மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்புமாதிரி
மிகுந்த சந்தோஷம் நிறைவேறியது
முதல் நூற்றாண்டு இஸ்ரேலியராக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு இரட்சகர் வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் 400 ஆண்டுகளாக உங்கள் ஜனங்கள் போர்கள், பஞ்சங்கள், அரசாங்க சதித்திட்டங்கள் மத்தியிலேயும் மற்றும் இடம்பெயர்ந்த அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ஒரு இரவு, இம்மானுவேல் என்ற பெயரில் ஒரு குழந்தை பிறக்கிறது, " தேவன் நம்மோடிருக்கிறார். " பல வருட காத்திருப்புக்குப் பிறகு, தேவனுடைய வாக்குத்தத்தம் துணிகளிலே சுற்றப்பட்டு முன்னணையிலே கிடத்தப்பட்டிருக்கிறதாக வருகிறது.
காலத்தைக்குறித்து நம்முடைய புரிந்துகொள்ளுகிறதற்கு அப்பாற்பட்டு தேவன் கிரியை செய்வதால், அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர் தாமதமாக செயல்படுவதாக அடிக்கடி காணப்படும். நம்முடைய குறுகிய மற்றும் தரைமட்ட தொலைநோக்குகளினால் அநேக காரியங்களை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத பட்சத்திலும், கிறிஸ்து பிறப்பு சம்பவம் நமக்கு தேவன் தம்மால் நிறைவேற்ற முடியாத காரியத்தை நமக்கு வாக்குத்தத்தமாக கொடுக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது.
தேவன் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் நம்மை தயார்படுத்துகிறார் என்பது பெரும்பாலும் நாம் காத்திருக்கும் காலங்கள் தான் சாட்சி. ஆதிமுதல் தேவன் தம்மை உண்மையுள்ளவராகக் காண்பித்து வருவதால், நம்முடைய மிகுந்த சந்தோஷம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையான உறுதியிலே நாம் நிலைத்து தங்கியிருக்கமுடியும்.
இன்று, தேவனின் உண்மையைப் பிரதிபலிக்கவும், அவர் தன்னை நம்பகமானவர் என்று நிரூபித்த வெவ்வேறு வழிகளை எழுதுங்கள்.
இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்:
ஆண்டவரே, இன்று மிகுந்த சந்தோஷத்தை தெரிந்துகொள்ள எனக்கு உதவுங்கள். உம்மை அறிந்துகொள்ளுவதின் வழியாக மாத்திரமே வருகிற மிகுந்த சந்தோஷத்தை நாங்கள் அனுபவிக்கும்படியாக உம்முடைய ஒரே குமாரனை இந்த பாவ உலகத்துக்கு அனுப்பினதற்காக உமக்கு நன்றி. இன்று, உம்முடைய வாக்குறுதிகள் நிறைவேறும்படியாக நான் காத்திருக்கும் இந்த நேரத்திலே, தேவரீர் என் வாழ்க்கையிலே செய்த காரியங்களைக்குறித்து மிகுந்த சந்தோஷம் அடைவதையே தெரிந்து கொள்ளுகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். இன்று நான் உம்மையே ஆராதிக்க தெரிந்து கொள்ளுகிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.
More