மனந்திரும்புதலின் செயல்கள்மாதிரி
நீங்கள் எப்போதாவது காணாமற் போயிருக்கிறீர்களா? எங்கே போகிறோமென்று தெரியாமலிருக்கும் உணர்வு மிகவும் வெறுப்பான ஒன்றாகும். சொல்லப் போனால், சில சமயங்களில் அது பயமுறுத்துவதாக இருக்கலாம். 25 ம் வசனத்தில் பேதுரு நம்மைக் காணாமற் போன ஆட்டுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார், பாவத்தில் வாழும் போது நாம் வழிதப்பித் திரிந்து காணாமற் போகிறோம். நமக்கு எங்கே போவதென்றே தெரிவதில்லை, ஆனால் மனந்திரும்பி பாவ மன்னிப்பைப் பெற்ற பின்னர், நாம் நமது ஆண்டவர் நடத்தும் மந்தையில் வந்து சேர்கிறோம். நீங்கள் எங்கே வழிதவறித் திரிகிறீர்கள்? ஒருவேளை நீங்கள் கர்த்தரின் பாதையில் நடக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் வேற்றுப் பாதையில் பக்க வழிகளில் பாவத்தினால் ஈர்க்கப்பட்டுப் போய்விடுகீர்கள். அந்தப் பாவத்தைக் கர்த்தரிடம் அறிக்கையிடுங்கள். இன்று அதைக் குறித்து மனஸ்தாபப்பட்டு அதை மேற்கொள்ள உதவும்படிக் கர்த்தரிடம் மன்றாடுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church