தேவனுக்கு செவிக்கொடுத்தல்மாதிரி
நான் உங்கள் கவனத்தை பெறட்டுமா?
கேட்பது என்று ஒன்று உண்டு அதற்கு பிறகு கவனித்து கேட்பது என்றும் ஒன்று உண்டு.
கேட்பது என்பது சத்தங்களை உணர்த்துவதாகும்.
கவனித்து கேட்பது என்பது கேட்டதற்கு பிரதிகிரியை செய்வதாகும்.
இன்றைய வேத பாடம் ஏரேமியாவில் சோகமாக சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் அது அதிகமாக நம்மை சுற்றிலும் நடப்பதுதான் என்பதை நாம் யோசிக்கும்போது அது சோகமான காரியம் இந்த பழைய ஏற்ப்பாடு நிகழ்வுகள் நாம் தேவனுக்கு நம்முடைய முழு இருதயம், மனது மற்றும் பெலனோடு முழு கவனத்தை கொடுக்காத போது ஏற்படும் ஆபத்துகளின் எச்சரிக்கைகளாக இருக்கின்றன. ஏன்? நாம் தேவனுக்கும் அவர் வழிகளுக்கும் கவனம் செலுத்தவில்லையென்றால் நாம் தவறான திசையில் சென்றுகொண்டிருக்கிறோம் - பின்னோக்கி செல்கிறோம், முன்னோக்கி அல்ல. அநேக வேளையில், இந்த தவறான வழிகள் நம்மை இருளான அழிவின் வழிகளுக்கு எடுத்துச்செல்கின்றன.
நம்மை வழிதவறி செல்ல செய்கிற காரணம் அநேக வேளையில் அப்பாவியாய் தோன்றும் ஒரு மும்முரமாக வேலை அட்டவணையாகவோ, குழந்தைகளை வளர்ப்பதாகவோ, இன்னும் சாதிக்க வேண்டும் என்ற என்னமோ, இல்லாவிட்டால் அநேக ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு தொழில்நுடப சாதனமாகவோ இருக்கலாம்!
என்னுடைய அறிவில், என்னுடைய ஆறு பிள்ளைகளும் நல்ல கேட்கும் திறன் கொண்டவர்கள் தான், ஆனால் அவர்களுடைய கவனித்து கேட்கும் தன்மை குறைவாகத்தான் உள்ளது! சில வேளைகளில் அவர்கள் கவனத்தை ஈர்ப்பது ஒரு ரகசிய குறியீடாகத்தான் இருக்கும்: ஐஸ் கிரீம். உடனடியாக அவர்கள் என்னை கவனித்து "உண்மையாகவா அம்மா!?" எண்ட்ட்று சொல்லுவார்கள். நான் "இல்லை. எனக்கு உங்கள் கவனம்தான் தேவைப்பட்டது!" என்று சொல்லுவேன்.
உண்மையில், நான் ஒரு கவனமில்லாமல் கேட்கிற நபர்தான், முக்கியமாக என் குடும்பத்தைவிட என் திறன்பேசியை கவனம் செலுத்தும்போது "ம்ம்ம்ம்.. என்ன சொன்னீர்கள்?" என்று கேட்பேன்.
இது எல்லோரும் எல்லோரும் செய்யும் தவறுதான் என்று சொல்லி நாம் சிரித்தாலும் கூட, இது உண்மையில் சரியல்ல. இது மக்களை கனவீனப்படுத்தும் செயல். இதை நாம் தேவனிடம் செய்யும்போது, அது சோகமாக அவரை விலைமதியாமல் அவரிடம் முரட்டாட்டம் செய்யும் செயலாகும்.
நாம் நம்முடைய பரம பிதாவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றால், அவருடைய செய்திகளுக்கு முழு கவனம் செலுத்த வேண்டும்! அவருடைய செய்திகள் அநேக முறைகளில் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" அவருடைய வார்த்தை, ஒரு கூட்டு விசுவாசியின் அறிவுரை, ஒரு வேத பாடம், ஒரு சொப்பனம் அல்லது தரிசனம், ஒரு அமைதலான சத்தம் அல்லது ஒரு அசைவு. ஆம் தேவனுடைய செய்தி மிக பெரியது ஏனென்றால் அவர் ஒரு பெரிய தேவன் அவர் ஒரு தொடர்பு நிபுணர் உன்னோடு பேச விரும்புகிறார்!
பிதாவிடம் கேளுங்கள்: உமக்கு கவனம் செலுத்தாதபடி என்னை எது கவனகுலைச்சல் செய்கிறது?
இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “First” by Lauren Daigle
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.
More