தற்போது ஒருசில நிமிடங்கள் மரியாளுடைய வாழ்க்கையை குறித்த தேவனுடைய திட்டங்களுக்கு மரியாளுடைய பதில் எவ்வாறு இருந்தது என்பதை பிரதிபலிப்போம். அதே மாதிரியான உண்மையான கீழ்படிதலோடும் மிகுந்த சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வாழ தேவனிடத்தில் உதவி மன்றாடுவோம்.
இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்:
தேவனாகிய கர்த்தாவே, நிலையான உம்முடைய அன்பிற்கு நன்றி. உம்மால் செய்யமுடியாத காரியம் எதுவுமேயில்லை. தேவரீர் உண்மையுள்ளவராயிருக்கிறதினிமித்தம் ஒவ்வொரு சூழ்நிலைகளிலேயும், பருவங்களிலேயும், உம்மையே நோக்கி பார்க்கவும் உம்மை துதிக்கவும் எனக்கு உதவி செய்யுங்க. நான் உம்மை நேசிக்கிறேன், உம்மையே ஆராதிக்க தெரிந்துகொள்ளுகிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.
More