மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்புமாதிரி
எல்லா ஜனத்துக்கும்
அது ஒரு, விண்மீன்கள் மின்னிக்கொண்டிருக்கின்ற, பெத்லகேம் ஊரிலுள்ள ஒரு மலைப்பகுதியின் அமைதியான நள்ளிரவு. சுற்றிலும் மேய்ப்பர்கள் குறட்டை மற்றும் ஆடுகளின் சத்தத்தைத் தவிர வேறெந்த சத்தமே கேட்கமுடியாது. ஆடு மேய்க்கும் தொழில் என்பது, மேய்ப்பர்களை தங்கள் சமூகத்தை விட்டு தூரப்படுத்தி தனிமைப்படுத்தும் ஒரு தொழில். அந்த இரவினிலே, திடீரென்று மிகவும் பிரகாசமுள்ள ஒரு வெளிச்சம் அவர்கள் மேல் ஒளித்தது, பரம சேனையின் திரள், தேவதூதனோடு தோன்றி, இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறுகிறான். அனைத்தும் மக்கள் .
அந்த மேய்ப்பர்களைப் போலவே, அற்புதமான கிறிஸ்து பிறப்பைக்குறித்து மகிழ்ச்சியடைய நீங்களும் அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் யார் என்பது முக்கியமல்ல கிறிஸ்து பிறப்பின் சந்தோஷம் அனைவருக்கும் உள்ளது: பணக்காரர்கள், ஏழைகள் மகிழ்ச்சியிலிருப்பவர்கள், தனிமையிலிருப்பவர்கள், மறக்கப்பட்டவர்கள், மற்றும் பெரிதும் நேசிக்கப்பட்டவர்கள்.
இன்றைய வேத பகுதியை நீங்கள் வாசிக்கும்போது, சில நிமிடங்கள் ஒதுக்கி, எல்லா ஜனத்தின் இரட்சிப்புக்காக பிறந்த கிறிஸ்துவினிமித்தம் இலவசமாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற இந்த மகிழ்ச்சிக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். < /span>
இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்:
தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் பிறப்பால் எனக்கு தாராளமாக வழங்கப்பட்ட சந்தோஷத்திற்கு நன்றி. என்னை பெயர்சொல்லி அழைத்ததற்கு நன்றி. இன்று, இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களை மகிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். மேலும் இன்று உம்மை ஆராதிப்பதையே நான் தெரிந்து கொள்ளுகிறேன்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.
More