எதைக்குறித்தும் கவலையில்லைமாதிரி
நாம் அவரைக்காண்பதில்லை என்றாலும், இயேசு நம்மை நம் கவலைகளுக்கு மத்தியில் சந்திக்கிறவராகவே இருக்கிறார். கல்லூரி பட்டம் பெற்ற பின்பே செல்சி கவலைகளையும் கலக்கங்களையும் (ஆங்சைட்டி) முதல் முறையாக உணர்ந்தார். இருளிலிருந்த செல்சியை தேவன் தம்முடைய சமாதானதிக்குள்ளாக கொண்டுசென்ற கதை இதோ.
பயம், கவலை மற்றும் மனசோர்வு போன்ற உணர்வுகள் உண்மையாக தோன்றின. அனுதினமும் இருந்த குமட்டலினால் என்னால் சாப்பிட கூட முடியவில்லை. ஒவ்வொரு இரவும் நான் 12 மணி நேரங்களுக்கு அதிகமாகவே தூங்கினாலும், ஒவ்வொரு காலையும் நான் என் படுக்கையிலிருந்து எழும்புவதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். அநேக நாட்கள் நான் என்னை என் நினைவுகளால் நிரப்பிக்கொண்டதால் யாரிடமும் பேசக்கூடவில்லை. என் குடும்பத்தாரிடமும் மருத்துவரிடமும் ஆலோசகரிடமும் போதகர்களிடமும் என் நண்பர்களிடமும் உதவி நாடினேன், ஆயினும் என்னுடைய இருளடைந்த நாட்கள் ஒருபோதும் முடிவடையாததைப்போல இருந்தது.
நாம் அனைவருமே இருண்ட நாட்களை சந்தித்திருக்கிறோம். அந்த நாட்கள் சில வாரங்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு கூட நீடிக்கலாம். ஆனால், நீங்கள் புனித வெள்ளியின் வரலாற்றை - இயேசு உங்களை மீட்க தம்மையே கொடுத்த நாள் என்று அறிந்திருக்கிறீர்களெனில், நண்பர்களே நீங்கள் ஒரு நற்செய்தியை அறிந்திருக்கிறீர்கள். வெள்ளி இருளடைந்து தான் ஆனால் அதன்பின் ஞாயிறு வரும்!
இருளிலும் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு, நமது நம்பிக்கைக்கு ஒரு பெயரும் உண்டு. நமது நம்பிக்கையின் பெயர் இயேசு.
ஜூலை மாதத்தில் என் வாழ்வில் மிகவும் இருண்ட ஒரு வெள்ளிக்கிழமையில், இயேசு என்னிடம் நெருங்கி வருவதைப் போலவே நானும் இறுதியாக அவரிடம் நெருங்கி வந்தேன். நான் ஜெபித்தேன் :
இயேசுவே, எதிரி என்னிடம் கூறும் பொய்களை நிராகரிக்க எனக்கு உதவி சேயும் .
இயேசுவே, கவலையோடிருக்கும் என் இருதயத்தை மேற்கொள்ள எனக்கு உதவி சேய்யும்.
இயேசுவே, நீரே அனைத்தையும் பார்துக்கொள்வீர் என்பதை நம்பச்செய்யும்.
இயேசுவே, உம்மை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் என்னுள் வாசமாயிருக்கிறார் என்பதை விசுவாசிக்க எனக்கு கிருபை தாரும்.
இரண்டு நாட்களுக்குப்பின்பு, ஞாயிற்றுக்கிழமையன்று, எந்த கவலையும், மனசோர்வின் பாரமுமின்றி எழுந்தேன். பல நாட்களுக்குப்பின்பு என்னால் அவரது பிரசன்னத்தை உணர முடிந்தது. தேவனின் நன்மை என்று மட்டுமே விவரிக்கக்கூடிய ஒரு அற்புதத சுகத்தை அனுபவித்தேன்.
என் இருண்ட நாட்களுக்கு மத்தியில் இயேசு எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தார். என்னால் அவர் இருப்பதை உணர முடியாதப்போதும் அவர் என்னை விட்டு விலகவில்லை. அவரை விட்டு தூரமாக உணர்ந்த ஒவ்வொரு நாளும் அவர் என்னை கிட்டி சேர்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
என்னை போலவே நீங்களும் உங்கள் வலியிலிருந்து ஒரு அற்புத சுகத்தை உடனடியாக பெறுவீர்களா என்று எனக்கு தெரியாது. அனால் உங்கள் வலியில் தேவன் உங்களோடிருக்கிறார் என்று எனக்கு நன்றாக தெரியும்.
இயேசு மனிதர்களின் கஷ்டங்களை அறிதிருக்கிறார். அதைக்குறித்த கருசனையுடையவராகவும் இருக்கிறார். நமது இருளை அகற்ற, பரலோகத்தை விட்டு சிலுவையில் தன் ஜீவனை விடுமளவிற்க்கு கருசனையுடையவராயிருந்தார்.
வேதம் கூறுகிறது : அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. யோவான் 1:4-5
ஞாயிற்று கிழமை வரும்!
-செல்சி
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் "எதைக்குறித்தும் பதற்றமில்லை" என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.
More