எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி

Anxious For Nothing

7 ல் 5 நாள்

நீங்கள் "எதைக்குறித்தும் கவலைப்படாத" கிறிஸ்தவராய் இருப்பதைக்குறித்து குற்றவாளியாக உணருகிறீர்களா? கவலையோடு இருக்கும்போது, நீங்கள் கவலையை உணரக்கூடாது என்ற சிந்தனை உங்களுக்கு மேலும் கவலையளிக்கிறதா? இந்த சிந்தனையை மாற்றும் உண்மையை அறியும் வரை லொறியும் இதே எண்ணத்தில் தான் இருந்தார்

என் திருமண வாழ்வு சீர்குலைந்த நிலையில் இருந்தது. இரு பதின்வயது பிள்ளைகளடங்கிய மூன்று பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பை என் தோழ்களில் தனியாக சுமந்தேன் (கடவுளே, எனக்கு உதவுங்கள்!). வேலை, சமைப்பது, சுத்தம் செய்வது, கார் ஓட்டுவது, சரி செய்வது, வரவு செலவுகள் பார்ப்பது, ஆதரிப்பது, நேசிப்பது, தேவைகளை சந்திப்பது - இவையனைத்தும் என் மேல் விழுந்த கடமையாய் இருந்தது. கவலைகள் என்னை சூழ்ந்தன, அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்றுகூட எனக்கு தெரியவில்லை.

என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்: ஆலோசனை, தியானம், மருத்துவம், இசை, உடற்பயிற்சி, வசனங்களை மனப்பாடம் செய்வது, தீர்வு என தோன்றும் அனைத்தையும்! எதுவும் என் கவலையை நீக்கவில்லை. என்னை தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள், இவைகளை செய்வது எனக்கு உதவியது தான். இந்த கருவிகளைப்பயன்படுத்தி தேவனை மைய்யப்படுத்தக் கற்றுக்கொண்டேன். ஆயினும் நான் போராடிக்கொண்டு தான் இருந்தேன். திரும்பி பார்க்கும்போது, நான் ஒன்றை மட்டும் முயற்சிக்கவில்லை என்பதை உணர்ந்தேன், அது "ஒன்றும் செய்யாமல் இருப்பதை" தான்.

நீங்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்தால், கவலையை பற்றி கூறும் அதிக வசனங்களை காண்பீர்கள். என் நிலையை வெல்ல ஏதாகிலும் ஒரு மந்திரம் உள்ளதா என்பதை தேடும்போது இதை கண்டடைந்தேன். என் தேடலில் எதிர்பாராத ஒன்றை கண்டுபிடித்தேன். நீங்கள் நன்றாக கவனித்தால் இதைக்காண்பீர்கள், இந்த வசங்களில் நாம் ஏதும் செய்யவேண்டாம் என்று தேவன் கூறுவதை காணலாம். ஆம் - ஏதும் செய்ய வேண்டாம்.

மத்தேயு 11:28இல் இயேசு "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று கூறுகிறார். அவர் இங்கு செயல்படுகிறார், நாம் அல்ல. நாம் அவரிடத்தில் செல்ல மட்டுமே வேண்டும்.

யோவான் 14:27இல் இயேசு "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று கூறுகிறார்.நீங்கள் இதை காண்கிறீர்களா? அவர் நமக்கு சமாதானம் அளிக்கிறார். அவர் நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார். நாம் ஏதும் செய்ய வேண்டாம், அவரை பின்பற்றினால் போதும்.

மீண்டும் மத்தேயு 11:25-34 ஆகிய வசனங்கள் நம்மை கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறது, ஏனெனில் "காட்டுப்புஷ்பங்களையும் உடுத்துவிக்கிற" நம் தேவன் நம்மை எவ்வளவாய் பராமரிப்பர்? "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்". சரிதான், நீங்கள் அவருடைய ராஜ்யத்தை தேடினால் போதும் உங்களுக்கு இவைகள் கூட "கொடுக்கப்படும்".

தேவன் கொடுக்கிறவர். அவரிடம் நம் தேடல்களுக்கான பதில்கள் உண்டு, அவர் நம்மை பார்த்துக்கொள்வார். நம்மால் எல்லாவற்றையும் தனியாக செய்ய முடியாது, அனால் தேவன் நம்மை அப்படி தான் வடிவமைத்தார். நமக்கு அவர் தேவை.

நான் கவலைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வழியில் சீரானது. நான் ஓய்வெடுத்து, இயேசுவண்டை சென்று, அணைத்து குழப்பங்களையும் மறந்து, தேவனை நான் முழுமையாக நம்ப ஆரம்பித்து - வேறு ஒன்றையும் முயற்சிக்காமல் விட்டபின்பே - நான் மெய்யான சமாதானத்தை கண்டுக்கொண்டேன். இறுதியில், என் சூழ்நிலையை குறித்த என் ஜெபம் தேவன் மேலான என் விசுவாசம் மேம்பட வேண்டும் என்ற ஜெபமாக மாறியது.

நீங்களும் இதை செய்ய விரும்பினால், இயேசுவில் இளைப்பாறுதலை கண்டடைய உற்சாகப்படுத்துகிறேன். உங்கள் நம்பிக்கைக்கு அவர் பாத்திரராய் இருக்கின்றார். கவலைகள் என்னை மேற்கொள்ளும்போது நான் செய்யும் ஜெபம் இது தான்

ஆண்டவரே

உம்மிடம் ஒரு உதவியை நாடி வந்திருக்கிறேன். நீர் எனக்கு எல்லாமுமானவர். ஆண்டவரே, எனக்கு இளைப்பாறுதல் வேண்டும். என் கவலைகளை உம்மிடம் தருகிறேன். ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே. உம்முடைய சமாதானத்தையும் அன்பையும் புரிதலையும் ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் என்னை நோக்கி அல்ல உம்மை நோக்கி திரும்ப எனக்கு உதவி செய்யும். நான் என் சுய முயற்சிகளை விட்டுவிட்டு நான் உம்மை நம்ப எனக்கு உதவி சேய்யும். நீர் தரும் பதில்களுக்காக காத்திருக்க கிருபை தாரும், ஏனெனில் நீர் தருவது எப்போதும் சிறந்ததாயிருக்கும் என்பதை அறிந்திருக்கிறேன். எனக்கு ஞானத்தையும் நம்பிக்கையையும் அன்பையும் தாரும். உம்முடைய கிருபைக்காகவும் நீர் பொறுமையுள்ளவராய் இருக்கிறதற்க்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன், நான் எண்ணத்தக்கதிற்கும் அதிகமாய் நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறேன்.

ஆமென்

-லோரி

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Anxious For Nothing

உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.