அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி
தேவனை அடைய முயற்சிப்பது
நீங்கள் எங்கே போகிறீர்கள்?
எந்த நேரத்திலும் நாம் எங்கு செல்கிறோம் என்பது முக்கியமல்ல, இது ஒரு இலக்கை மனதில் வைத்து கொள்ள உதவுகிறது.
எவ்வாறாயினும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் சிக்கல் என்னவென்றால், நாம் செய்ய வேண்டிய வேலைகளினால் துளைக்கப்பட்டு. புகழ் மற்றும் ஒப்புதல் மற்றும் எல்லாவற்றையும் அடைய முயற்சிக்கிறோம். இது போன்ற பல இலக்குகள் நம்மிடம் வருவதால், நம்மில் எத்தனை பேர் திகைத்துப்போய், வாழ்க்கையில் திசையைத் தேடுகிறோம் என்பதில் ஆச்சரியமில்லை.
ஒரு நேரத்தில் ஒரு இலக்கை நோக்கி மட்டுமே செல்ல முடியும் என்றால், அந்த இலக்கு என்னவாக இருக்க வேண்டும்?
எபிரெயர் 12: 1-3 அதை தெளிவுபடுத்துகிறது. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நம் கண்கள் நோக்க நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடும் போது நாம் அவரை மாத்திரம் அல்ல இந்த உலகத்தில் உள்ள எல்லாவத்தையும் வெல்கிறோம்;அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையைச் சகித்து, நமக்கு நித்திய ஜீவனை அளித்தார். நம்முடைய தேவைகளை அனுதினமும் சந்திக்கிறார். நாம் உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை அடையும்படி தேவ பிள்ளைகளாய் நம்மை மாற்றுகிறார்.
ஆனால் நீங்கள் எப்படி கிறிஸ்துவை நோக்கி ஓடுகிறீர்கள்? அவர் செய்ததை நீங்கள் செய்யுங்கள்.
ஜெபம். சில நாட்கள் திரளான கூட்டங்களில் உபதேசித்துவிட்டு இயேசு தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள, அவர் தனது தந்தையை நாடினார். கெத்செமனே தோட்டத்தில் அவர் துன்பத்தில் இருந்தபோது, அவர் தம் பிதாவிடம் கூக்குரலிட்டார். ஜெபம் நம்மை எப்போதும் கிறிஸ்துவுடன் இணைத்து வைக்கிறது.
மக்கள். நாம் மற்றவர்களுடன் அன்பாக இருக்க உருவாக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தில் இருந்த காலம் முழுவதும் மக்களுடன் தன்னைச் இணைத்து கொண்டு, அவர்களுக்கு சவால் விடுத்து, அவர்களின் விசுவாசத்தில் அவர்களை ஊக்குவித்தார். நீங்கள் அதிக நேரம் செலவழிக்கும் நபர்கள் எதை அடைய அதிகம் முயற்சிக்கிறார்களோ நீங்களும் அதை அடைய முயற்சிப்பீர்கள். எனவே, தேவனை அடைய முயற்சிக்கும் நபர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
சேவை. இயேசு ஊழியம் செய்ய பூமிக்கு வந்தார் - அவர் அப்படித்தான் சொன்னார். அவர் பெரிய மற்றும் சிறிய வழிகளில் ஊழியம் செய்தார், அவர் தனது ஊழியத்தை இறுதி கட்டமாக தம்முடைய உயிரை தியாகம் செய்தார். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஊழியம் செய்யும்போது, இயேசு செய்ததைச் செய்து தேவனை அடைய முயற்சிக்கிறோம்.
உபவாசம். இயேசு வனாந்திரத்தில் உள்ள உபவாசம் இருக்கும் போதும், அல்லது மக்கள் தன்னை சுற்றி வந்தாலும், தேவனுடைய குமாரனாகிய இயேசு தற்காலிகமாக உலகத்தின் காரியங்களை விட்டு தேவனை தேடி அடைய நேரம் செலவிடுகிறார். தேவனை அடைய முயற்சிக்க நீங்கள் எப்போதாவது எதை அகற்றலாம்?
வார்த்தை. இயேசு இதைத் முதலில் தொடங்கினார்.யோவான் 1 சொல்வது போல், கிறிஸ்து உண்மையில் தேவனுடைய வார்த்தையாக மனித வடிவத்தில் இருந்தார். கிறிஸ்துவை நாம் அறிந்து கொள்ளக்கூடிய சிறந்த வழிகளில் ஒன்று, வேதாகமத்தில் நமக்காக தேவனுடைய வழிநடத்துதலைப் படிப்பதற்கும், தியானிப்பதற்கும், சிந்திப்பதற்கும் வழக்கமான நேரத்தை செலவிடுவது.
செயல்: மேலே குறிப்பிட்டவற்றில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? நீங்கள் எவ்வாறு தொடங்குவீர்கள்? இதைப் பற்றி நீங்கள் யாரிடம் கூறுவீர்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.
More