மனந்திரும்புதலின் செயல்கள்மாதிரி
கர்த்தர் தமது ஒரே பேரான குமாரனை உலகத்துக்கு அனுப்பின அதிமுக்கிய காரணம்: நமக்குப் புது வாழ்வை அளிக்க. லூக்கா 5:27-32 ல், இயேசு தன் குறிக்கோளை இவ்வாறாக கூறுகிறார்: "பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." உன்னையும் என்னையும் போன்ற பாவிகள் மனந்திரும்புதலின் மூலமும் அவரது பாவமன்னிப்பின் மூலமும் புது வாழ்வை அடையும்படி கிறிஸ்து வந்தார். நாம் மனந்திரும்பி அவரது மன்னிப்பைப் பெறும்போது என்றென்றைக்குமாக நம் வாழ்வு மாறுகிறது. கர்த்தரின் குறிக்கோள் தான் நம் குறிக்கோளுமாகும். நாம் நீதிமான்களுக்கல்ல, காணாமற்போய் மன்னிப்புத் தேவைப்படுகின்றவர்களுக்கே ஊழியம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் உண்மையாகவே உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி கர்த்தர் உங்கள் பாவங்களை மன்னித்திருந்தால், மனந்திரும்பத் தேவையான பிறருக்குச் சொல்லும்படியான கதை உங்களிடத்தில் உண்டு. உங்கள் வாழ்வில் நீங்கள் அடைந்த அதே மாற்றத்தைப் பிறர் வாழ்விலும் நீங்கள் ஏற்படுத்தலாம். மனந்திரும்பிக் கர்த்தரின் மன்னிப்பைப் பெறத் தேவையான யாரை உங்களுக்குத் தெரியும்? உங்கள் வாழ்வில் ஏற்பட்ட கர்த்தரின் மன்னிப்பு மற்ற ஒருவரை மனந்திரும்புதலுக்கு எப்படி வழி நடத்த முடியும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church