மனந்திரும்புதலின் செயல்கள்மாதிரி
மனந்திரும்புதல் பாவமன்னிப்பை விளைவிக்கும். நாம் மனந்திரும்புகிறோம், கர்த்தர் மன்னிக்கிறார். மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் கஷ்டமான தத்துவங்களல்ல. மனந்திரும்புதல் நம் செயல்; பாவமன்னிப்பு நம்மீதான கர்த்தரின் பிரதானமான அன்பினால் அதற்கான பிரதிச்செயல் ஆகும். இந்த செயல்முறை எளிதானதானாலும் கர்த்தரின் மன்னிப்பு கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். கர்த்தரின் மன்னிப்பு நம் வாழ்வின் இருளை அகற்றி நாம் செய்த பாவங்கள் என்னவாயிருப்பினும் நம்மை ஒளியினிடத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் பாவங்கள் உட்பட எல்லாப் பாவங்களையும் கர்த்தரின் மன்னிப்பு மூடிவிடும். பாவத்திலிருந்து மீட்கும் கர்த்தரின் வல்லமை உங்கள் வாழ்க்கையைப் பாதித்து எவ்வாறாக மாற்றியிருக்கிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church