அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி

Chasing Carrots

7 ல் 4 நாள்

பூரண சற்குணத்தை அடைய முயற்சிப்பது

“ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” மத்தேயு 5:48

பெரிய விஷயமில்லை, இல்லையா? முழு பிரபஞ்சத்தின் பரிசுத்த, நீதியுள்ள தேவன் பூரண சற்குணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருக்கவேண்டும்.

பெரிய விஷயமில்லை, இல்லையா?

ஆமாம், அதிகம் இல்லை.

நீங்கள் உங்களை பூரண சற்குணராக்கிக் கொள்ள விரும்பினால், நீங்கள் எங்கு தொடங்குவீர்கள்? தேவன் பூரண சற்குணமுள்ளவர், ஏனென்றால் எந்த பாவமும் அல்லது எந்த தவறும் அவரிடம் இல்லை. சரியான உடைகள், சரியான வீடு, சரியான துணை என்பது போன்ற உலகின் பரிபூரண யோசனையைப் பற்றி நாங்கள் இங்கு பேசவில்லை. அதைவிட மேலான காரியத்தை குறித்து பேசுகிறோம். நீங்கள் பாவமற்று இருக்க வேண்டும். பொய் சொல்லவோ, சபிக்கவோ, இல்லை குழந்தைகளை அடிக்கிறவர்களாகவோ ​​அல்லது உண்மைக்கு மாறான காரியங்களில் ஈடுபட கூடாது.

“நிச்சயமாக. என்னால் அதை செய்ய முடியும்." என்று சொல்லி பாருங்கள். நீங்கள் செய்யுங்கள். உங்கள் செயலை நீங்கள் சுத்தமாக செய்யுங்கள். வாகன வேக வரம்பை கடைப்பிடியுங்கள். நீங்கள் ஏழைகளுக்கு கொடுங்கள். அனைத்திலும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இதை நாட்கள் தொடங்கி, பின்னர் வாரங்கள், மாதங்கள், பின்னர் ஆண்டுகள் என பின்பற்றுங்கள்.

ஆனால் நீங்கள் இன்னும் பூரண சற்குணராய் இருக்க மாட்டீர்கள்.

பாருங்கள், நீங்கள் ஏற்கனவே செய்த பாவங்களின் சிறிய காரியம் இருக்கிறது. யாக்கோபு 2:10 சொல்வது போல் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்..

எனவே, நீங்கள் இங்கிருந்து எங்கு செல்கிறீர்கள்?

மத்தேயு 19 இல், ஒரு ஐஸ்வர்யமுள்ள வாலிபன் தன்னை நன்றாக காண்பிக்க நினைத்து அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;. எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்படி இயேசு சொன்னார்.அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.

பூரண சற்குணமாக மாறுவது இரண்டு படி திட்டம் என்று இயேசு அந்த வாலிபனிடம் சொல்லவில்லை. முதலில், கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், இரண்டாவதாக, உங்கள் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்று இயேசு அந்த வாலிபனிடம் சொல்லவில்லை. பூரண சற்குண பாதை ஒரு நபரை, தேவனை பின்பற்றுவதைத் தடுக்கக்கூடியவற்றிலிருந்து விடுபடுவதிலிருந்து தொடங்குகிறது என்று இயேசு சொன்னார்.

ஆனால் பூரண சற்குணமா? யாராவது எப்படி பூரண சற்குணராக இருக்க முடியும்? இது உலகின் நிலைப்படியானதல்ல. அதை விட மிகவும் சிறந்தது. நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற தேர்ந்தெடுக்கும்போது, ​​அவர் உங்கள் பாவங்களையும் குறைகளையும் அவர் சிலுவையில் தம் மரணத்தினால் மறைக்கிறார். தேவன் பார்வையில், நீங்கள் கிறிஸ்துவைப் போலவே எல்லாவற்றிலும் பூரண சற்குணராக இருக்கிறீர்கள்.

ஜெபம்: தேவனே, உங்கள் மகனின் பரிபூரண தியாகத்திற்கு நன்றி. கிறிஸ்துவைப் பின்பற்றுவதைத் தடுக்கும் எதையும் கைவிட எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே, ஆமென்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Chasing Carrots

நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.