மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்புமாதிரி
மனித வடிவிலே “மிகுந்த சந்தோஷம்”
“சந்தோஷம்” என்ற வார்த்தையை நீங்கள் நினைக்கும் போது, என்ன நினைவுக்கு வருகிறது?
நீங்கள் பழைய ஏற்பாட்டு காலங்களில் வாழ்ந்த இஸ்ரவேலராக இருந்திருந்தால், ஆராதனையில் மிகுந்த சந்தோஷம் அடைந்து கூச்சலிடுவது போலவும், மத விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போலவும், ஜனங்களுக்கு தேவன் உண்மையாயிருப்பதை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் அதை பிரதிபலிப்பதைப்போலவும் இருந்திருக்கும்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் விஷயங்கள் சற்று மாறுகின்றன. கிறிஸ்துவின் பிறப்பின் காரணமாக, மகிழ்ச்சி எதிர்பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், துதியினால் நிறையப்பட்ட ஒரு உத்தரவாதமும் வருகிறது. அதனுடன் தேவன் தம்முடைய வாக்குத்தத்தில் உறுதியாயிருக்கிறதையும், எல்லாவற்றையும் உங்கள் நன்மைக்காகவும், தமது மகிமைக்காகவும் செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறீர்கள். மிகுந்த சந்தோஷமானது, உங்கள் கண்கள் இயேசுவின் மீது பதிந்திருக்கவும், இயேசுவை பிறருக்கு சுட்டிக்காட்டவும் உதவுகிறது. ஏனெனில் இயேசுவினால் மிகுந்த சந்தோஷம் நிறைவேறியது என்பது இயேசு.
கிறிஸ்து பிறப்பு பண்டிகையின் வருகையை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே, இயேசு நம்மோடு வாசம்பண்ணும்படியாக விண்ணுலகத்தை விட்டு பூலோகத்தில் தோன்றியதன்மூலம் நாம் கிடைக்கப்பெற்ற அந்த மிகுந்த சந்தோஷத்திற்காக, சில நிமிடங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.
இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்:
ஆண்டவராகிய தேவனே, உம்மாலே என் தேவைகளெல்லாம் எனக்கு எல்லாம் கிடைக்கிறது. தேவன் நம்மோடிருக்கிறவராக ஆனதற்காக உமக்கு நன்றி. எங்கள் மிகுந்த சந்தோஷத்தின் பிறப்பிடமாக இருப்பதற்காகவும், நாங்கள் ஆராதிப்பதற்கு காரணமாயிருப்பதற்காகவும் உமக்கு நன்றி. உம்மோடு தனிமையிலும், நெருக்கமாகவும் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் உன்னதமான பலியாக எங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படுவதை தெரிந்துகொண்டதற்காக உமக்கு நன்றி. தேவரீரே, நான் உம்மை ஆராதிப்பதற்கு ஒரு ஆதாரம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.
More