எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி

Anxious For Nothing

7 ல் 6 நாள்

வலியிலும் உங்களால் தேவனை துதிக்க முடிந்தால்? பிரையன் பதற்றத்தையும் கலக்கங்களையும் (அங்கிசைட்டி) அதன் வெளிப்படையான அறிகுறிகளையும் அனுபவித்திருக்கிறார். அனால் அவரது இந்த அனுபவத்திலும், தேவனை துதிப்பதிற்க்கான அநேக காரணங்களை கண்டறிந்தார். இதோ அவரது கதை:

என் வாழ்வின் ஒரு சவாலான நேரத்தில் ஒரு அந்நிய தேசத்தில் நான் வாழ்ந்து வந்தப்போது கடுமையான பதற்றத்தையும் கலக்கத்தையும் உணர்ந்தேன். ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ள முயலும்போதும் வணிகத்தை தொடங்கும்போதும் சபையே இல்லாத இடத்தில் கிறிஸ்துவின் ஒளியாக இருக்கும்போதும் ஒரு வயதே ஆன இரட்டை குழந்தைகளின் தந்தையாக இருக்கும்போதும், இருண்ட பள்ளத்தாக்கினுள் மெதுவாக விழுவதைப்போல இருந்தது.

இதற்க்கு முன் கண்டிராத அளவுக்கு கவலையையும் பயத்தையும் தூண்டும் தலை வலியையும் நெஞ்சு வலியையும் மற்றும் சில சுகவீனங்களையும் சில மாதங்களுக்கு அனுபவித்தேன். உன்மையை சொல்லவேண்டுமானால், என் வாழ்வின் இந்நாள் வரைக்கும் நான் அதிகமான கவலைகளுடன் போராடியதில்லை, தைரியமாக ஆபத்துக்களை எதிர் கொள்பவன் என்று நானே என்னை கருதி பெருமைக்கொண்டதுமுண்டு. ஆனால் நான் சாதகமற்ற சூழ்நிலைகளை கருதி கவலைப்பட தொடங்கினேன் - எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று நம்பினேன் அல்லது என் குடும்பத்திற்கு ஏதாகிலும் ஆகிவிடும் என்று எண்ணினேன்.

மற்றவர்கள், என் கலக்கம்(அங்கிசைட்டி) சூழ்நிலைகளை சார்ந்ததா அல்லது உடல்ரீதியானதா அல்லது ஆவிக்குரியத என்று கேட்பார்கள். இதை சற்று கருதியபின்பு என் பதில் "ஆம்" என்பதுதான். அதிக நேரங்களில் பல கரணங்கள் உண்டென்று நம்புகிறேன். மன உளைச்சலின் உச்சகட்டத்தில்,‌‌ அதீத சகிப்புத்தன்மை உடையவர்களும் பாதிக்கப்படுவர்.

மற்ற வெளிப்படையான தடைகள் அல்லது சுகவீனங்களை போலவே நம்மில் சிலர் உடற் ஊக்கிகளின் (ஹார்மோன்கள்) சமநிலை இன்மையையும் உணருகிறோம். மேலும், நமது ஆவிக்குரிய எதிரி தந்திரமிக்க சந்தர்ப்பவாதியாக இருப்பதால் நம்மை நமது பலவீனத்தில் தாக்குகிறான்.

பவுலின் பிரபலமான, இதைக்குறித்து கவலையின்றி இருக்கும் சவாலானது (பிலிப்பியர் 4: 6-7) நம்மை ஜெபிக்க மட்டும் அல்ல தேவனுக்கு நன்றி செலுத்தவும் அழைக்கிறது. பவுல் கூறும் அறிவுரைகள், வெற்றியிலிருந்தோ அற்புதமான முன்னேற்றதிலிந்தோ எழுந்தவையல்ல. மேலும், பவுலே ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்தார். அவர் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கி, தான் சிறையிலிருந்துப்பொது பிலிப்பு சபைக்கு எழுதினார். ஆயினும், அவர் எழுதிய நிருபம் அவரது சந்தோசத்தையும் அவரது மகிழ்ச்சியான மனோபாவத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆகையால், நமது வலியிலும் நம்மால் தேவனை ஸ்தோத்தரிக்க முடியும்.

பவுல் நம்மை ஏனோதானோவென்று எதற்க்கோ நன்றி சொல்ல கூறவில்லை. நாம் சந்திக்கும் எவ்வித போராட்டத்திற்கு மத்தியிலும், அவர் ஸ்தோத்தரிக்கப்பட தக்கவர் என்பதை உணர்ந்து நன்றி செலுத்தவே பவுல் நம்மை ஊக்குவிக்கிறார்.

கொண்டாடுவதற்கான காரணம் ஏதும் இன்றி நான் எப்போதும் இருந்ததில்லை இருப்பதுமில்லை என்பதை கண்டுபிடித்தேன். நான் சந்தித்த மோசமான சோதனைகளிலும், நான் மகிழ்ந்து நன்றிசொல்வதற்க்கான கரணங்கள் பலவிருந்தன. அவற்றை யோசித்து, தேவனுக்கு நன்றி பலி செலுத்துவது என் கண்ணோட்டத்தை மாற்றி என் மனதையும் புத்துணர்ச்சி பெற வைத்தது.

அதிக எதிர்மறையான எண்ணங்களும் மன உளைச்சலை உண்டாக்கும் சிந்தனைகளும், பெரிய அழிவு வரப்போகிறது என்பதை போன்ற எண்ணங்களை உருவாக்கும். என்னை நானே கட்டாயப்படுத்தி, தேவனை ஸ்தோத்தரித்தலும், ஒரு பாரம் என்னை விட்டு நீங்குவதை உணந்திருக்கிறேன்.

கவலையற்ற வாழ்வை அடைய சில யுக்திகள் உண்டு என்பதற்காக அதை சொல்லவில்லை. ஆயினும், வலி இருப்பினும் துன்பமாகிலும் தேவனை துதித்து நன்றி செலுத்துவதே, நமக்கு சமாதானத்தை தரும் அவரது வாழ்வளிக்கும் பிரசன்னத்தை கண்டறிவதற்கான வழி.

-பிரையன்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Anxious For Nothing

உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

சம்பந்தப்பட்ட திட்டங்கள்