மனந்திரும்புதலின் செயல்கள்மாதிரி
பத்ஷேபாளுடன் மீறுதலில் ஈடுபட்டபின் தன் பாவத்தைக் குறித்து தாவீது கர்த்தரிடம் மனந்திரும்பி கதறுவது தான் சங்கீதம் 51. தன் முழங்காலில் தாவீது கர்த்தரிடம் தன் பாவங்களை கழுவும்படி உரத்த சத்தத்தில் கதறி, கெஞ்சுவதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். நம் வாழ்விலும் கூட, மனந்திரும்புதல் எவ்வாறு இருக்க வேண்டுமென்று இந்த சங்கீதம் படம் போல் காட்டுகிறது. முதலாவதாக, தாவீது தன் பாவத்தை ஒத்துக் கொள்கிறான். அடுத்ததாக, அவன் மன்னிப்புக் கோருகிறான். பின்பதாக, அவன் கர்த்தர் தன்னை புதுப்பிக்கும்படி கேட்கிறான். இறுதியாக, தன் பாவத்தைக் கொண்டு இதைப் போன்றே பாவத்தில் உழலும் பிறரை மனந்திரும்பும்படி போதிக்க தனக்கு உதவும்படி கேட்கிறான். உன் வாழ்வில் மனந்திரும்புதல் எவ்வாறு காணப் படுகிறது? தாவீதின் மனந்திரும்புதலின் உதாரணம் கர்த்தரோடான உன் உறவை உறுதிபடுத்த எவ்வாறு உதவலாம்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church