எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி

Anxious For Nothing

7 ல் 1 நாள்

ஓட்டத்தில்

பதற்றத்தோடு வாழ்வது, எப்போதும் ஒரு ஓட்டத்தில் இருப்பதைப்போன்ற உணர்வாகும் - சொந்த வாழ்விடமிருந்தே தப்பி ஓடுவதைப்போல. செல்ல முடியாத ஒரு பாதுகாப்பான இடத்தை அடைய தீவிரிக்கும் போது, பயம் இருதயத்தை ஆட்கொள்ளும். நினைவுகளைச் சுற்றி சுழலும் கவலைகளின் வேகம் சுவாசிப்பதையே நிறுத்துவதைப்போல இருக்கையில், பயத்தின் வெள்ளம் பெருகி, முடிவெடுக்கும் திறனோடு நம்பிக்கையையும் அகற்றிவிடும்.

பரிட்சியமாக தோன்றுகிறதா? நிறுத்த முடியாத சில நச்சல்கள் வாழ்வில் உண்டு - மின்னஞ்சல்கள் வந்துக்கொண்டே இருக்கும், போனில் அறிவிப்புகள் குவிந்துக்கிடக்கும், சமூக வலைத்தளங்களிலும் நமது வாழ்வை பிறரோடு ஒப்பிட்டு பார்த்து வேதனை அடைய வாய்ப்புகள் ஏராளம். அதனால், இவற்றோடு, கிறிஸ்துவின் சீஷர்களாக தெரிந்துக்கொள்ளப்பட்ட நாம், எதைக்குறித்தும் கலக்கமோ பதற்றமோ இல்லாமல் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் அறிந்து எப்படி வாழமுடியும்?.

அதிக நேரங்களில், ஒரு கிறிஸ்துவளாக/கிறிஸ்துவனாக இப்படி சிந்திப்பது குற்றமென்றும், இவ்வாறு யோசிக்க கூடாது என்றும் எண்ணுகிறோம்

நாம் ஏன் ஒன்றிடமிருந்து தப்பி ஓடுவதை விட்டுவிட்டு ஒருவரை நோக்கிஓடக்கூடாது?

நம்மால் உங்களால் கூடுமே! எதைக்குறித்தும் பதற்றமோ கவலையோ இல்லாத வாழ்வு என்ற வாக்கு, தேவ பிரசன்னத்தை சார்ந்ததேயன்றி நம் சுயத்தை சார்ந்ததல்லவே. பிலிப்பியர் 4:6-7ஐ வாசித்துப்பாருங்கள்.

நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

கவலைகளோடு யுத்தம் பண்ணி ஜெயிக்க மனிதரால் கூடாது. அனால், தேவன் நம்மோடு இருக்கையில்? புரிந்துக்கொள்ள இயலாத சமாதானத்தை அருளும் தெய்வ பிரசன்னத்தை நாம் அணுகலாம்.

இந்த வாக்கைக்குறித்த மற்றொரு சிறப்பு என்னவென்று தெரியுமா? இதன் தொடர்ச்சிதான். அனைத்து சூழ்நிலைகளிலும். பதற்றத்தையும் கவலையையும் உணரும் ஒவ்வொரு தருணத்திலேயும் நாம் சமாதானத்தை விண்ணப்பித்து தேவனை அணுகலாம். ஏனெனில், சமாதானமென்பது தெய்வப் பிரசன்னத்தின் இலவச இணைப்பு தான்.

கவலைகள் நொடியில் மறைந்துவிட்டது.அது ஒவ்வொரு முறையும் தேவப்பிரசனத்தை நாடும் ஒரு தொடர் முயற்சி. வரும் நாட்களில், கவலைகளை மேற்கொண்ட சிலருடைய கதைகளையும் அவர்கள் கற்றுக்கொண்டவைகளையும் பகிர்ந்துக்கொள்ளுவோம்.

எதைக்குறித்தும் பதற்றமின்றிவாழ்வதைப்பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள, இந்தப்பிரசாங்கத்தை கேளுங்கள்.

நீங்கள் ஆன்சைட்டி டிசார்டர் உடன் போராடுகிறீர்கள் எனில் உடனடியாக உதவியை நாடுங்கள்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Anxious For Nothing

உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.