அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி
அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்
அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தலின் யோசனை கி.பி 1800களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட முதல் கேரட் மற்றும் குச்சி உருவகத்திலிருந்து வந்தது. ஒரு கழுதையின் மேல் ஒரு ஓட்டி ஒரு கம்பின் முனையில் கட்டப்பட்டுள்ள கேரட்டினை அந்த கழுதையின் கண் முன் காண்பிப்பதான காட்சியை கற்பனை செய்து பாருங்கள். சவாரி செய்பவர் அந்த குச்சியினைக் காட்டி நீண்ட தூரம் செல்ல கழுதைக்கு தூண்டுதலாக அதனைக் காண்பிப்பார். கழுதையைப் பொறுத்தவரை, வெகுமதிஎப்போதும் ஒரு படி அருகிலேயே இருக்கும்.
நீங்கள் எப்போதாவது அந்த கழுதையைப் போல உணர்ந்திருக்கிறீர்களா?
கி.பி 1800க்கு முன்பே, சாலமோன் ராஜா வாழ்க்கையின் வீணான முயற்சிகளை "காற்றைத் துரத்தும்" அனுபவமே தவிர வேறொன்றுமில்லை என்று புலம்பினார்.
நீங்கள் எப்போதாவது காற்றைப் பிடிக்க முயற்சித்துள்ளீர்களா? அது எப்போதும் ஒரு படி தூரத்தில் தான் இருக்கும்.
“இன்னும் ஒரு படி” பற்றிய தந்திரமான விஷயம் என்னவென்றால்எப்போதுமே இன்னும் ஒரு படி செல்ல வேண்டியதாய் இருக்கும். இந்த வேலையில் இன்னும் சில வருடங்கள், அல்லது நீங்கள் பட்டம் பெற்றவுடன், அல்லது நீங்கள் திருமணம் செய்தவுடன், அல்லது குழந்தைகள் வயதாகும்போது, அல்லது உங்கள் நம்பிக்கை வலுவாக இருக்கும்போது, அல்லது மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் அடுத்த விஷயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது. இன்னும். ஒரு. படி.
வாழ ஒரு சிறந்த வழி இருக்கிறது. செயல்திறன் ஓடும் உடற்பயிற்சி இயந்திரத்திலிருந்து நீங்கள் விலகலாம். பெரிய மற்றும் சிறந்ததை விட வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது.
மத்தேயு 6-ல் இந்த உணர்ச்சிகரமான தேடலைக் குறித்து இயேசு உரையாற்றினார். இன்று நீங்கள் இயேசுவின் வார்த்தைகளைப் படிக்கும்போது, அதை முயற்சிக்கவும். ஆழ்ந்த மூச்சை எடுத்து, உங்கள் கவலைகளை மனதில் காலி செய்யுங்கள். அவர் கற்பிக்கும் போது நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எதில் உட்கார்ந்திருக்கிறீர்கள்? காற்று எப்படி வாசம் வீசுகிறது? அவருடைய குரல் எப்படி ஒலிக்கிறது? வேறு என்ன கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன காண்கிறீர்கள்? அவரது குரலின் சத்தத்தில் உங்கள் மனதின் உள்ளே என்ன திறக்கப்படுகிறது?
மேலே உள்ள முறையுடன் இன்றைய வேதத்தைப் படித்து முடித்த பிறகு, கவனிக்க வேண்டிய இரண்டு கேள்விகள் இங்கே. நமது வேகத்தினை குறைத்துக் கொண்டு, அதிக அளவு இயேசுவோடு இருப்பது நன்றாக இருக்கிறது அல்லவா? என் வாழ்க்கையில் நான் எவ்வாறு இயேசுவுக்கு அதிக இடத்தினைக் ஒதுக்க முடியும்?
ஜெபம்:இன்றைய வேதவசனங்களைப் படித்த பிறகு, உங்கள் நாள் முழுவதும் அவருடைய சத்தத்தினைக் கேட்கும் அளவுக்கு உங்களை வாழ்க்கையை மெதுவாக்கும்படி தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல் பற்றி வீடியோ, கலந்துரையாடல் வழிகாட்டிகள் மற்றும் பலவற்றைக் கண்டறியவும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.
More