அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி
ஒப்புதலினை துரத்திச் அடைய முயற்சித்தல்
ஒருவது ஒப்புதல் என்பது நாம் ஆசைப்பட வேண்டிய ஒன்றுதான். புதிராக உள்ளதா. தொடர்ந்து படியுங்கள். இது எந்தவிதமான பொறியும் இல்லை.
முன்னர் சொன்னவணமாய் ஒருவரது ஒப்புதலை நாம் வாஞ்சிக்க வேண்டும். ஆனால் அந்த ஒருவர்யார் என்பதே நம் வாழ்வு எதை நோக்கி செல்கிறதென்பதை தீர்மானிக்கிறது.
நாம் நம் வாழ்க்கையை ஒப்புதலை நோக்கி செல்வதற்காகவே வடிவமைத்து உள்ளோம். அதாவது ஒரு குழந்தையாக, நமது நற்செயல்களுக்கு பெரியவர்களின் பாராட்டு கிடைக்கும். அவற்றை விரும்பியே நாம் நற்செயல்கள் செய்கிறோம். பள்ளியில், ஆசிரியர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவதற்காக கடுமையாகப் படிக்கிறோம், அல்லது நமது நண்பர்களிடம் ஒப்புதல் பெற முட்டாள் தனமான காரியங்களை செய்கிறோம். பணியாளரை ஈர்க்கும் நம்பிக்கையில் பணியில் நுழைந்தவுடன் நீண்ட நேரம் வேலை செய்கிறோம், அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மரியாதையை பெற பெரிய வீடுகளையும் சிறந்த வாகனங்களையும் வாங்குகிறோம்.
இவ்வாறு செய்து நாம் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதில் வெற்றிபெறும்போது நன்றாக உணர்கிறோம். உலகம் நமக்கு பிரகாசமாகத் தெரிகிறது. கெம்பீரத்துடன் நடக்கிறோம். நம்முடைய சுய மதிப்பு பற்றிய உணர்வு பலப்படுகிறது.
ஆனால்.
நமக்கு தெரியும் எவ்வளவு செய்தாலும் அதில் 'ஆனால்' உண்டென்று.
கடைசியில் ஒருவர் அங்கிகரிக்கவில்லை என்றால் எல்லாம் வீண் போன்று உணர்வீர்கள். இதுவும் உங்களுக்கு தெரியும்.
இதன் அர்த்தம், நீங்கள் தவறான நபர்களிடம் இருந்து அங்கிகாரத்தை தேடுகிறீர்கள் என்பது அல்ல. மக்களிடமிருந்து உங்களுக்குத் தேவையான அங்கீகாரத்தை நீங்கள் ஒருபோதும் பெற முடியாது. ஒப்புதலுக்கான உங்கள் ஆழ்ந்த தேவைக்கு தேவனால் மட்டுமே பதிலளிக்க முடியும். அவருடைய ஒப்புதலினைப் பெற நீங்கள் உங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட வேண்டியதில்லை. நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக ஏற்கும் தருணத்திலேயே, நீங்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுகிறீர்கள். அவ்வளவுதான். நீங்கள் அந்நேரத்திலிருந்து அவருடைய குழந்தை.
இவை அனைத்தையுமே இதற்கு முன்னாக கேட்டிருக்கிறீர்கள் என்றாலும் கூட இன்று இவற்றை சற்று சிந்தித்து பாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து ஒப்புதலும் உங்களிடம் இருக்கிறது - என்றுமே உங்களை அதிருப்தி படுத்தாத மற்றும் உங்கள் நம்பிக்கையை வீண் போக செய்யாத ஒரு ஒப்புதல். நமது பரம பிதாவின் ஒப்புதல்.
கருத்தில் கொள்ளவும்: யாரின் அல்லது எதின் ஒப்புதலுக்காக தற்போது நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள்? அந்த வாஞ்சையை பூர்த்தி செய்ய தேவனின் ஒப்புதலை நீங்கள் அனுமதித்தால் உங்கள் உறவுகள் எவ்வாறு மாறும்?
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.
More