எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி

Anxious For Nothing

7 ல் 2 நாள்

கவலையும் ஏக்கமும் உங்களை இயேசுவிடம் நெருங்க செய்தால்? தனது கவலைகளும் ஏக்கங்களும் நீங்க வேண்டும் என்பதே ஜோர்டனின் ஒரு வருடம் முழுவதிற்குமான ஜெபமாக இருந்தது - இறுதியில், அவர் இயேசுவுடனான ஒரு ஆழமான உறவை கண்டடைந்தார். ஒருவேளை, நீங்கள் அவரது கதையை வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்:

"நான் சாகப்போகுறேன் என்று நினைக்கிறேன்!"

சென்ற ஆண்டின் தூக்கமில்லாத அணைத்து இரவுகளிலும் அதுவே என் சிந்தனையாக இருந்தது. காலையில், காரணமற்ற பயத்துடன் எழும்பவே, ஒவ்வொரு முறையும் தூங்க முயற்சித்தேன். என் இருதயம் கடினமாயிருந்து. எனக்கு மூச்சு திணறல் ஏற்படும், சில நேரங்களில் சுவாசிக்கக்கூட முடியவில்லை. இது தொடர்கதையானபோது, என் மனைவியின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று எண்ணி, தனியாக தூங்க முடிவெடுத்தேன்.

ஒரு நாள், மருத்துவரிடம் சென்று என் அறிகுறிகளை - நெஞ்சு வலி, தூக்கமின்மை, பீதிகள் (பானிக் அட்டக்ஸ்) - ஆகியவற்றை விளக்கினேன். சில மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சோதனைகளுக்கு பின்பு, எனக்கு ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் (கவலைக் கோளாறு) என்று கூறினார். உண்மையை சொல்லவா? ஒரு கிறிஸ்தவனாக நான் தோற்றுவிட்டேன் என்று எண்ணினேன். இதை எதிர்த்து நான் சரியான விதத்தில் ஜெபிக்கவில்லையா?நான் இதை சந்தித்திருக்க கூடாதுஎன்று எனக்கு நானே எண்ணிக்கொள்வேன்.கவலைப்பட கூடாது, சமாதானம் என்னிடம் இருக்கவேண்டும், ஏனெனில் இயேசு அதை தன் செய்யச்சொன்னார்.

மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி சில மருந்துகளை எடுக்க தொடங்கினபின்பும், என் நிலைமை மாற தொடர்ந்து ஜெபித்து வந்தேன். இனியும் இதனுடன் போராட எனக்கு விருப்பமில்லை.

2 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில், பவுல் "என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்பதை விவரித்திருப்பர். அந்த "முள்" எதுவென்று நாம் அறியாதபோது கவலைகளும், கலக்கங்களும், நான் உட்பட பலருக்கு ஒரு முள்ளாய் தோன்றும். பவுல் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் அது தன்னைவிட்டு நீங்கும்படிக்கு வேண்டிக்கொண்டதாக கூறினார், அதற்கு இயேசு: என் கிருபை உனக்குப்போதும்,பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.

அவர் கிருபை எந்நிலையிலும் போதுமானதாக இருக்கிறது. நான் ஜெபிக்க தொடங்கியபோது இயேசுவிடம் நெருங்கத் தொடங்கினேன். பவுலைப்போலவே, தேவன் என் முள்ளையும் என்னிடம் விட்டு நீக்கவில்லை. ஆயினும் நான் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வேதத்தில் பிரியமாய் இருக்கிறேன், ஜெபிக்கிறேன்.

எனக்கு சுகம் வேண்டும் என்று எண்ணினேன். அனால், உண்மையில் எனக்கு தேவைப்பட்டது இயேசுவுடனான உறவே. நான் இயேசுவுடன் இருந்திருந்தால் கவலைகளையும், ஏக்கங்களையும் (ஆங்சைட்டி) சந்தித்திருக்க மாட்டேன் என்று கூறவில்லை. இது என்னை விட்டு நீங்க வேண்டும் என்ற ஜெபத்தையும் நான் நிறுத்தப்போவதில்லை. இந்த முள் என்னை விட்டு நீங்க வேண்டும் என்றும் பவுலைப்போலவே நானும் வேண்டுகிறேன்.

நான் நொடியில் குணமாவதைக்காட்டிலும் மகத்தான ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது: நான் தேவனைப் பற்றிய ஆழமான புரிதலையும் அவருடனான அற்புத உறவையும் உணர்ந்துகொண்டு இருக்கிறேன்.

சமாதானத்திற்க்காக ஜெபிக்கையில், சமாதானப்பிரபுவிடம் நெருங்குவதை உணர்ந்தேன். என் எதிர்க்காலத்தை குறித்து கலங்குகையில், அவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் என்பதை என் நினைவிற்கு கொண்டு வந்தேன்: தொடக்கமும் முடிவுமானவர், முதலும் கடைசியுமானவர்.

என் கவலை நீங்க வேண்டும் என்று ஜெபித்தேன், அதைக்காட்டிலும் அதிகமான ஒன்றை பெற்றுக்கொண்டேன்: மகத்தான அன்புமிகும் என் நேசரின் பிரசன்னத்தை என் வாழ்வில் கண்டு கொண்டேன் - என் கவலையின் மத்தியிலும்

- ஜோர்டான்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Anxious For Nothing

உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

சம்பந்தப்பட்ட திட்டங்கள்