தேவனுக்கு செவிக்கொடுத்தல்மாதிரி

Listening To God

7 ல் 6 நாள்

அந்நியனால் ஆபத்து

கிறிஸ்துவின் சரீரத்தில் அநேகர் அதிகமாக பாதிக்கப்படுவது வஞ்சனையான அந்நியனின் குரலினால். தேவ சத்தத்தைக் கேட்பது மிகவும் சவாலாகிறது இந்த போட்டியிடும் தேவனற்ற கூச்சலினால். இதினால் ஏற்படும் துயரம் என்னவென்றால், தேவனுடைய பண்புநலனையும் அவர் வார்த்தையில் கற்று கொடுக்கும் உண்மையையும் அவர்கள் சந்தேகிக்க துவங்குகிறார்கள்.

இந்த பிரச்சனையின் துவக்கத்தை தோட்டத்தில் வாழ்ந்த, ஏவாளிடம் பார்க்கிறோம்.

நான் வியப்படைகிறேன்.
ஏவாள் ஏன் அந்த சர்ப்பத்தின் சூழ்ச்சிமிக்க திசை மாற்றும் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு இருந்தாள்?
இது அந்நியனின் குரல் என்று ஏன் அவள் கண்டறியவில்லை?

நான் யோசித்து பார்க்கிறேன். தேவனாகிய தன் மேய்ப்பரை, ஏவாள் எவ்வளவு உண்மையாக அறிந்திருந்தாள்? சுலபமாக அவள் எதிரியின் பொய்யினால் ஏமாற்ந்துவிட்டாளே.
ஏவாள் ஏன் உடனடியாக எளிதில் ஏமாற்ந்தாள்?

ஏவாள் உண்மையை அறிந்திருந்தாலும், அவள் அதில் திடமாக நாட்டப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். தேவன் "சொன்னதை" அவள் அறிந்திருந்தாள் ஆனால் அவர் யாரென்று முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை-முழுவதும் நம்ப தகுந்தவர், நல்லவர். அவளிடமிருந்து எந்த நன்மையையும் அவர் தடுக்கமாட்டார் என்று அவள் புரிந்துக்கொள்ளவில்லை.

அந்த தடைசெய்யப்பட்ட கனியை புசிப்பதற்க்குமுன், பொல்லாத, பொய்யான காரியங்களை குறித்தும், தன் பிதாவை கீழ்ப்படியாதபடி ஏமாற்றப்படுவாள் என்றும் அறியாமல் இருந்தாள்.

ஆனால் இது நமக்கு உண்மையல்ல! நாம் அதை அறியாமல் இல்லை! தேவனுக்கே மகிமை நமக்கு தேவனுடைய வார்த்தை உண்மையான வழிகாட்டியாகவும், பரிசுத்த ஆவியானவர் (உண்மையின் ஆவியானவர்) ஒரு ஆலோசனைக்காரராகவும், மற்றும் கிறிஸ்து இயேசு நம்முடைய இரட்சகராகவும் உண்மையாக பரிந்து பேசுகிறவராகவும் கொண்டிருக்கிறோம்!

ஆனாலும், ஏவாளைப்போல, நாமும் அந்நியனின் பொய்களை கேட்பதில் ஈர்க்க பட்டுவிடுகிறோம். ஏன்?

ஒரு காரணம், அநேக வேளையில், நாம் எதிரியின் பொய்களை நம்முடைய "பொழுதுபோக்குகளினால்" நாம் வரவேற்க்கின்றோம். தொலைக்காட்சி, இணையதளம், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள், இவைகள் அநேக வேளையில் தேவ சத்தமில்லாமல், நம்முடைய சமுதாயத்தை கைப்பற்றிக்கொண்டது. ஆனாலும், சொல்லமுடியாத மணிநேரம் இந்த தேவனில்லாத, பொய்யான சத்தத்தில் நாம் செலவழிக்கிறோம். அதனால் நம் இதயமும் மனதும் ஜீவனுள்ள, உயிர்ப்பிக்கும், ஊக்கமளிக்கும் தேவ வார்த்தையற்று பலம் குறைந்து, அசுத்தமாகி, ஊட்டசத்தில்லாமல் போகிறது!

நாம் நம்முடைய மேய்ப்பரை அறியவேண்டும்! அவருடைய பசுமையான மேய்ச்சலில் நாம் சத்து பெற வேண்டும். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்க நாம் அவரிடம் கிட்டி சேர வேண்டும்.

நாளைய தியானத்தை விட்டுவிடாதீர்கள், "மேய்ப்பரை அறிவது" என்ற தலைப்பில் நாளை நாம் பயனுள்ள நுண்ணறிவுபெற்று நிறைவு செய்வோம்!

பிதாவிடம் கேளுங்கள்: உம்மிடம் இருந்து வராத மற்ற சத்தங்களுக்கு நான் செவிகொடுக்கிறேனா?

இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “My Heart Is Yours” Kristian Stanfill

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Listening To God

ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.