எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி
கூறப்பட்ட கதைகளில் ஒன்று ஒருவேளை உங்கள் கதையாக இருந்திருக்கலாம். அல்லது கவலையுடனான உங்கள் கதை வேறாக இருக்கலாம். அனால், நீங்கள் கவலையோடு சந்திக்கும் எந்தப்போராட்டத்திலும், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் உங்களுக்குள்ளும் வாசமாயிருக்கிறார். அவர் உங்களுக்கு பயமுள்ள ஆவியை கொடுக்கவில்லை
நீங்கள் கவலைகளுடன் போராடுகிறீர்கள் எனில் அதன் அர்த்தம் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்பது அல்ல. நீங்கள் தேவனை நம்பவில்லை என்பதும் இல்லை. கலக்கங்களும் கவலைகளும் நீங்கள் தேவனை சார்ந்து அவர் மேல் நம்பிக்கையாய் இருக்க உதவுகின்றவைகளாக இருக்கக்கக்கூடுமோ? கவலைகள் உங்களை தேவனிடத்தில் அழைத்து செல்பவைகளாக இருந்தால்?
கவலை நாம் தேவனை சார்ந்துக்கொள்ள உதவும்போது அது நன்மையானதாகிறது. அதன் அர்த்தம் நாம் நம்பிக்கையை இழந்து பிறரின் உதவியை மறுக்க வேண்டும் என்பது அல்ல. அதன் அர்த்தம், சமாதானத்தை அடைவது ஒரு வாழ்க்கை முறை என்பதை நாம் அறிந்துக்கொள்வதே.
எதைக்குறித்தும் கவலையற்று வாழ்வது சாத்தியம்தானா? ஆம். அதன் அர்த்தம் நாம் கவலைப்பட எந்த காரணமும் இருக்காது என்பது அல்ல. அனால், இயேசு நம்மோடு இருப்பதால், கவலைப்பட கரணங்கள் இருப்பினும் நாம் எதைக்குறித்தும் கவலையற்று வாழலாம் - நம் முயற்சயால் அல்ல அவர் நம்மோடு இருப்பதால். இந்த வசனத்தை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்:
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6-7
அந்த உண்மையை உணருங்கள். நாம் "சமாதானம்" என்பதில் தான் நோக்கமாயிருக்கிறோம் அனால் வசனம் "தேவசமாதானத்தைப்" பற்றி கூறுகிறது. மெய்யான சமாதானத்தை தேவ பிரசன்னத்தில் மட்டுமே கண்டுக்கொள்ள முடியும். கவலை கலக்கங்களுக்கான பதில், மன அழுத்தத்தை குறைப்பதில் இல்லாமல் தேவனிடம் நெருங்குவதில் இருந்தால்?
யோசியுங்கள்:நான் எப்படி தேவ பிரசன்னத்தை என் வாழ்வில் அனுதினமும் உணருவது?
ஜெபம்:ஆண்டவரே, உம்முடைய மாறாத பிரசத்திற்க்காக உமக்கு நன்றி. நீர் மட்டுமே தரக்கூடிய சமாதானத்தை நாடி இன்று உம்மண்டை வந்திருக்கிறேன். நீர் எனக்கு அதிகமாக வேண்டும். என் வாழ்வின் அனைத்து பகுதியிலும் நீர் இருக்குமாறு உம்மை வேண்டுகிறேன். இன்று முழுமையாக உம்மை சார்ந்து வாழ எனக்கு உதவி செய்யும். என்னுடைய அனைத்து கவலைகளையும் பயன்களையும் உம்மிடம் தருகிறேன். உம்மை சார்ந்து, எதைக்குறித்து கவலையற்று வாழ எனக்கு கிருபை அருளும். நான் உம்மை நம்புகிறேன். என்னை முற்றிலும் உம்மண்டை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ கவலை நிலையான ஆங்சைட்டியுடன் போராடுகிறீர்கள் எனில், நம்பிக்கையும் உதவியும் உண்டு. மேலும் ஆங்சைட்டி எப்படி இருக்கும், அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும், அதோடு போராடுபவர்களுக்கு நீங்கள் எப்படி உதவி செய்ய வேண்டும் போன்ற விபரங்களுக்கு.
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.
More