தேவனுக்கு செவிக்கொடுத்தல்மாதிரி
உன்னுடைய ஆலோசனை குழுவில் யார் உள்ளனர்?
தேவன் அனேகவேளையில் அவருடைய சித்தம் மற்றும் ஞானத்தை கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு உன்மூலம் சொல்லுவார்! என்னுடைய இருதயத்திருக்குளாக செய்தியை மற்ற ஒரு கிறிஸ்துவர் மூலம் எத்தனைமுறை தேவன் சொல்லியிருக்கிறார் என்று நான் உங்களுக்கு எண்ணி சொல்ல முடியாது! அவருடைய செய்திகளை என் பாஸ்டர்கள் மூலம், ஒரு குறுஞ்செய்தி, என் நண்பர்கள், என் பிள்ளைகள், ஒரு இணையதளம், அல்லது என் ஜீவிய குழுமம் மூலம். நான் இவர்களை என் ஆவிக்குரிய ஆலோசனை குழுவாக பாவிக்கிறேன். அவர்கள்: என் கணவன் / மனைவி, என் ஆலோசனை நண்பர், என் ஜெப துணை, என் நண்பர் மற்றும் என் பெற்றோர்.
உங்களை பற்றி என்ன? நீங்கள் மதிக்கும் விசுவாசிகளிடம் பேசி அறிவுரையை பெற்றுக்கொள்கிறீர்களா? மற்ற கிறிஸ்துவர்களோடு (முக்கியமாக தேவனுடைய வார்த்தையில் நிலைநின்று வளர்கிறவர்கள்) தொடர்பில் நிலைத்து இருப்பது உன்னுடைய தனிப்பட்ட விசுவாச பிரயாணத்தில் மிக உதவியாக இருக்கும்.
அவர்களுக்கு செவிகொடுத்து மாத்திரம் போதாது. நீங்கள் கேட்ட அறிவுரை மற்றும் ஞானத்திற்கு நடைமுறை பயிற்சி செய்கிறீர்களா?
ஞானமாக இருந்து கிறிஸ்துவ குழுமத்தோடு இரு! உன்னுடைய விசுவாச குடும்பத்திற்கு செவிகொடு. நமக்கு அவர்கள் தேவை, அவர்களுக்கு நீ தேவை. இன்றைய வேத வாசிப்பு நீதிமொழிகள் 18:2 நேரடியாக நாம் "எல்லாம் அறிந்தவர்கள் போல்" வாழ்ந்தால் அது தவறு என்று சொல்கிறது.
என்னை கேட்டால், நான் முட்டாளாக இருக்க விரும்பவில்லை. எனக்கு உதவி வேண்டும். எனக்கு ஞானம் வேண்டும். நான் தாழ்மையாக கற்றுக்கொள்ளும் மனப்பாங்கோடு இருக்க விரும்புகிறேன் அதன்மூலம் தேவனுடைய வழிகாட்டுதல், திருத்துதல் மற்றும் நேசத்தை பெற்றுக்கொள்வேன். என்னுடைய இருதயம் தாழ்மையாக இருக்க வேண்டும்-ஏனென்றால் தேவன் நம்மோடு மற்ற பிள்ளைகள் மூலம் பேசுவார்.
பிதாவிடம் கேளுங்கள்: என்னுடைய ஆவிக்குரிய ஆலோசனை குழுவில் யாரெல்லாம் இருக்க வேண்டும்?
இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “Set a Fire” by Will Reagan and United Pursuit
இந்த திட்டத்தைப் பற்றி
ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.
More