எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி

Anxious For Nothing

7 ல் 3 நாள்

சமாதானம் இன்றைய வாழ்வில் சாத்தியம்தானா? அதைக்கண்டுபிடிக்க, செரி 11 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு தேடலில் ஈடுபட்டார். அவரின் கண்டுபிடிப்புகள் இதோ:

எனக்கு தெளிவாக ஞாபகமிருக்கிறது. இதைப்போல இனிமேலும் வாழ இயலாது என்று நான் முடிவெடுத்த நாள்.

நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருந்தேன், சாதாரணமாக வாழ்ந்து வந்தேன். கலக்கத்தோடும் அச்சத்தோடும் வாழ்ந்து வந்தேன், அப்படி இருக்கக்கூடாது என்று தெரிந்திருந்தும் அப்படியே வாழ்ந்தேன! கலங்காதே திகையாதே என்று வேத வசனம் கூறியதையும் தொடர்ந்து வாசித்து வந்தேன். ஆனால் அப்படி இருப்பது சாத்தியமற்றதைப்போல தோன்றியது.

தேவன், வேதத்தில் பயத்தைப்பற்றியும் அதை நீக்கும் சமாதானத்தை பற்றியும் அதிகம் கூறியும் இருக்கிறார். இயேசு தன் சீடர்களுடன் கலிலேய கடலில் ஒரு படகில் இருந்தபோது ஒரு பலத்த புயல் அவர்களை அச்சுறுத்தியது. அவர்கள் அனைவரும் மூழ்காமல் இருக்க முயன்றபோது, இயேசு என்ன செய்துக்கொண்டு இருந்தார்? உறங்கிக்கொண்டு இருந்தார்! புயலுக்கு மத்தியில்.

அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். மாற்கு 4 - 38-40

இந்த நிகழ்வு, நான் தேவனுடன் கொண்ட பெரும்பாலான உரையாடல்களின் தொகுப்பு. ஏன் பதறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? என்று தேவன் என்னோடு கேட்கிறதை நான் உணர்ந்தப்ப்போதேல்லாம், இது சகஜமானதல்லவா? என் நிலமையைப்பாரும்! இந்நிலையில் யாரால் பயமில்லாமல் இருக்க முடியும்? என்றே கூறுவேன்.

சமாதானத்துக்கான என் தேடலில், சில விஷயங்களை நான் அறிந்துக்கொண்டேன்.

  1. என் சூழ்நிலைகளே என் சமாதானத்தின் அளவை தீர்மானித்தது. என் வாழ்வின் சூழ்நிலைகள் அனைத்தும் நன்றாக இருந்தபோது நான் சமாதானத்தோடு இருந்தேன். புயல்கள் என்னை சூழ்ந்தப்போது, என் உணர்ச்சிகளென்னை சோர்வடைய செய்தன - பதற்றத்தோடும், மன உளைச்சலோடும் சோர்ந்தும் இருப்பேன். புயலில் இருந்த சீஷர்களைப்போலவே நான் இருந்தேன். தேவன் கவனிக்க மாட்டார் என்று எண்ணியதால், புயலைக்கண்டு அஞ்சினேன், காயமடைந்தேன், குழப்பமும் அடைந்தேன். ஆயினும் இயேசு என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
  2. சமாதானம் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுவதல்ல என்பதை, இயேசு எனக்கு கற்றுக்கொடுக்க முயன்றார். உங்களால் இந்த போருடன் உங்கள் நிலையை ஒப்பிட முடிகிறதா? சுலபமானதல்லவே? புயலுக்கு மத்தியில் நான் சமாதானத்தை அனுபவிக்க வேண்டும் என்று இயேசு எதிப்பார்ப்பதை நான் புரிந்துக்கொள்ள போராடினேன். என் அடுத்த முன்னேற்றத்தை அடையும் போது, அவர் உண்மையிலேயே அக்கறை காட்டினாரா என்று சந்தேகப்பட்டேன்
  3. என் புயல்கள் என் நம்பிக்கையை வெளிப்படுத்தின. சமாதானத்தின் அர்த்தம், அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதல்ல. அதன் அர்த்தம், புயல்கள் உங்கள் வாழ்வை உலுக்கும்போதும் நிம்மதியாக இருப்பதே. தேவனை விசுவாசித்து, புயலில் சமாதானத்தை கண்டறிய இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் அதை கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

நான் வளர்வதற்க்கான இடம் இருந்தது உண்மை தான். புயல்களால் அசைக்க முடியாத ஒருவர் மேல் நம் கவனத்தை வைத்து அவரை விசுவாசிப்பதே சமாதானத்தை அடைவதற்கான வழி என்பதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரே ராத்திரியில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக, அதீத சமாதானமும் இளைப்பாறுதலும் எனது சோர்வை நீக்கி புத்துயிர் அடைய வைத்துக்கொண்டிருக்கிறது.

செரி

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Anxious For Nothing

உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

சம்பந்தப்பட்ட திட்டங்கள்