தேவனுக்கு செவிக்கொடுத்தல்மாதிரி
செவி கேளாத காதுகளின் அறிகுறி
ஆதாமும் ஏவாளும் தேவனை முதற்கண் அறிந்திருந்தார்கள்! அவர்களுடைய சந்ததியினரும் தேவனை அறிந்திருந்தார்கள், அல்லது போதுமான அளவாவது அறிந்திருந்தார்கள். மெதுவாக, ஆண்டுகள் செல்ல செல்ல, அநேக மக்கள் தேவனுக்கு நன்றி செலுத்த, அவரை ஏற்றுக்கொள்ள நிறுத்தினார்கள். பாவம் அதிகரித்தது.
அநேக பாவங்கள் பாவத்தில் வேர் பெற்று இருப்பதன் அறிகுறியாகவே இருக்கிறது: தேவ சத்தியத்திற்கு நம்முடைய காதுகளை மூடி வைத்து பொய்களை கேட்பது. நாம் தேவனை கண்டறியாமல் இருக்கும்போது நாம் சரியாக காண கூடாதவர்களாகிறோம். நாம் ஞானமாக யோசிக்க முடியாமல் மாறிவிடுகிறோம். சத்தியத்திற்கு செவிகொடுக்க மறுக்கிறோம். ரோமர் முதல் அதிகாரம் இந்த உண்மையை தெளிவாக உணர்த்துகிறது.
இதோ ஒரு சத்தியம்: சத்தியத்திற்கு செவிகொடாமல் இருப்பது, உண்மையில் தேவை வேண்டாம் என்று தள்ளுவதுதான். கிறிஸ்துவர்களாக, நாம் தேவனுடைய வார்த்தையை சத்தியம் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நம்முடைய காதுகளை பொய்யான வார்த்திகளிலிருந்து காத்து தேவனுடைய சத்தத்திற்கு திசைதிருப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதோடுகூட சத்தியத்தை மறுக்கிறவர்கள் எப்போதும் மற்றவர்களையும் சேர்த்து அவர்கள் ஏமாற்றுதலில் தள்ளுவார்கள், நாம் ஆதியாகமத்தில் இன்று கண்டதுபோல. இந்த கேள்விகளை கேட்டுப்பாருங்கள். தேவ சத்தத்தை நீ கேட்காமல் இருக்கும்போது யார் உண்மையில் ஆபத்தில் இருப்பது? உன் கணவர்/மனைவியா? உன் முதலாளியா? உன் பிள்ளைகளா? தேவன் நீ ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்பிய ஒரு அந்நியனாக கூட இருக்கலாம்?
நீங்கள் ஜெபத்தோடு தேவ சத்தத்தை கேட்கும்படி இந்த நேரத்தை செலவிடுங்கள்.
பிதாவை கேளுங்கள்: நான் நம்பும் எந்த பொய்யோ அல்லது எல்லா பொய்களையோ எனக்கு தயவு செய்து வெளிப்படுத்த மாட்டீரா?
இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “No Other Name” by Hillsong Worship
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.
More