மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்புமாதிரி

Joy: A Countdown to Christmas

7 ல் 7 நாள்

விலையுயர்ந்த பரிசு

இயேசுவை தொழுது கொள்ள கிழக்கில் இருந்து ஞானிகள் வந்தபோது பொன், வெள்ளைப்போளம், மற்றும் தூபவர்க்கம் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை அவர்களுடன் கொண்டு வந்தார்கள்.

யோசித்து பாருங்கள்! மரியாளும் யோசேப்பும் இவ்வாறாக சொல்லியிருந்தால், எவ்வளவு மோசமாயிருந்திருக்கும். "உங்கள் சிந்தனையை நாங்கள் பாராட்டுகிறோம் ஆனாலும் எங்களுக்கு இந்த பரிசுகள் மிக அதிகம், மற்றும் மிக அருமையாகயாவும் இருப்பதால் நாங்கள் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.”

இது சம்பந்தமல்லாதது போல தோன்றுகிறது. தேவன் நம்மை ஆசீர்வதிக்க முயற்சிக்கும்போதும் இந்த மாதிரி பதிலளிப்பது மிகவும் எளிதானதே.

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரைப்போல நம்மை மறுரூபப்படுத்தி அவர் விரும்புகிற ஆவியின் நற்கனிகளை நம்முடைய வாழ்க்கையில் உருவாக்குகிற பரிசுத்த ஆவியை நமக்கு தந்தருளுகிறார். மிகுந்த சந்தோஷமும் அந்த வரங்களில் ஒன்றே.

எதிர்பாராதவிதமாக, தேவனை இழிவுபடுத்துகிற கிரியைகளை நீங்கள் தெரிந்தெடுக்கும்போதும், கிறிஸ்துவின் அன்பிற்கு நீங்கள் தகுதியற்றவர்கள் என்று கருதும்போதும். ஆனாலும், உங்கள் இருதயத்தையும் மனதையும் மாற்ற கிறிஸ்துவை நீங்கள் அனுமதிக்கும்போது அவர் உங்களை பார்க்கிறதுபோல நீங்களும் உங்களைப் பார்க்க தொடங்குகிறீர்கள். அவரது பெயரால் அழைக்கப்படுகிறோம், அவரது இரத்தத்தால் இரட்சிக்கப்படுகிறோம். நீங்கள் இயேசுவை சிநேகிக்கும்போது அவருடைய வரங்களுக்காக வாஞ்சிக்கத்தொடங்குகிறீர்கள், தேவனை இழிவுபடுத்துகிற கிரியைகள் உங்களை ஈர்க்க முடியாமல் போய்விடும்.

இன்றைக்கு, வாழ்க்கையைக் காட்டிலும் உங்களை தேவன் அதிகமாக நேசிக்கிறார் என்பதை நினைவுகொள்ளுங்கள். அதனால் தான் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பூமியிலே குழந்தையாகப் பிறப்பதை தெரிந்து கொண்டார். உங்களை அவரோடு நெருக்கமாக சேர்த்துக்கொள்வதற்கு இதைவிடவும் அவர் செய்யமுடியாதது வேறு எதுவும் இல்லை.

கிறிஸ்து பிறப்பு பண்டிகையினாலே நீங்கள் பரிசுகளிலேயே உன்னதமான பரிசை ஏற்றுக்கொள்ளமுடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகர், தேவன், உங்கள் வாழ்க்கையின் சிநேகிதர் என்று நீங்கள் அறிந்துகொள்வதன் மூலம் வருகிற மிகுந்த சந்தோஷமே அந்த பரிசு.

இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்:

தேவனே, இயேசுகிறிஸ்து என்னும் பரிசுக்காகவும், பரிசுத்த ஆவியின் கனிகளுக்காகவும் உமக்கு நன்றி. நான் நித்திய வாழ்வை பெற்றுக்கொண்டு உம்மோடு எப்போதும் வாழும்படியாக இந்த பூமியிலே ஒரு குழந்தையாக அவதரித்ததாக உமக்கு நன்றி. நான் உம்மை நேசிப்பதினால் இன்றைக்கும், என்றென்றைக்கும், நான் உம்மை மிகுந்த சந்தோஷத்தோடே ஆராதிப்பதையே தெரிந்துகொள்ளுகிறேன்.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Joy: A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.