தேவனுக்கு செவிக்கொடுத்தல்மாதிரி

Listening To God

7 ல் 4 நாள்

ஆசையினால் ஏமாற்றப்படுவது

பாவத்தின் மூலக்கூறு இந்த பொய்களினால் துவங்கியது: தேவன் நல்லவர் அல்ல. அவரை விசுவாசிக்க முடியாது, அவர் நம்மை தள்ளி வைக்கிறார். இந்த ஏமாற்றுதல் இன்னமும் தொடர்கிறது. அதுமாத்திரம் அல்ல, ஏவாளைப்போல, நம்முடைய இயற்கையான சுபாவம் இந்த பொய்யையே நம்புகிறது! இந்த ஏமாற்றம் எல்லாம் நம்மை தேவனிடம் இருந்து பிரிக்க பிசாசு செய்யும் தந்திரங்கள்.

ஏவாள் அந்த கனியை பார்த்து அது அழகாகவும் ருசியாகவும் தோன்றுவதாக கண்டால். அதிக அறிவு, புத்தி மற்றும் வல்லமையும் கிடைக்கும் என்ற எண்ணத்தால் அவள் கவற்சிக்கப்பட்டால். நீ தேவனைப்போல் இருப்பாய். ஐயோ, அவள் ஏமாற்றப்பட்டால்!

உன்னை குறித்து என்ன? எத்தனை முறை நீ உன்னுடைய கண்களின் இச்சையினால் எத்தனை முறை கவர்ச்சித்து இழுக்கப்பட்டிருக்கிறாய்? உங்களை சோகப்படுத்த அல்ல, உங்களை எச்சரிக்கவே இந்த கேள்வியை கேட்கிறேன். ஏனென்றால், நண்பனே, இவ்வாறு நீ செய்யவேண்டியதில்லை!

தேவனுடைய சத்தத்திற்கு தொடர்பில் ஜீவிப்பது என்றால் அவருடைய வழிமுறைகளை கீழ்ப்படிவதாகும். அவருக்கு மகிமை தந்து, நன்றி சொல்லி ஒவ்வொரு நொடியும் துதித்து ஜீவி ஏனென்றால் அவர் உன்னோடு எப்போதும் இருக்கிறார்! இந்த பரிசுத்த தொடர்பு இருப்பதால் நீ எல்லா சூழ்நிலையிலும் உன்னுடைய விசுவாசத்தை அவர் மீது வைத்து உன்னை ஏமாற்றும் அனைத்து காரியத்திற்கும் உன் செவியையும் பார்வையையும் மூட முடியும்.

இந்த உலகம் என்னுடையதல்ல, உன்னுடையதும் அல்ல! ஒரு புதிய பூமியும் பாரமும் அவரை ரட்சகராக விசுவாசிக்க நிலைக்கும் ஒவ்வொருவருக்கும் காத்துக்கொண்டிருக்கிறது. எல்லா கலாச்சார புதுமைக்கும் நாம் அசையவேண்டியதில்லை. எல்லா நவீன காரியத்தையும் இழந்துவிடுவோமோ என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை ஏனென்றால் நமக்காக நித்திய வெகுமதி காத்துக்கொண்டிருக்கிறது. தேவனே நல்ல பங்கு என்று அறிந்துகொள்வீர்கள். அவரே நம்முடைய எல்லாமும் ஆழமாக இருந்து, நம்மை நிறைவாக்குவார்!

பிதாவை கேளுங்கள்: உம்மேல் என் இருதயத்தின் வாஞ்சை இருக்க நான் எதை அறிந்துகொள்ள வேண்டும்?

இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “Clear the Stage” by Jimmy Needham

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Listening To God

ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.