மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்புமாதிரி
கதை தொடங்குகிறது
மிகுந்த சந்தோஷம் என்றால் என்ன?
தேவனுடைய சுவாசத்தால் இப்போது தான் நீங்கள் உயிர் நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள் என்றும், மேலும் தேவன் உங்களை பூமியிலிருந்து தூக்கியெடுக்கும்போது உங்களைப்பார்த்து புன்னகை செய்கிறார் என்றும் கற்பனைச் செய்துப் பாருங்கள், அதிலிருந்து, உங்களை பார்க்கும்போதெல்லாம் அவருடைய முகம் புன்னகையோடு பிரகாசமடையும். தேவன் உன்னிடத்தில் செய்யும்படியாக வலியுறுத்தியிருக்கும் காரியத்தை நீ செய்யமுடியாமல் போகும் நாள்வரைக்கும் வாழ்க்கை பரிபூரணமாக இருக்கும். மேலும், இந்த எதிர்த்து போராடும் குணத்தினிமித்தம், உன்னை முழுமையாக அறிந்தவரும் உன்னை இடைவிடாமல் நேசிக்கிறவருமிடமுமிருந்து உன்னை நீயே பிரித்து விலக்கிக் கொள்ளுகிறாய். ஒரு நொடிப்பொழுதில், தேவனுடனான நித்திய நெருக்கம் என்பது அவரை விட்டு பிரியும் நித்திய பிரிவாக மாறிவிடுகிறது.
ஆதியாகமம் 1-3... ல் இதுதான் நடக்கிறது. ஆனால் நன்றி சொல்லும்விதமாக, கதையின் முடிவு இதுவல்ல. மனிதகுலம் சீரற்றுப்போனாலும், முறிந்துபோன தம்முடைய உறவை சரிசெய்து மீட்டெடுக்கும்படியாக ஒருவரை அனுப்புவேன் என்றும் நமக்கு வாக்குத்தத்தம் அளிக்கிறார்
தேவன் மனித சாயலாக இந்த பூமியிலே பிறந்து தேவன் நம்மோடிருக்கிறார் என்னும் வாக்குத்தத்தை நிறைவேற்றினார் அதுவே, தேவன் மனித குலத்துக்கு அளித்த வாக்குத்தத்தமாகிய கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கிறது.
அடுத்த வாரத்தில், வாழ்க்கையை மாற்றும் மிகுந்த சந்தோஷத்தை எடுத்துக்காட்டுகின்ற பலருடைய வாழ்க்கையை வேதத்திலிருந்து பார்ப்போம். இன்று, இரட்சகரின் வருகை என்பது தேவனிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து செல்வதில் சிக்கிய மக்களுக்கு என்ன அர்த்தம் என்பதைப் பிரதிபலிப்பதன் மூலம் கிறிஸ்து பிறப்புக்குத் தயாராகுங்கள், மேலும் “தேவன் நம்மோடிருக்கிறார்" என்னும் வாக்குத்தத்தை நிறைவேற்ற நம்மிடத்தில் இரங்கி வந்த இயேசுவுக்கு நன்றி சொல்லுவோம்..
இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்:
தேவனே, நீங்கள் ஒரு குழந்தையாக பூமிக்கு வந்ததால் தான் நான் முடிவில்லாத சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். இந்த வாரம், என் இரட்சகரின் பிறப்பை ஒரு புதிய வழியில் மகிமைப்படுத்த எனக்கு உதவுங்கள். வேதத்தில் உள்ள கிறிஸ்து பிறப்பின் பகுதி வேதத்திலிருந்து தாவி சென்று என்னை மாற்றுமா? உமது மகிமையை எனக்குள் பெற்றுக்கொள்ள இன்று என் இருதயத்தைத் தயார் படுத்துங்க.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.
More